<%@ Language=JavaScript %> Welcome.To./\.www.engaltheaasam.com Welcome. !

 

 செய்தி் புதுப்பிக்கப்பட்ட நாள்.27.பிப்ரவரி, 2010

* தமிழ் சினிம*

*ஜோ‌திட‌ வார பலன்*

இதயவீணையின் இன்றைய முக்கிய செய்திகள்!!

வணக்கம்! இதயவீணையின் செய்திகள்!! 27.02.2010
செய்தியாசிரியர்: ஷோபா
வாசித்தளிப்பவர்: சுபாஷினி
முதலில் தலைப்புச் செய்திகள்!!!



.நாட்டின் அபிவிருத்திச் செயற்பாடுகளுக்கு முஹம்மது நபி அவர்களால் போதிக்கப்பட்ட சகோதரத்துவம் கைகொடுக்கும் என ஜனாதிபதி தமது மீலாத் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

.புதிதாக 50.நீதிமன்றங்கள் அமைக்கும் திட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளதாகச் சட்ட மறுசீரமைப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

.எதிர்வரும் பொதுத் தேர்தலிற்குப் பின்னரான அரசாங்கத்தில் 35.உறுப்பினர்களைக் கொண்ட அமைச்சரவையை நியமிக்கவுள்ளதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

.எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் 7.831.வேட்பாளர்கள் போட்டியிடுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.




நாட்டின் அபிவிருத்திச் செயற்பாடுகளுக்கு முஹம்மது நபி அவர்களால் போதிக்கப்பட்ட சகோதரத்துவம் கைகொடுக்கும் என ஜனாதிபதி தமது மீலாத் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

சகிப்புத் தன்மை புரிந்துணர்வு நல்லிணக்கம் என்பவற்றுடன் கூடிய புதியதோர் இலங்கையைக் கட்டியெழுப்புவதற்கு முஹம்மது நபி அவர்களால் போதிக்கப்பட்ட சகோதரத்துவமும் கைகொடுக்கும் எனத் தாம் எதிர்பார்ப்பதாகவும் இதன்மூலம் நாட்டின் அபிவிருத்திச் செயற்பாடுகளுக்கும் உதவ முடியுமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விடுத்துள்ள மீலாத் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

இலங்கை முஸ்லிம்களுக்கு இன்றைய தினத்தில் இந்த வாழ்த்துச் செய்தியை அனுப்புவதில் தாம் பெருமகிழ்ச்சியடைவதாகவும் இன்று அவர்கள் உலகம் முழுவதிலுமுள்ள சகோதரர்களுடன் இணைந்து மீலாதுன் நபியைக் கொண்டாடிக் கொண்டிருப்பதாகவும் முஹம்மது நபி பிறந்த தினமான இன்றைய தினம் முஸ்லிம்கள் அவரின் போதனைகளை நினைவு கூரும் ஒரு தினமாகும் எனத் தெரிவித்ததுடன் சமாதானம் நல்லிணக்கம் கருணை சுயநலமின்மை தர்மம் என்பன பல உயர் விழுமியங்களை புனித நபி அவர்கள் தமது போதனைகள் மூலம் முன்வைத்ததாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

-----------------

புதிதாக 50.நீதிமன்றங்கள் அமைக்கும் திட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளதாகச் சட்ட மறுசீரமைப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

இத்திட்டத்திற்கு 500.மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் இத்திட்டத்தின் கீழ் 3.மேலதிக நீதி மன்றங்கள் 16.மாவட்ட நீதிமன்றங்கள் 19.நீதவான் நீதிமன்றங்கள் மற்றும் 12.சுற்றுலா நீதிமன்றங்கள் என்பன அமைக்கப்படவுள்ளதாகவும் நீதிமன்றங்களின் அதிகாரப் பிரிவுகளை நிர்ணயிக்கும் குழுவின் சிபார்சுக்கமைய இந்தத் திட்டம் மேற்கொள்ளப்படுகின்றது.

--------------------

சு10ரியவெள விஹாரகலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள சு10ரியவெள ஒருங்கிணைக்கப்பட்ட சமூக நீர்வழங்கல் கருத்திட்டம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

