|
|
|
|
|
 |
|
ஜே.வி.பி.,ஐ.தே.க.மற்றும் புலிகளால்
நாட்டின் இறையாண்மைக்கு
அச்சுறுத்தல்-அரசாங்கம் குற்றச்சாட்டு. |
|
|
ஐக்கிய தேசியக் கட்சி,ஜே.வி.பி.மற்றும்
தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பைச்
சேர்ந்தவர்களினால் நாட்டின் இறையாண்மைக்கு
அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக அரசாங்கம்
குற்றஞ்சாட்டியுள்ளது.குறிப்பாக தமிழீழ
விடுதலைப்புலிகளுக்கு ஆதரவு வழங்கி வரும்
வெளிநாட்டுத் தரப்பினருடன் ஐக்கிய
தேசியக் கட்சியும் ஜே.வி.பி யும் உறவுகளைப்
பேணி வருவதாக வெளிவிவகார அமைச்சர்
றோகித போகொல்லாகம தெரிவித்துள்ளார்.
அண்மையில் பிரித்தானிய உயர்ஸ்தானி கராலயத்தில்
இலங்கை தேசியக் கொடி எரிக் கப்பட்ட சம்பவத்தின்
பின்னணி குறித்ததக வல்கள் அம்பலமாகியுள்ளது
என அவர் குறிப்
பிட்டுள்ளார்.வெளிநாட்டிலுள்ள சில கடும்
போக்கு உடைய குழுக்கள் நாட்டின் பெளதிக
ஒருமைப்பாட்டிற்கும் இறையாண்மைக்கும்
அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் செயற்பட்டு
வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
எனினும் இவ்வாறான சக்திகளின் சதிவலையில்
வெளிநாட்டில் வசித்து வரும் இலங்கை யர்கள்
சிக்கி விடக் கூடாது என அவர் குறிப்
பிட்டுள்ளார்.லண்டன் உயர்ஸ்தானிகராலயத்திற்கு
அருகாமையில் தேசியக் கொடியை எரிக்கும்
முயற்சியில் ஜே.
வி.பி.,ஐ.தே.க.மற்றும் புலி உறுப்பினர்கள்
இணைந்து பங்கு பற்றியதாக அவர்
தெரிவித் துள்ளார்.
|
|
|
|
|
|