<%@ Language=JavaScript %> Welcome.To./\.www.engaltheaasam.com Welcome. !

 

 செய்தி் புதுப்பிக்கப்பட்ட நாள்.02.மார்ச்,2010

* தமிழ் சினிம*

*ஜோ‌திட‌ வார பலன்*

இதயவீணையின் இன்றைய முக்கிய செய்திகள்!!

வணக்கம்! இதயவீணையின் செய்திகள்!! 02.03.2010
செய்தியாசிரியர்: ஷோபா
வாசித்தளிப்பவர்: சுபாஷினி
முதலில் தலைப்புச் செய்திகள்!!!




.நாட்டில் வறுமை கோட்டின் கீழ் வாழும் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

.பாராளுமன்றத் தேர்தலில் பொதுஜன ஐக்கிய முன்னணியுடன் இணைந்து போட்டியிடும் ஈ.பி.டி.பி.க்குத் தமது ஆதரவினை வழங்கவுள்ளதாக மக்கள் மறுமலர்ச்சி முன்னணி தெரிவித்துள்ளது.

.சீன அரசாங்கம் 50.மில்லியன் ரூபா பெறுமதியான இயந்திரங்கள் கூடாரங்கள் உபகரணங்களை வடக்கில் கண்ணிவெடியகற்றுதல் மீள்குடியேற்ற நடவடிக்கைகளுக்காக வழங்கியுள்ளது.

.வெளிநாட்டு தலையீடுகளுக்கு இடமளிக்கப்படமாட்டாது என அரசாங்க பாதுகாப்பு பேச்சாளரும் அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.




நாட்டில் வறுமை கோட்டின் கீழ் வாழும் மக்களின் வாழ்வாதாரத்தை பிரதேச செயலகங்கள் மற்றும் பிரதேச சபைகள் ஊடாக மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

பெல்மதுல்ல ரஜமஹா விகாரையில் நடைபெற்ற அறநெறிச் சந்திப்பில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இதனைத் தெரிவித்துள்ளார்.ஜனாதிபதி அங்கு தொடர்ந்தும் உரை நிகழ்த்தும் போது அரசியல்வாதிகள் எப்போதும் முன்னுதாரணம் மிக்கவர்களாகத் திகழ வேண்டும் எனவும் அவர்கள் மக்களின் வாழ்க்கை தர மேம்பாட்டுக்காகப் பாடுபட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

வறுமைக் கோட்டின் கீழ் வாழும் மக்கள் உள்ள பிரதேசங்கள் ஏற்கனவே அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாகவும் இம்மக்களின் வாழ்வாதாரத்தை பிரதேச செயலகங்கள் மற்றும் பிரதேச சபைகள் ஊடாக மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்துள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கடந்த ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் வேறுவிதமாக அமைந்திருந்தால் நாட்டின் நிலைமை எவ்வாறு அமைந்திருக்கும் என்பதை விபரிக்கவே முடியாது எனவும் தாம் ஜனநாயகத்தையும் பாதுகாப்பு நிறைந்த சமூகத்தைக் கட்டியெழுப்புவதற்காகவும் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாகவும் தம்மிடம் வஞ்சம் தீர்க்கும் அரசியல் கிடையாது எனவும் தெரிவித்துள்ளார்.

மதுவுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வேலைத் திட்டத்தை முன்னெடுத்துள்ள அதேநேரம் சுமார் 30.வருடங்கள் நாட்டிற்குப் பெரும் தலை வலியாக இருந்த பயங்கரவாதத்தைக் குறுகிய காலத்தில் ஒழித்துக்கட்டி துண்டாடப்பட்டிருந்த நாட்டை மீளவும் ஒன்றுபடுத்தியுள்ளதாகத் தெரிவித்ததுடன் பாரிய அபிவிருத்தி வேலைத் திட்டங்கள் தமது பதவிக் காலத்தில் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாகவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

வீதி அபிவிருத்தி மின் உற்பத்தித் திட்டங்கள் துறைமுகங்களின் அபிவிருத்தி எனப் பல்வேறு வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற போதிலும் நாட்டில் என்ன தான் அபிவிருத்தி வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டாலும் அவற்றின் மூலம் மக்கள் மேம்பாடு அடையாவிட்டால் அந்த அபிவிருத்திகளால் எத்தகைய பயனுமே இல்லை எனவும் மக்களின் உள்ளங்கள் மேம்பட வேண்டும் என்பதுடன் அது அவர்களைச் சிறந்த நற்பண்பாளர்களாக மேம்படச் செய்யும் அதேவேளை மக்களின் வாழ்க்கைத் தரமும் வளர்ச்சியடையும் எனவும் இவை எதிர்கால சமுதாயத்திற்குச் சுபீட்சத்தைப் பெற்றுக் கொடுக்கும் எனவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேலும் தெரிவித்துள்ளார்.

