***************************************************************************************************   

   Download Baamni  Tamil Font  

எந்த முட்டாளும் துப்பாக்கியால் சுடலாம். ஆனால், ஒரு அறிவாளிக்குத் தான் தெரியும் எப்போது துப்பாக்கி சுடப்பட வேண்டும் என்று……

புலிகளைத் தாக்கி எழுத வேண்டும் என்பது தான் நமது நோக்கமல்ல! அவர்கள்(புலிகள்) விடும் தவறுகளைச் சுட்டிக் காட்டுகிறோம். அவர்களை மக்களின் விடுதலைக்காகப் போராடும் இயக்கமாக மக்களின் உணர்ச்சிகளைப் புரிந்து கொள்ளும் இயக்கமாக மாறச் சொல்கிறோம்!……. ஐந்தறிவுள்ள புலியாக (மிருகமாக)இருக்க வேண்டாம் என்று சொல்கிறோம்!!!

புலிகளின் தலைவர் பிரபாகரன் ஆரம்பத்தியிருந்து ஏதோ ஒரு நோக்கத்திற்காக தொடர்ச்சியாகச் செயற்பட்டு வருவது வரவேற்கத்தக்க அம்சம் தான்…. ஆனால் தமிழ் மக்களின் தலைவராக வரமுயலும் பிரபாகரனிடம் பலவந்தமாக என்றாலும் ஆட்சி அதிகாரத்திற்கு வரவேண்டும் என்ற பதவிஆசை உட்பட இருக்கக்கூடாத பல குணாம்சங்களும் உண்டு. தனக்கெதிராக வரும் எவரையும் அது தமிழ்மக்களாயினும் இவர் தனது பற்களைப் பதித்து விடுவார்.. அவ்விதமான குணாம்சம் கொண்டவர் பிரபாகரன். இவரது ஆளுமையின் கீழ் எவருமே சுதந்திரமாகவும் நிம்மதியாகவும் வாழ முடியாது. ஏனெனில் இவர் எதற்கும் துப்பாக்கியால் பதில் சொல்பவர் தான்….. உதாரணமாக… ஓர் கள்ளக் கடத்தல்காரன் தனது தொழில் ரீதியாக முக்கியமான இடங்களில் தனது சகாக்களையும் உறவினர்களையும் ஊராரையும் வைத்திருப்பான். எதிரணியினரை அழிக்க அரசு அதிகாரிகளுக்குக் கூட தகவல் கொடுத்து அவர்களின் தொழிலை அடியோடு அழிப்பான். எவ்வளவு பணம் கொடுத்தும் தனது வேலைகளைச் செய்விப்பான். அத்துடன் தன்னுடன் இருக்கும் எவரும் செல்வாக்குப் பெறவோ தனியாகப் பிரிந்து சென்று தொழில் ஆரம்பிக்கவோ விடவே மாட்டான். அவ்வித எண்ணங் கொண்டோரை வெட்டிப் புதைத்து விடுவான்…. இதே அடிப்படையில் “கள்ளக் கடத்தல்காரன்” போல் தான் புலிகளின் தலைவர் பிரபாகரன் நிர்வாகம் நடாத்துகிறார்.

புலிகளின் தலைவர் பிரபாகரன் வெறிபிடித்த மனிதன் பயங்கரவாதி என்று மக்கள் வி.புலிகளின் தலைவர் கருணா கூறியிருப்பதைக் குறித்து எனது கருத்து என்னவென்றால்… அது உண்மை தான் என்றாலும் கருணா அதைக் கூறுவதற்குக் காரணம் அவருக்கு பிரபாகரனால் ஏற்பட்ட ஆபத்து.அந்த ஆபத்து நிகழவில்லையென்றால் கருணாவும் பழையபடியே பிரபாகரனின் கொலைக் கலாச்சாரத்தின் ஒரு அங்கமாகவே தொடந்திருப்பார்! இருந்தாலும் ஒரு வெறிக் கூட்டத்திலிருந்து இப்படி சிலராவது வெளியே வந்து பேசுவது காலப்போக்கிலாவது அக்கூட்டத்தின் தீயதன்மையை பலரும் உணர்வதற்கு வழி செய்யும் என்ற ரீதியில் இது வரவேற்கத்தக்கது!! இது குறித்து தமிழக ம.தி.மு.க தலைவர் வைகோ என்ன கூறுவாரோ தெரியவில்லை. ஆனால் பிரபாகரனுக்கு ஏற்பட்டிருக்கிற இந்த இடைஞ்சல் ஒழித்துக் கட்டப்பட்டால் நல்லது என்றே வைகோ போன்ற பிரபாகரன் ஆதரவாளர்கள் நினைப்பார்கள்!!!

புலிகளின் தலைவர் பிரபாகரன் சாதாரண மனிதர்கள் சிந்திப்பது போல் சிந்திப்பதில்லை! ஒரு மனிதன் சிரித்தால் அவன் சந்தோஷமாக இருக்கிறான் என்றும் அழுதால் துக்கமாக இருக்கிறான் என்றும் தெரியும் ஆனால் பிரபாகரன் சிரிக்கும் பொழுது மகிழ்ச்சியாகவும் அழும் போது துக்கமாகவும் இருக்கிறாரா என்பது எவருக்குமே தெரியாது!! பிரபாகரனால் ஒரு ஐனநாயக சூழலில் தனது தலைமையை தக்க வைத்துக் கொள்ள முடியாது.இது தான் உண்மை! எனவே தான் பிரபாகரன் எவ்விதத்திலும் தான் வாழ்வதற்கும் ஆள்வதற்குமான ஒரு தேசத்தை அடைவதையே குறிக்கோளாக் கொண்டுள்ளார்!!!

 புலிகளின் அரசியல் பின்னணியானது அவர்களை கோட்பாடற்ற சமரசத்திற்கு கொண்டு செல்லும் என்பதே உண்மையாகும்.புலிகளைத் தாங்கி நிற்கும் இப்பெரு முதலாளித்துவ தரகு முதலாளித்துவத்திற்கு இன்று ஒரு நாடு தழுவிய சந்தையும் அமைதியான சூழலும் தேவைப்படுகிறது.இதற்காக இவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகளை சமரசத்தீர்வு ஒன்றுக்கு நிர்ப்பந்திப்பார்கள்.விடுதலைப் புலிகளும் தவறான போராட்ட வழிமுறைகளால் இப்போராட்டத்தை அடுத்த கட்டத்திற்கு நகர்த்த முடியாமலும் என்ன செய்வதென்று புரியாமலும் இலங்கை அரசுடன் சமரசம் ஏற்படுத்திக் கொண்டு தங்கள் வர்க்க நலத்தை தக்கவைத்துக் கொள்ள முனைவார்கள்!!

சிங்களவரின் முதல்வன் விஐயனுக்கு தென்னிந்திய தமிழ் ராஐகுமாரியை மனைவியாகக் கொண்டுவர முடியுமென்றால்இஅவனது 700 தோழர்களுக்கு தமிழ்ப் பெண்களையே மணமுடிக்க முடியுமென்றால் இ கண்டியின் கடைசி மன்னனாக ஒரு தமிழருக்கு முடிசூட்ட முடியுமென்றால் இ அந்தத் தமிழ் மன்னனின் ராஐகுமாரிகள் வணங்குவதற்காக பௌத்த ஸ்தலத்திற்கு பக்கத்திலேயே ஓரு இந்துக் கோவில்கூட கட்டப்பட முடியுமானால் ஏன் நாம் இன்று சிங்களவருடன் சகோதரர்களாக வாழ முடியாது???

06.04.2008

__________________________________________________________________________