வீணை
என்னடா?வெற்றிலை என்னடா?..அவசியமான நேரத்திலே!...யாழ்
வீதிகள் எங்கும் ஒலிக்கும் ஈ.பி.டி.பி
யின் தத்துவப் பாடல்.!
தேர்தல் பிரச்சாரம் சூடு
பிடித்துள்ளது!யாழ் வீதிகள் எங்கும்
ஒலி பெருக்கி பொருத்திய வாகனங்களில்
ஈ.பி.டி.பி யினர் தமது பிரச்சாரங்களை
முடக்கி விட்டுள்ளனர்.
இதே வேளை சம்பந்தன் குழு
சிவாஜிலிங்கம் குழு கஜெந்திரகுமார்
குழு என பல குழுக்களும் சிறு சிறு பிரச்சாரங்களில்
ஈடுபட்டு வருகின்றனர்.புலிகளால்
சிபார்சு செய்யப்பட்டவர்களை புலிகளின்
அழிவிற்கு பின்னர் தமிழ் தேசிய கூட்டமைப்பினர்
தமது வேட்பாளர் பட்டியலில் இருந்து
நீக்கியமை குறித்து அவர்களது இரட்டை
வேடம் கலைந்தது என்று புலிகளின் அனுதாபிகள்
விசனம் அடைந்துள்ளனர்.
இது தவிர ஈ.பி.ஆர்.எல்.எவ் பத்மநாபா
அணி ஐக்கிய தேசிய கட்சி சரத்பொன்சேகா
அணி தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் மக்கள்
விடுதலை முன்னணி என பல்வேறு கட்சிகளும்
சுயேட்சைக்குழுக்களுமாக 27.அணியினர்
தேர்தலில் களமிறங்கியுள்ளன.
இதில் வேடிக்கை என்னவென்றால் யாழ் பக்கமே
தலை வைத்தும் படுக்காத முகங்கள் எல்லாம்
வாக்கு கேட்டு வந்திருப்பதாக
தெரிகிறது.இது தவிர கடந்த தேர்தலின்
போது வாக்குகளை மட்டும்
திருடிக்கொண்டு ஓடிப்போன தமிழ் தேசிய
கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள்
மீண்டும் தேர்தலுக்காக மட்டும் வந்து
நிற்கிறார்கள்.
யாழ் மக்கள் பல்வேறு வகையிலும் அவலப்பபட்ட
பொழுதுகளில் ஏன் என்று கூட வந்து எட்டிப்பார்க்காத
தமிழ் தேசிய கூட்டமைப்பினர் இப்போது
கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாக
வாக்கெடுக்க மட்டும் சிறு சிறு குழுக்களாக
பிரிந்து வந்து நிற்கிறார்கள்…
இந்நிலையில் ஈ.பி.டி.பி யினர் ஈழத்து
இளைய சௌந்தரராஐன் குரலில் வெளியிட்டு
வீதிகள் எங்கும் ஒலிக்க
விட்டிருக்கும் இந்த பாடல் மிகவும்
பொருத்தமானது என பரவலாக பேசப்படுகின்றது.
பழைய கண்ணதாசன் பாடலை மாற்றி அமைத்திருக்கிறார்கள்…
வீணை என்னடா? வெற்றிலை என்னடா?..
அவசியமான நேரத்திலே
சேவை செய்வதும் உரிமை மீட்பதும்
எந்த வழி என்று எண்ணடா!
…………..
மக்கள் மத்தியில் நின்று உழைப்பவர்
டக்ளஸ் தேவா தானடா!
மற்ற தலைவர் தம்மை மக்கள் தலைவர்கள்
என்று சொல்வது பொய்யடா?
என்ன அர்த்தம் சொல்லடா?..
சரணம் 1
யுத்தம் மக்களை நட்டத்ததெருவிலே
நிறுத்தும் என்றவர் யாரடா?... அந்த
யுத்தம் வேண்டும் என்று நியாயம் சொன்னவர்கள்
ஓடிப்போனது ஏனடா?...
ஓடிப்போனது ஏனடா?..
வாக்கு போட்ட மக்கள் வாடி
நிற்கையிலும்
வருந்தவில்லையே அவர்களடா!
வாடி நின்ற மக்கள் தேவை அறிந்து
நின்று
சோறு போட்டவர் யாரடா?
சேவை செய்தவர் யாரடா?...
சரணம்2
தேர்தல் காலத்தில் கூட்டம் கூட்டமாய்
வந்து சேர்கிறார் பாரடா!
துயர் சூழ்ந்த வேளையில் தவித்த மக்களை
மதித்து வந்தவர் யாரடா?
துயர் துடைத்தவர் யாரடா!
பதவி மீதுதான் பக்தி என்றதும்
மக்கள் நேசமே ஏதடா?...
பதவி கிடைத்ததும் அடுத்த நாளிலே
மண்ணை விட்டு ஓடியது யாரடா!
மக்களை மறந்தவர்கள் யாரடா?..
சரணம் 3
மக்கள் பணியாற்றி மனதை தொட்டாற்றி
மகிழ்ச்சி கொடுத்தவர் யாரடா?
மண்ணை நேசித்து மக்கள் தொண்டாற்றி
மனதை தொட்டவர் யாரடா?...
மனதை தொட்டவர் யாரடா?....
உணவு முதற்கொண்டு உரிமை வரைக்குமே
பெற்றுக்கொடுப்பவர் யாரடா?
உறவுக்கரம் கொடுத்து உரிமை குரல்
கொடுத்து
நடத்தி முடிப்பார் அவரடா
நாளை நடக்கும் அது பாரடா!
பாடலை கண்டு பிடித்திருப்பீர்கள்!
அண்ணன் என்னடா?... தம்பி என்னடா?....
அவசரமான உலகத்திலோ!