------------------

எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் பொதுஜன ஐக்கிய முன்னணியுடன் இணைந்து போட்டியிடும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சிக்குத் தமது ஆதரவினை வழங்கவுள்ளதாக மக்கள் மறுமலர்ச்சி முன்னணி தெரிவித்துள்ளது.

மக்கள் மறுமலர்ச்சி முன்னணியின் அமைப்பாளர் எம்.என்.எம்.முகீன் தவிசாளர் எம்.ஏ.வைஷர் மற்றும் மௌலவி எம்.சுபியான் ஆகியோர் இணைந்து நடாத்திய செய்தியாளர் மாநாட்டின் போது எதிர்வரும் ஏப்ரல் மாதம் 8ம் திகதி நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் யாழ்.மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் இணைந்து போட்டியிடும் ஈ.பி.டி.பி.க்கு ஆதரவு வழங்குவதற்குத் தீர்மானித்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கரங்களைப் பலப்படுத்தும் பொருட்டே தமது நடவடிக்கைகள் அமையும் எனவும் எனவே தேர்தலில் வெற்றி பெற்று யாழ்.மாவட்ட முஸ்லிம் சமூகத்தின் அபிவிருத்திப் பணிகளுக்கு ஜனாதிபதியும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் உதவிகளை வழங்க வேண்டும் எனவும் மக்கள் மறுமலர்ச்சி முன்னணியின் முக்கியஸ்தர்கள் தெரிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கதாகும்.

-----------------

சீன அரசாங்கம் 50.மில்லியன் ரூபா பெறுமதியான இயந்திரங்கள் கூடாரங்கள் மற்றும் உபகரணங்களை வடக்கில் கண்ணிவெடியகற்றுதல் மற்றும் மீள்குடியேற்ற நடவடிக்கைகளுக்காக வழங்கியுள்ளது.

இந்த உபகரணங்களை கையளிக்கும் நிகழ்வு நேற்றைய தினம் கொழும்பிலுள்ள பிரதமர் அலுவலகத்தில் நடைபெற்றது.சீனத் தூதுவர் யென் சிங் ருவென் பிரதமர் ரட்ணசிறி விக்ரமநாயக்கவிடம் உபகரணங்களை உத்தியோகபூர்வமாகக் கையளித்துள்ளார்.வடக்கில் இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியேற்றும் நடவடிக்கைக்கு உதவும் வகையில் சீன அரசாங்கம் 6.252 கூடாரங்களையும் 34 கனரக இயந்திரங்களையும் அதனுடன் சம்பந்தப்பட்ட உபகரணங்களையும் வழங்கியுள்ளது.

-------------------

மீள்குடியேற்றப் பணிகள் பாராளுமன்றத் தேர்தல் காரணமாக தாமதிக்கப்படமாட்டாது எனவும் எஞ்சியுள்ள சுமார் 70.ஆயிரம் இடம்பெயர்ந்த மக்களையும் துரிதமாக மீள்குடியேற்றுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் மீள்குடியேற்ற அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.

போர்ச் சு10ழல் காரணமாகச் சுமார் 3லட்சம் பேர் இடம்பெயர்ந்திருந்த நிலையில் அந்த மக்களில் பெரும்பாலானவர்கள் மீள்குடியேற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ள மீள்குடியேற்ற அமைச்சு கடந்த இரு மாதங்களாக மீள்குடியேற்றப் பணிகள் தாமதமானதுடன் தற்போது மீள்குடியேற்றப் பணிகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

இந்த மாதத்திலும் பெரும்பாலானவர்கள் மீள்குடியேற்றப்படவுள்ளதுடன் அவர்கள் வசித்த இடங்களிலுள்ள மிதிவெடிகளை அகற்றும் பணிகள் துரிதமாக முன்னெடுக்கப்படுவதாக தீள்குடியேற்ற அமைச்சின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளதுடன் முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவில் மிதிவெடிகள் அகற்றும் பணிகள் நிறைவடைந்து வருவதுடன் ஏனைய பகுதிகளிலும் மிதிவெடி அகற்றும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் மிதிவெடி அகற்றப்படும் பணிகள் நிறைவடைந்தமையால் அப்பகுதிகளில் மக்கள் துரிதமாக மீள்குடியேற்றப்பட்டு வருவதுடன் எதிர்வரும் வாரங்களில் ஏ-9.வீதியின் கிழக்கு பகுதியில் மீள்குடியேற்றங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

-------------------

பயங்கரவாத அச்சுறுத்தல் காரணமாக நீண்ட காலமாக மூடப்பட்டிருந்த வில்பத்து விலங்குகள் சரணாலயம் மக்களின் பார்வைக்காக திறக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு காரணங்களுக்காக கடந்த 7.வருடங்களாக வில்பத்து சரணாலயம் மூடப்பட்டிருந்ததாகச் சுற்றாடல் மற்றும் இயற்கை வள அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளதுடன் எதிர்வரும் காலங்களில் காலை 6.00.மணி முதல் மாலை 6.00.மணி வரை திறந்து வைக்கப்பட்டிருக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.இதேவேளை சரணாலயம் திறந்து வைக்கப்பட்டதின் பின்னர் காட்டு யானைகளினால் பிரதேச மக்களுக்கு ஏற்படும் அச்சுறுத்தல்கள் குறைவடையும் என எதிர்பார்க்கப்படுவதாக அமைச்சர் சம்பிக்க ரணவக்க மேலும் தெரிவித்துள்ளார்.