இக்கருத்திட்டம் தெற்காசியாவிலேயே மிகப்பெரிய சமூக நீர்கருத்திட்டம் எனக் கருதப்படுவதாகவும் 90.மில்லியன் ரூபா செலவில் நகர அபிவிருத்தி புனித பிரதேசங்கள் அபிவிருத்தி அமைச்சினால் நிர்மாணிக்கப்பட்டுள்ள இக்கருத்திட்டத்தின் மூலம் சு10ரியவெள பகுதியிலுள்ள 3.000.குடும்பங்களைச் சேர்ந்த 15.ஆயிரத்து 700.பேர் பயனடையவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்கள் பலத்தில் நம்பிக்கை வைத்து அபிவிருத்தி இலக்குகளை அடைந்து கொள்ளும் சவால்களுக்கு முகம் கொடுக்கும் பொறுப்பை அரசாங்கம் ஏற்றுள்ளதினால் ஒரு குறுகிய காலப்பகுதியில் மக்களின் அபிவிருத்தி எதிர்பார்ப்புகளை அரசாங்கத்தால் நிறைவேற்ற முடிந்துள்ளதாக இக்கருத்திட்டத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

பயங்கரவாதம் முடிவிற்குக் கொண்டு வரப்பட்டுள்ள நிலையில் நகரப்புறங்களுக்கு மட்டுமே வரையறுக்கப்பட்டிருந்த அபிவிருத்திகளை கிராமப்புறங்களுக்கும் விஸ்தரிப்பதற்கு அரசாங்கத்திற்கு முடிந்துள்ளதாகவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேலும் தெரிவித்துள்ளார்.

-----------

யாழ்.தேர்தல் மாவட்டத்தில் அரசியல் கட்சிகளும் சுயேட்சைக் குழுக்களுமான 27.அரசியல் அமைப்புகளைச் சேர்ந்த 324.வேட்பாளர்கள் எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.

யாழ்.மாவட்டத்தில் ஒன்பது பாராளுமன்ற உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக 324 பேர் போட்டியிடுவது என்பது இதுவே முதற்தடவையாகும். வடகிழக்கிலும் தேசிய ரீதியாகவும் செயற்பட்டு வரும் பல அரசியற் கட்சிகள் யாழ்.குடா நாட்டில் போட்டியிடுவதுடன் அதிகமான சுயேட்சைக் குழுக்கள் போட்டியிடுவதும் குறிப்பிடத்தக்கதாகும்.

தமிழ் கூட்டமைப்பு பல்வேறு குழுக்களாகவும் தனிநபர்களாகவும் சிதறிப் போயுள்ள நிலையில் தமிழரசுக் கட்சியினர் கூட்டமைப்பு என்னும் பெயரில் போட்டியிடுவதும் தமிழ் காங்கிரஸ் ரெலோ இயக்கத்தினர் மற்றும் சிவாஜிலிங்கம் ஸ்ரீகாந்தா அணியினர் ஒரு குழுவாகவும் பத்மினி கஜேந்திரன் ஆகியோர் பிறிதொரு குழுவாகவும் களமிறங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை யாழ்.மாவட்டத் தேர்தல் தொகுதியில் நான்கு சுயேட்சைக் குழுக்களினதும்لل ஒரு அரசியல் கட்சியினதும் வேட்பாளர் விண்ணப்பங்கள் யாழ்.மாவட்டத் தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரியினால் நிராகரிக்கப்பட்டுள்ளதாக மாவட்டச் செயலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கதாகும்.

---------------

கச்சத்தீவில் நடைபெறும் புனித அந்தோனியார் திருவிழாவில் பங்கேற்பதற்கு இராமேஸ்வரம் சுற்றுப்பகுதி தீவு மக்கள் கூட்டம் கூட்டமாக விசைப்படகு மூலம் வந்த வண்ணம் உள்ளதாகவும் புனித அந்தோனியார் திருவிழாவில் பங்கேற்பதற்கு இராமேஸ்வர மக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் உள்நாட்டு போரினால் 1978ம் ஆண்டில் நிறுத்தப்பட்ட கச்சத்தீவு புனித அந்தோனியார் கோவில் திருவிழா 22.ஆண்டுகளுக்கு பின் மீண்டும் 2001ம் ஆண்டு தொடக்கம் அரசின் ஒத்துழைப்புடன் 2005.வரை நடைபெற்ற அந்தோனியார் திருவிழாவில் மன்னார் நெடுந்தீவு பகுதியிலிருந்தும் இராமேஸ்வரம் பாம்பன் பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றிருந்தனர்.

யாழ்.மறைமாவட்ட ஆயர் தோமஸ் சௌந்திரநாயகம் கச்சத்தீவு திருவிழாவிற்கு அழைப்பு விடுத்துள்ளார். கச்சத்தீவில் இன்று காலை 8.00.மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி மாலை திருப்பலி பூஜை இரவு கலைநிகழ்ச்சிகள் இடம்பெற்றதுடன் நாளை 28ம் திகதி காலை திருப்பலி தேர் பவனி என இரண்டு நாட்கள் திருவிழா நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இந்த விழாவில் தமிழகத்தில் இருந்தும் பக்தர்கள் பங்கேற்பதற்கு ஆயர் தோமஸ் சௌந்தரநாயகம் அழைப்பு விடுத்துள்ளதும் குறிப்பிடத்தக்கதாகும்.

