|













'மஹிந்த
சிந்தனை'யின் பிரகாரம் பொதுமக்களின்
பெறுமதியையும், கௌரவத்தையும் இனங்கண்டு
பட்டதாரிகள் செயற்பட வேண்டும்!- அமைச்சர்
டக்ளஸ் தேவானந்தா
தேசிய சமூக அபிவிருத்தி நிறுவனம் தனது
நீண்டகால வரலாற்றில் மிக முக்கிய இடத்தை
அடைந்துள்ளது என்றும் மேற்படி பட்டப்படிப்பிற்கான
பயிற்சி நெறியினை செயற்படுத்தி வருவதன்
மூலம் அது தெட்டத் தெளிவாகின்றது என்றும்
சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள்
தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் (11.07.2008) தேசிய சமூக
அபிவிருத்தி நிறுவனத்தினால் ஏற்பாடு
செய்யப்பட்டிருந்த பட்டப்படிப்பிற்கான
பயிற்சி நெறியினை முடித்துக் கொண்டவர்களுக்கான
சமூகப் பணிகள் தொடர்பிலான பட்டமளிப்பு
விழாவில் பிரதம அதிதியாகக் கலந்து
கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் டக்ளஸ்
தேவானந்தா அவர்கள் மேற்கண்டவாறு
தெரிவித்துள்ளார்.
இதன்போது மேலும் கருத்துத் தெரிவித்த
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள்,
சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை
அமைச்சின் கீழுள்ள தேசிய சமூக அபிவிருத்தி
நிறுவனமானது இலங்கையில் சமூகப் பணிகள்
தொடர்பிலான கலைமாணி பட்டப் படிப்பினை
வழங்குகின்ற உயர் கல்வித் துறையின்
முன்னோடி நிறுவனமாகும் என்றும் இந்நிறுவனத்தின்
வரலாறு 1952ம் வருடம் வரையிலான காலகட்டத்தைக்
கொண்டது என்றும், 1960களில் மிகச்
சிறிய பரிமாணத்தில் ஆரம்பிக்கப்பட்ட
இலங்கை சமூகப் பணிகள் தொடர்பிலான பாடசாலை
இரண்டு வருடகால டிப்ளோமா பயிற்சி
நெறியை ஆரம்பித்தாகவும் 1992ம் வருடமாகும்போது
இப்பாடசாலை உயர்மட்ட சமூகப் பணிகள்
சார்ந்த கற்கைகளுக்கான வழிகாட்டியாகத்
திகழ்ந்து பாராளுமன்ற கட்டளைச் சட்டத்தின்
மூலம் சமூக அபிவிருத்தி நிறுவனம் என்ற
வகையில் மீள் பெயரினைப் பெற்றதாகவும்
2005ம் வருடம் பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவின்
பரிந்துரையின் பேரில் இலங்கை அரசினால்
இந்நிறுவனம் சமூகப் பணிகள் தொடர்பிலான
பட்டங்களை வழங்குகின்ற ஒரு நிறுவனமாக
உயர் மட்டத்திற்கு வந்துள்ளது என்றும்
தெரிவித்தார்.
மீளவும் இவ்வருட ஆரம்பத்தில் இலங்கையில்
சமூகப் பணிகள் தொடர்பிலான பட்டப்பின்
படிப்பை வழங்குகின்ற ஒரேயொரு நிறுவனமாகவும்
மேற்படி நிறுவனம் அமைந்துள்ளதாக
சுட்டிக் காட்டிய சமூக சேவைகள் மற்றும்
சமூக நலத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா
அவர்கள், இந்நிறுவனம் தனது சமூகப் பங்களிப்பின்
நோக்கங்கள் தொடர்பில் முன்னேறி வருவதுடன்
சமூக அபிவிருத்திக்குரிய மனித வளங்கள்
மனித சக்தி மற்றும் அவற்றின் பெறுமதிகள்
போன்றவற்றின் ஊடாக தன்னை வளர்த்துக்
கொள்வதற்கு உரிய நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும்
சமூக நலன் சார்ந்த பணிகளை அனைத்து சமூகங்களுக்கும்
ஆற்றக் கூடிய, மக்கள் நலன் சார்ந்து
செயற்படக் கூடிய பட்டதாரிகளை இந்நிறுவனம்
உருவாக்கும் என்ற நம்பிக்கை தனக்கிருப்பதாகவும்
தெரிவித்துள்ளார்.
இலங்கை தேசிய சமூக அபிவிருத்தி நிறுவனத்தின்
மூலம் உருவாகும் பட்டதாரிகள் 'மஹிந்த
சிந்தனை'யில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு
மக்களுடன் இணைந்து பணியாற்றுகின்றபோது
மனிதத்துவத்தின் பெறுமதி மற்றும் கௌரவம்
போன்றவற்றை அறிந்து அவற்றைப் பேணுவதை
தங்களது கடமைகளில் ஓர் அங்கமாகக் கருதி
செயற்படுவார்கள் என தான் எதிர்பார்ப்பதாகவும்
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் இங்கு
தெரிவித்துள்ளார்.
மேற்படி வைபவத்தில் பல்கலைக்கழக மானியங்கள்
ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர்
காமினி சமரநாயக்க விசேட
சொற்பொழிவாற்றியதுடன் சமூக சேவைகள் மற்றும்
சமூக நலத்துறை அமைச்சின் செயலாளர்
திருமதி வி. ஜெகராசசிங்கம், மேற்படி
நிறுவனத்தின் ஆலோசகர் பேராசிரியர் ராசநாயகம்
பணிப்பாளர் நாயகம் எம்.ஏ. அலாம்,
பேராசிரியர் காலோ பொன்சேகா, உட்பட பலர்
கலந்து கொண்டனர்.
The National Institute of Social
Development functioning under the
purview of the Ministry of Social
Services & Social Welfare held its
first convocation ceremony to confer
the Bachelor's degree in Social Work
on the first batch of graduands on
11th July 2008 at the BMICH.
The convocation ceremony took place
under the patronage of the Hon.
Douglas Devananda Minister of Social
Services and Social Welfare. Prof.
Gamini Samaranayake, Chairman,
University Grants Commission
participated as the Chief Guest.
Mrs. V. Jegarasasingam, Secretary
Ministry of Social Services and
Social Welfare and Chairperson /
Governing Council of the NISD also
participated.
The ceremony was well organized by
Mr. M.A. Allam, Director General of
the NISD with assistance from the
academic and non academic staff of
the NISD. The ceremony commenced at
9.30 am with the arrival of the Hon.
Minister of Social Services and
Social Welfare. The Hon. Minister in
his address mentioned that the NISD
had reached an important milestone
in its history by conferring the
Bachelor's degree in Social Work for
the first lime in Sri Lanka. While
congratulating the new graduates the
Minister requested them to carry
forward the noble thoughts of the
President as stated in the "Mahinda
Chinthana" in their Social Work
endeavors.
Several educationists,
administrators officers. Social
Service & Media personnel attended
this function which closed with a
reception.
|