<%@ Language=JavaScript %> Welcome.To./\.www.engaltheaasam.com Welcome. !

 

 செய்தி் புதுப்பிக்கப்பட்ட நாள்.09.மார்ச்,2010

* தமிழ் சினிம*

*ஜோ‌திட‌ வார பலன்*

சுரேஸ் தோழருக்கு திரும்பும் திசையெல்லாம் மக்கள் எதிர்ப்பு!..பழைய கரந்தடி வித்தைகளால் வந்த வினையாகும்!!....

சம்பந்தன் குழுவின் உறுப்பினரான சுரேஸ் பிரேமச்சந்திரன் அவர்களுக்கு யாழ் குடாநாட்டில் பிரச்சாரங்களுக்காக செல்லும் இடங்களில் எல்லாம் மக்கள் தமது எதிர்ப்பினை காட்டி வரும் நிகழ்வுகள் பரவலாக நடந்து வருகின்றன.இதனால் சுரேஸ் பிரேமச்சந்திரன் அவர்கள் ஆழ்ந்த கவலையில் இருப்பதாக அறியப்படுகின்றது.கடந்த வாரம் வசாவிளான் குட்டியப்புலம் பகுதிக்கு சென்றிருந்த சுரேஸ் பிரேமச்சந்திரன் அவர்களை பார்த்து அங்கு நின்றிருந்த கிராம மக்கள் இவ்வளவு காலமாக எங்கு சென்றிருந்தீர்கள்.இப்போது மட்டும் ஏன் வருகின்றீர்கள் என்று கேள்வி கேட்டதோடு நடக்கவிருந்த பிரச்சாரக்கூட்டத்திற்கும் மக்கள் ஒத்துழைப்பு வழங்கியிருக்கவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது.இதனால் மனவருத்தத்தோடு சுரேஸ் பிரேமச்சந்திரன் அவர்கள் திரும்பியிருந்தார்.

இதே வேளை சில தினங்களுக்கு முன்னர் வல்வெட்டித்துறை பகுதிக்கு சென்றிருந்த சுரேஸ் பிரேமச்சந்திரன் அவர்களை வல்வெட்டித்துறை வாழ் மக்களில் சிலர் திட்டித்தீர்த்ததோடு இங்கு நிற்க வேண்டாம் போய் விடுங்கள் என்றும் திருப்பி அனுப்பியதாக அறியப்படுகின்றது.

இதன் பின்னணியில் சிவாஜிலிங்கம் குழுவினர் இருந்திருக்கலாம் என ஊகிக்கப்படுகின்றது.

ஆரம்பங்களில் புலிகளுக்கு எதிராக கண் மூடித்தனமாக செயற்பட்ட சுரேஸ் பின்னாளில் கண்களை மூடிக்கொண்டு புலிகளை ஆதரித்தது குறித்து பல தரப்பட்ட விமர்சனர்கள் அவர் மீது இருக்கின்ற நிலையில் புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்களின் இறப்பிற்கு பின்னர் தனது ஆதரவளர்களுக்கு வேறு கதைகளையும் அவிட்டு விடுகின்றார் சுரேஸ் பிரேமச்சந்திரன் அவர்கள்.

டக்ளஸ் கருணா பொன்றவர்கள் புலிகளை வெளியில் இருந்து எதிர்த்தார்கள்.நான் உள்ளிருந்தே புலிகளை அழித்து விட்டேன் என்றாராம்.இதன் அர்த்தம் புரிய முடியாதுள்ளதாக அவரது ஆதரவாளர்கள் இருக்கின்றனர்.சுரேஸ் தோழருக்கு எதிராக கிளம்பியிருக்கும் எதிர்ப்புக்கள் பழைய கரந்தடி வித்தைகளை மக்கள் இப்போழுதும் மனதில் வைத்திருப்தால் வந்த வினையாக்கும்.

<<முன்னைய பதிவுகள்>>

டக்ளஸ் தேவானந்தா அவர்களின் மக்கள் பணிகள்(படங்கள் இணைப்பு)

தோழர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அன்று ஆற்றிய பாராளுமன்ற உரையின் ஒளி வடிவம்!!

தமிழ் தலைவர்டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அன்றேசொல்லிவைத்த சிந்தனை இது!...[மேலும்]

 

 
  Last update: 20-06-2008. Desigin and Copyright    Welcome. to Visit.Engaltheaasam.com ..!