-----------------

எதிர்வரும் பொதுத் தேர்தலிற்குப் பின்னரான அரசாங்கத்தில் 35.உறுப்பினர்களைக் கொண்ட அமைச்சரவையை நியமிப்பதே தமது இலக்குகளில் ஒன்று என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் ஏப்ரல் மாதத்தில் இடம்பெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி தேர்ந்தெடுக்கப்பட்டால் சிறிய அமைச்சரவையே ஏற்படுத்தப்படும் எனவும் தற்போதைய அமைச்சரவையில் செயற்பாட்டுத் திறனுடன் கரும மாற்றாதவர்கள் புதிய அமைச்சரவையில் இடம்பெறமாட்டார்கள் எனத் தெரிவித்துள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ செயற்பாட்டுத் திறனை அடிப்படையாகக் கொண்டு பல அமைச்சர்களை நீக்குவதுடன் புதிய அரசாங்கத்தில் சில பெரிய பெயர்கள் இடம்பெறுவதும் சாத்தியமில்லை எனத் தெரிவித்துள்ளார்.உலகிலேயே பாரிய அமைச்சரவைகளில் ஒன்றாக இலங்கையின் அமைச்சரவை உள்ளதாகவும் இது நாட்டின் பொருளாதாரத்திற்குப் பாரிய சுமையாகும் எனத் தெரிவித்துள்ளார்.

----------------

எதிர்வரும் பாராளுமன்றப் பொதுத் தேர்தலில் புத்தளம் மாவட்டத்தில் 297.வேட்பாளர்கள் போட்டியிடுவதாக மாவட்டத் தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரி கிங்ஸ்லி பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் பாராளுமன்றப் பொதுத் தேர்தலில் புத்தளம் மாவட்டத்தில் போட்டியிடுவதற்கு என 15.அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் மற்றும் 12 சயேட்சைக் குழுக்களால் தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்கள் யாவும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாகப் புத்தளம் மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரி கிங்ஸ்லி பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

-----------------

வர்ணப் புகைப்படம் மற்றும் இரகசியக் குறியீடுகளுடன் தயாரிக்கப்பட்டு கணனி மயமாக்கப்பட்ட புதிய தபால் அடையாள அட்டைகளை அறிமுகப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தபால் மற்றும் தொலைத்தொடர்புகள் அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த கணனி மயமாக்கப்பட்ட தபால் அட்டைகளை எதிர்வரும் மாதம் முதல் விநியோகிப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள தபால் மா அதிபர் குறித்த தபால் அடையாள அட்டைகள் 16.வயதுக்கு குறைந்தவர்களுக்கு மாத்திரமே அறிமுகப்படுத்தப்படவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை கடந்த காலங்களில் தபால் அடையாள அட்டைகளில் இடம்பெற்ற மோசடி நடவடிக்கையைக் கவனத்திற் கொண்டே புதிய வகையிலான தபால் அட்டைகளை வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தபால் மா அதிபர் தெரிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கதாகும்.

---------------

எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் 7.831.வேட்பாளர்கள் போட்டியிடுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் ஏப்ரல் 8ம் திகதி பாராளுமன்றப் பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளது.இந்தத் தேர்தலில் 7.831.வேட்பாளர்கள் போட்டியிட உள்ளதாகவும் இலங்கை அரசியல் திட்டத்துக்கு அமைய 22.மாவட்டங்களில் இருந்து மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் 196 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த முறை தேர்தலுக்கான வேட்பு மனுக்களை ஏற்கும் நடவடிக்கைகள் கடந்த 19ம் திகதி ஆரம்பிக்கப்பட்டு நேற்றைய தினம் நண்பகல் 12.00.மணியுடன் நிறைவடைந்துள்ளது. கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்களின் வேட்பு மனுதாக்கல் பதிவு செய்யப்பட்டதற்கிணங்க பொது தேர்தலில் 7.831.வேட்பாளர்கள் போட்டியிடவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

<<முன்னைய பதிவுகள்>>

டக்ளஸ் தேவானந்தா அவர்களின் மக்கள் பணிகள்(படங்கள் இணைப்பு)

தோழர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அன்று ஆற்றிய பாராளுமன்ற உரையின் ஒளி வடிவம்!!

தமிழ் தலைவர்டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அன்றேசொல்லிவைத்த சிந்தனை இது!...[மேலும்]

 

 
  Last update: 20-06-2008. Desigin and Copyright    Welcome. to Visit.Engaltheaasam.com ..!