Raeythjpfs;fz;fSf;F ehq;fs; JNuhfpfs;

   nghJeythjpfs;fz;fSf;F ehq;fs; jpahfpfs;  

 nrhd;dtu; ajhu;j;jthjp

      ***************************************************************************************************   

   Download Baamni  Tamil Font   Sithiram Font

 
    14. October 2007

வீரப்பன் 'டிவி சீரியலை' எதிர்த்து முத்துலட்சுமி வழக்கு!!  

சந்தனக் கடத்தல் வீரப்பனின் வாழ்க்கை வரலாற்றுத் தொடரை மக்கள் டிவியில் ஒளிபரப்ப விதிக்கப்பட்டிருந்த தடையை விலக்கி சென்னை சிட்டி சிவில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்ய முடிவெடுத்துள்ளார்.
மக்கள் டிவியில், சந்தனக்காடு என்ற பெயரில் வீரப்பனின் வாழ்க்கை வரலாறு டிவி தொடராக தயாரிக்கப்பட்டுள்ளது. இந்தத் தொடரை ஒளிபரப்ப தடை விதிக்க வேண்டும் என்று கோரி சென்னை சிட்டி சிவில் நீதிமன்றத்தில் முத்துலட்சுமி வழக்கு போட்டார். இதை ஏற்று இடைக்காலத் தடை விதிக்கப்பட்டது. தற்போது இந்த இடைக்காலத் தடை விலக்கப்பட்டு விட்டது.

இதையடுத்து மக்கள் டிவியில் வருகிற 15ம் தேதி முதல் இந்தத் தொடர் ஒளிபரப்பாகும் என்று தொடரின் இயக்குநர் கெளதமன் கூறியுள்ளார். முத்துலட்சுமியின் ஒத்துழைப்புடன் இடைக்காலத் தடை நீக்கப்பட்டதாகவும் அவர் கூறியிருந்தார்.

இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்ய முத்துலட்சுமி திட்டமிட்டுள்ளார். இத்தகவலை அவரே வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களுக்கு இன்று அவர் பேட்டி அளித்தார். கண்களிலிருந்து தாரை தாரையாக கண்ணீர் கொட்டியபடி பெரும் சோகத்துடன் பேசினார் முத்துலட்சுமி.

அவர் கூறுகையில், எனது இரு மகள்களின் நலன் கருதி இந்தத் தொடரை ஒளிபரப்ப வேண்டாம் என்று மக்கள் டிவி நிர்வாகத்தை நான் கேட்டுக் கொள்கிறேன். அவர்கள் இருவரும் பத்தாவது மற்றும் 11ம் வகுப்பு படித்துக் கொண்டுள்ளனர். இந்தத் தொடரால் அவர்களின் வாழ்க்கை பாதிக்கப்படும்.

எனது கணவரை மோசமான நபராக இந்த தொடரில் சித்தரித்துள்ளனர். இதனால் எனது மகள்களை, அவர்களுடன் படிக்கும் சக மாணவிகள் கேலி செய்யும் நிலை ஏற்படும். இதனால் அவர்கள் மனதளவில் பாதிக்கப்படுவார்கள். அவர்களால் படிப்பில் கவனம் செலுத்த முடியாமல் போகும்.

தொடரின் இயக்குநர் கெளதமன், பாமக தலைவர் ஜி.கே.மணியின் மகன் தமிழ்க்குமரனுடன் வந்து என்னிடம் இந்த்த தொடரை இயக்க அனுமதி கோரினார். அதற்கு நான் எனது இரு மகள்களின் படிப்பும் முடிந்த பிறகு தருவதாக கூறியிருந்தேன்.

ஆனால் நான் வீரப்பன் குறித்து அவரிடம் பேசியதை எனக்கே தெரியாமல், ரகசியமாக மைக்ரோபோன் மூலம் பதிவு செய்து என்னை மோசடி செய்து விட்டார் கெளதமன்.

எனது மகள்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு, நான் எழுதி வந்த வீரப்பனின் வாழ்க்கை வரலாற்று நூலைக் கூட பாதியில் நிறுத்தி வைத்துள்ளேன். அந்த புத்தகம் தற்போது 650 பக்கங்களைக் கொண்டதாக வந்துள்ளது. ஆனாலும் எனது மகள்களின் நலன்தான் முக்கியம் என்பதால் நூல் எழுதுவதை நிறுத்தி விட்டேன்.