---------------

புனர்வாழ்வு முகாம்களில் தங்கியுள்ள புலிகள் இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர்களைத் தங்கவைப்பதற்கு தனியான மாதிரி கிராமங்கள் அமைக்கப்படவுள்ளதாகப் புனர்வாழ்வு விடயங்களுக்குப் பொறுப்பான இராணுவ அதிகாரி பிரிகேடியர் சுதந்த ரணசிங்க தெரிவித்துள்ளார்.

புலிகள் அமைப்பைச் சேர்ந்த சுமார் 11.ஆயிரம் முன்னாள் உறுப்பினர்கள் அரசு சார்பில் பல்வேறு இடங்களில் நடாத்தப்படும் 18.முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் இவர்களில் பெரும்பாலானோர் போர் காலத்தில் பாதுகாப்புப் படையினரிடம் சரணடைந்திருந்ததுடன் மேலும் பலர் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டிருந்தாகவும் இத்தகையவர்களுக்கு மறுவாழ்வு வழங்கும் வகையில் பிரத்தியேகமாக தனியாக சமுதாய கிராமங்களை உருவாக்குவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.இது குறித்து அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும இதற்கான ஒப்புதல் கிடைத்தவுடன் பணிகள் ஆரம்பிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

முதற்கட்டமாக 200.குடும்பங்களை குடியமர்த்தவுள்ளதாகவும் ஏனையவர்களைப் படிப்படியாகக் குடியமர்த்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் எனவும் புனர்வாழ்வு விடயங்களுக்குப் பொறுப்பான இராணுவ அதிகாரி பிரிகேடியர் சுதந்த ரணசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.

---------------

வெளிநாட்டு தலையீடுகளுக்கு இடமளிக்கப்படமாட்டாது என அரசாங்க பாதுகாப்பு பேச்சாளரும் அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடாவியலாளர் சந்திப்பு ஒன்றின் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.இலங்கையை இன்னமும் காலணித்துவ நாடாகக் கருதி பிரித்தானியா செயற்பட்டு வருவதாகவும் எனினும் பிரித்தானிய வெளிவிவகார செயலாளர் டேவிட் மிலிபாண்ட் இலங்கை மக்களின் உரிமைகளைப் பறிப்பதற்கு முயற்சிப்பதாகத் தெரிவித்துள்ள அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல பிரித்தானியா நோர்வே உள்ளிட்ட சில நாடுகள் இலங்கையில் உள்விவகாரங்களில் தலையீடு செய்து வருவதாக குற்றம் சுமத்தியுள்ளார்.

---------------

கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களிற்கான நீதிமன்றங்கள் நேற்று முதல் இயங்க ஆரம்பித்துள்ளன.

இந்த இரு மாவட்டங்களிலும் உள்ள நீதிமன்றங்களின் கட்டிடங்கள் சேதமடைந்துள்ளமையால் தற்காலிக ஏற்பாடாக வவுனியாவில் இவ்விரு நீதிமன்றங்களையும் மூன்று வாரங்கள் இயக்க வைப்பதற்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் நீதிமன்றச் செயற்பாடுகள் தொடர்பாக ஆராய்வதற்காக வவுனியா நீதிபதி ஏ.ஜி.அலெக்ஸ்ராஜா தலைமையில் குழு ஒன்று நேற்று கிளிநொச்சி முல்லைத்தீவுப் பகுதிகளுக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி மாவட்ட நீதிபதி எஸ்.சிவகுமார் முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி எஸ்.ரியல் மற்றும் நீதிமன்ற ஊழியர்கள் சட்டத்தரணிகள் ஆகியோரும் இக்குழுவில் இடம்பெற்றுவதாகவும் சேதமடைந்துள்ள இரு நீதிமன்றக் கட்டிடங்களையும் புனரமைப்பது தளபாட வசதிகளை ஏற்படுத்துவது போன்ற விடயங்கள் குறித்து இக்குழுவினர் ஆராய்ந்துள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

<<முன்னைய பதிவுகள்>>

டக்ளஸ் தேவானந்தா அவர்களின் மக்கள் பணிகள்(படங்கள் இணைப்பு)

தோழர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அன்று ஆற்றிய பாராளுமன்ற உரையின் ஒளி வடிவம்!!

தமிழ் தலைவர்டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அன்றேசொல்லிவைத்த சிந்தனை இது!...[மேலும்]

 

 
  Last update: 20-06-2008. Desigin and Copyright    Welcome. to Visit.Engaltheaasam.com ..!