|
திருமங்கலத்தில் போலீசார் நடத்திய
நள்ளிரவு சோதனையில், புலிகள் ஆறு பேர்
கைது செய்யப்பட்டனர்.கடந்த சில
தினங்களில் சென்னை உட்பட தமிழகத்தின்
பல்வேறு பகுதிகளில் 10க்கும் மேற்பட்ட
விடுதலைப்புலிகள் போலீசாரால் கைது
செய்யப்பட்டனர்.
சென்னை: போலீசார் நடத்திய நள்ளிரவு
வாகனச் சோதனையில், காரில் இரண்டு
நம்பர் பிளேட்டுகள் வைத்திருந்த இலங்கை
அகதிகள் ஆறு பேர் சென்னை
திருமங்கலத்தில் கைது செய்யப்பட்டனர்.
அவர்கள் அனைவரும் விடுதலைப்புலிகளா என
போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கடந்த சில தினங்களில் சென்னை உட்பட
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில்
10க்கும் மேற்பட்ட விடுதலைப்புலிகள்
போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
குறிப்பாக, கடற்புலிகளின் இரண் டாம்
கட்ட தலைவர் தம்பியண்ணா (எ) டேனியல்
என்பவர் சென்னையில் கைது
செய்யப்பட்டார். இதையடுத்து, தமிழகம்
முழுவதும் புலிகள் பெரிய அளவில்
ஊடுருவி உள்ளனர் என்று பரவலாகப்
பேசப்பட்டு வருகிறது.
இந்நிலையில், அண்ணாநகர் துணை கமிஷனர்
பாண்டியன் தலைமையில், திருமங்கலம் உதவி
கமிஷனர் அசோக்குமார், இன்ஸ்பெக்டர்
செந்தில்குமார் மற்றும் போலீசார்,
நேற்று முன்தினம் நள்ளிரவு திருமங்கலம்
தங்கம் காலனி பகுதியில் வாகனச்
சோதனையில் ஈடுபட்டனர். டாடா சுமோ கார்
ஒன்றை மடக்கி சோதனையிட்டனர். அதில்,
கார் நம்பர் பிளேட்டுகள், ஆணுறைகள்,
மூன்று ஆயிரம் ரூபாய் ரொக்கம் ஆகியவை
பிடிப்பட்டன. காரில் இருந்த ஆறு பேரும்
இலங்கை அகதிகள் என்பதும் தெரிய வந்தது.
போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள்,
புழல் இலங்கை அகதிகள் முகாமைச்
சேர்ந்த செல்வம் (42), பிரதீபன்(25),
அருள்தாஸ்(25), நெற்குன்றம்
திருநீலகண்டநகர் வடகரை முகாமைச்
சேர்ந்த தினேஷ்குமார்(20),
சால்ஸ்(25), வசந்தம் காலனியைச்
சேர்ந்த தனுஷ்(19) என்பதும் தெரிய
வந்தது.
அவர்கள் அனைவரும் பூந்தமல்லி பகுதியில்
பெண்களிடம் "உல்லாசமாக' இருப்பதற்காக
காரில் செல்வ தாகவும் கூறினர். அவர்களை
கைது செய்த போலீசார், "கியூ' பிரிவு
போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். "கியூ'
பிரிவு போலீசார் அவர்களிடம் நடத்திய
விசாரணையில், அவர் கள் பாஸ்போர்ட்
உட்பட அனைத்து ஆவணங்களும் சரியாக
வைத்திருப் பதையும், அவர்கள் மீது
எவ்வித வழக்கும் இல்லை என்பதை உறுதிச்
செய்தனர். மேலும், அவர்கள் விடுதலைப்
புலிகளோ, அவர்களது ஆதரவாளர்களோ இல்லை
என்பது போலீசாருக்கு தெரியவந்தது.
இதையடுத்து அவர்கள் அனைவரையும்
போலீசார் விடுதலை செய்தனர்.
விமான நிலையத்தில் பரபரப்பு போலி
பாஸ்போர்ட் மூலம் கனடா செல்ல முயற்சி
செய்த இலங்கை வாலிபருக்கும், புலிகள்
இயக்கத்திற்கும் தொடர்பு உள்ளதா என்பது
குறித்து போலீசார் தீவிர விசாரணை
மேற்கொண்டுள்ளனர். இலங்கை,
யாழ்பாணத்தைச் சேர்ந்தவர் ராஜகிரி.
இவரது மகன் குமரேசன் (29). கடந்த
ஓராண்டுக்கு முன்னர் குமரேசன் அகதியாக
தமிழகம் வந்தார். திருச்சி,
அண்ணாநகரில் தங்கினார். கனடா செல்ல
விரும்பிய அவர், அதற்காக போலி ஏஜண்ட்
ஒருவரை நாடினார். ஏஜண்டுக்கு ஐந்து
லட்சம் ரூபாய் கொடுத்தார். இதைத்
தொடர்ந்து குமரேசனை ராஜேஷ் என்று பெயர்
மாற்றி தமிழகத்தைச் சேர்ந்தவர் போலவும்,
திருச்சி முகவரியில் வசிப்பது போலவும்
ஆவணங்கள் தயார் செய்து, இந்தியன்
பாஸ்போர்ட் ஒன்றை ஜென் பெற்றுத்
தந்தார். இந்த போலி பாஸ்போர்ட்டுடன்
நேற்று முன்தினம் இரவு சென்னையில்
இருந்து டொராண்டோ செல் லும் ஜெட்
ஏர்-வேஸ் மூலம் கனடா செல்வதற்காக
குமரேசன் விமான நிலையத்திற்கு வந்தார்.
அவரிடம் வழக்கமான குடியுரிமைச்
சோதனைகள் நடத்தப்பட்டன. அதிகாரிகள்
கேட்ட கேள்விகளுக்கு குமரேசன் இலங்கை
தமிழில் பதில் அளித்தார். தமிழகத்தைச்
சேர்ந்த ஒருவர் எப் படி இலங்கை தமிழ்
பேச முடியும் என்று சந்தேகமடைந்த
குடியுரிமை அதிகாரிகள், அவரின் பயணத்தை
ரத்து செய்து விடிய விடிய விசாரணை
நடத்தினர். பிடிபட்டவர் இலங்கை தமிழர்
என்பதால் சுதாரித்துக் கொண்ட விமான
நிலைய உளவுப் பிரிவு அதிகாரிகளும்
குமரேசனிடம் விசாரணை மேற்கொண்டனர்.
தொடர் விசாரணையில், தனது உண்மையான
பெயர் குமரேசன் என் றும், பாஸ்போர்ட்
பெறுவதற்காக ராஜேஷ் என்று பெயர்
மாற்றிக் கொண்டதாகவும் அவர் ஒப்புதல்
அளித்தார். குமரேசனை விமான நிலைய
போலீசாரிடம் அதிகாரிகள் ஒப்படைத்தனர்.
தமிழகத்திற்கு அகதியாக வந்த ஒருவருக்கு
எப்படி லட்சக்கணக்கில் பணம் வந்தது,
திருச்சியில் அவர் தங்கியிருந்த
ஓராண்டு காலத் தில் அவர் யார், யாரை
சந்தித்தார் என் பது போன்ற தகவல்களை
உளவுத் துறை போலீசார் திரட்டி
வருகின்றனர். குமரேசனுக்கும் புலிகள்
இயக்கத் திற்கும் தொடர்பு உள்ளதா என்ற
கோணத்திலும் விசாரணை நடந்து வருகிறது.


 |