வீரப்பன் குடும்பத்தினர் மீது தமிழகம் மற்றும் கர்நாடகத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு வீரப்பன் தரப்பில் சாட்சியாக இந்த நூல் விளங்கும். எனது வக்கீலின் ஆலோசனையின்பேரில்தான் தற்போது எழுதுவதை நிறுத்தி வைத்துள்ளேன்.

என்னிடம் பேசிய கெளதமன் எனக்கு வீரப்பனை நன்றாகப் பிடிக்கும் என்று அவரைப் பற்றி புகழ்ந்து பேசினார். அப்போது என்னுடைய திருமண வாழ்க்கை மற்றும் பல்வேறு தனிப்பட்ட விஷயங்கள் பற்றி அக்கறையுடன் கேட்டார். நான் அவரை நம்பி பல விஷயங்களை சொன்னேன்.

அவற்றை அவர் சட்டைக்குள் மறைத்து வைத்திருந்த மைக்ரோபோன் மூலம் பதிவு செய்துள்ளார். அதை வைத்து இப்போது தொடரை தயாரித்துள்ளனர்.

எனது கணவர் 30 ஆண்டுகள் காட்டிலேயே வனவாசமாக இருந்தார். அவரை போலீசார் கொன்ற பிறகும் என்னை நிம்மதியாக இருக்க விட வில்லை. எனது மகள்கள் இருவரும் சென்னையில் தங்கி படிக்கிறார்கள். அவர்கள் படிக்கும் பள்ளியில் நடக்கும் விழாக்களில் கூட என்னை அனுமதிப்பதில்லை.

இதனால் என் பிள்ளைகளுக்கு எல்லோரையும் போல் நம்மால் அம்மாவைப் பார்க்க முடியவில்லையே என்று ஏக்கத்துடன் உள்ளனர்.

என் மகள்கள் கல்லூரி அளவுக்கு உயர்ந்த பிறகு எங்கள் ஒப்புதலுடன் வெளியிடுங்கள் என்று தான் நான் கூறி இருக்கிறேன்.

சந்தனக்காடு தொடரை எதிர்த்து இந்த வாரம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்யவுள்ளேன் என்றார் முத்துலட்சுமி

___________________________________________________________________________________

     10. October 2007

 ரஜினிகாந்த் சிறப்பான ஏற்பாடு தனுஷ் - ஐஸ்வர்யா தம்பதியினரின் மகன் யாத்ராவின் முதலாமாண்டு பிறந்த நாள் விழா

தனுஷ் ஐஸ்வர்யா தம்பதியினரின் மகன் யாத்ராவின் முதலாமாண்டு பிறந்த நாள் விழாவையொட்டி தாத்தா ரஜினிகாந்த் சிறப்பான ஏற்பாடுகளைச் செய்து வருகிறாராம். ஸ்டார் ஹோட்டலில் உற்றார் உறவினர் நண்பர்கள் புடை சூழ பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடவுள்ளனராம் நடிகர் தனுஷ், சூப்பர் ஸ்டார் ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா தம்பதியினருக்கு யாத்ரா என்ற மகன் உள்ளார். இவருக்கு நாளையுடன் ஒரு வயது முடிவடைகிறது.

இதையொட்டி பேரன் யாத்ராவின் முதலாவது ஆண்டு பிறந்த நாளை சிறப்பாகக் கொண்டாட ஏற்பாடுகளைச் செய்துள்ளார் ரஜினிகாந்த். ரஜினிக்கு யாத்ரா மீது மிகுந்த பிரியம். ஷூட்டிங் இல்லாத நேரத்தில் யாத்ராவுடன்தான் அதிக நேரம் செலவிடுவார் ரஜினி.

இதனால் தனது பாசத்துக்குரிய பேரனின் முதலாம் பிறந்த நாளை கிரேட் ஆக கொண்டாடத் தீர்மானித்த ரஜினி, இதற்காக ஸ்டார் ஹோட்டலில் கிராண்ட் விருந்துக்கும், கேக் வெட்டும் நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்துள்ளார்.

உற்றார், உறவினர்கள், நெருங்கிய நண்பர்களுக்கு இதற்காக அழைப்பிதழ் கொடுக்கப்பட்டு வருகிறதாம். ரஜினி குடும்பம் மற்றும் தனுஷ் குடும்பத்தினர் இணைந்து பிறந்த நாள் ஏற்பாடுகளைக் கவனித்து வருகின்றனர்.

மகன் பிறந்த நாளன்று படப்பிடிப்புக்கு விடுமுறை விட்டுள்ளாராம் தனுஷ். அன்று முழுவதும் மகனுடன்தான் இருக்கப் போகிறாராம்.ஹேப்பி பர்த் டே டூ யாத்ரா
!

___________________________________________________________________________________

    06. October 2007

இசை பல்கலைக்கழகம்: இளையராஜா கோரிக்கைக்கு 

முதல்வர் இசைவு

சாரப்பள்ளம் சாமுண்டி1960களில் கலைஞர் எழுதிய இந்த கதை இப்போது திரைப்படமாகிறது உளியின் ஓசைஎன்னும் பெயரிடபட்டிருக்கும் இப்படத்தில் நாயகனாக வினித் நாயகிகளாக கீர்த்தி சாவ்லா அக்ஷ்யா நடிக்க இளவேனில் இயக்குகிறார்.

இளையராஜா இசை பீ கண்ணன் ஒளிப்பதிவு என தொழில்நுட்ப ஜாம்பவான்களின் கைவண்ணத்தில் உருவாகப்போகும் உளியின் ஓசையை ஜெ நந்தினி ஆர்ட்ஸ் சார்பில் ஆறுமுகனேரி எஸ். பி.முருகேசன் தயாரிக்கிறார்.

படத்தின் தொடக்கவிழா சென்னை பிரசாத் ஸ்டுடியோவில் இன்று காலை நடந்தது. கிளாப்போர்டை திறந்துவைத்து படத்தை தொடங்கி வைத்தார் முதல்வர்.

விவேக் வடிவேலு பாக்யராஜ் இராம. நாராயணன் ஏ.வி.எம். சரவணன் இளையராஜா ஆகியோர் உரையாற்றி பல்வேறு கருத்துக்களை தெரிவித்தனர்.

பெரும்பாலும் விழாக்களில் கலந்துகொள்வதை தவிர்ப்பவர் இளையராஜா அப்படி கலந்துகொண்டாலும் அசந்தும்கூட பேசமாட்டார். தனது இந்த இரண்டு பழக்கத்துக்கும் இந்த விழாவில் விதிவிலக்கு அளித்தார் இளையராஜா. பேசவும் செய்தார்; கருணாநிதி எழுதிய ஒரு திரைப்பட பாடலை பாடியும் காட்டினார்.

"பல ஆண்டுகளுக்கு முன்பேசாரப்பள்ளம் சாமுண்டி' கதையை படித்துவிட்டு அதில் லயித்தவன் நான். இந்த கதையை திரைப்படமாக எடுக்கலாமே என்று அப்போதே கலைஞரிடம் சொன்னேன். எனது அந்த ஆசை இப்போதுதான் நிறைவேறியுள்ளது.

படத்தின் அழைப்பிதழில் கலைஞர் தனது கையில் உளியை பிடித்து செதுக்குவதுபோல் உள்ளது. தானே கல்லாகவும் தானே உளியாகவும் இருந்து தன்னைத்தானே செதுக்கிக் கொள்ளும் சிற்பிதான் கலைஞர். அவரிடம் நான் ஒரு கோரிக்கை வைக்கலாம் என்று நினைக்கிறேன்" என்ற இளையராஜா "உலக அரங்கமே வியந்து பார்க்கக்கூடிய, அனைவரும் பயன்பெறக்கூடிய வகையில் இசை பல்கலைக்கழகம் ஒன்றை அமைக்கவேண்டும்" என்றார்.

அவரைத்தொடர்ந்து சிறப்புரையாற்றிய முதல்வர் நம்முடைய வரலாற்றுச் சின்னங்கள் அழிந்துபோவதற்கு காரணம் சரியான பதிவுகள் இல்லாததுதான். பல ஆண்டுகளுக்கு முன்பு தஞ்சை பெரிய கோவிலுக்கு பார்வையிட சென்றேன். அப்போது அங்கு இருக்கவேண்டிய 128 கர்ணங்களுக்கு பதிலாக 81 கர்ணங்களே இருந்தது. இது எதனால் என்று நான் யோசித்த விஷயமே சாரப்பள்ளம் சாமுண்டி கதையாக உருவாகியது சிற்பக்கலையை பின்னணியாகக்கொண்ட படமாக இது இருக்கும்.

இசை பல்கலைக்கழகம் அமைக்கவேண்டும் என்று இளையராஜா இங்கு ஒரு கோரி்க்கை வைத்தார் அதற்கு நான் 'இசை'வு செய்வேன் என்று உறுதியளிக்கிறேன்" என்றார்.

___________________________________________________________________________________

__________________________________________________________________________