<%@ Language=JavaScript %> Welcome.To./\.www.engaltheaasam.com Welcome. !

 

 செய்தி் புதுப்பிக்கப்பட்ட நாள்.08.பிப்ரவரி, 2010

* தமிழ் சினிம*

*ஜோ‌திட‌ வார பலன்*

ஆயுதக் கொள்வனவு,ஏவுகணைத் தாக்குதல் சம்பவங்களில் ஈடுபட்ட புலி உறுப்பினர் இருவர் மறியலில்!

படையினர் மீது தாக்குதல் மேற் கொள்வதற்குத் தேவையான ஆயுதங்கள் மற்றும் தோட்டாக்களை இலங்கைக்கு கொண்டு வந்த விடுதலைப் புலி உறுப்பினர் ஒருவர் மற்றும் ஏவுகணைத் தாக்குதல் நடத்தி இலங்கை விமானப் படைக்குச் சொந்தமான 24கோடி ரூபா பெறுமதியான எம்.ஐ.24ரக தாக்குதல் உலங்குவானூர்தியை அழித்த விடுதலைப் புலி உறுப்பினர் ஆகிய இருவரை தடுத்து வைத்து விசாரணை மேற்கொள்ள கொழும்பு பிரதான நீதவான் சம்பாஜானகீ ராஜரட்ணம் பொலிஸாருக்கு அனுமதியளித்துள்ளார்.

சீனாவிடமிருந்து மிகவும் இரகசியமாக பெற்றுக்கொள்ளப்பட்ட ஆயுதங்களும், தோட்டாக்களும் கொரிய பிரஜைகளின் உதவியுடன் விடுதலைப் புலிகளுக்குச் சொந்தமான 10கப்பல்களில் பகுதி பகுதியாக இலங்கைக்கு கொண்டு வந்ததாகவும்,வானூர்தியைத் தாக்கியழிக்கக் கூடிய சாம் ஏவுகணைக் கூடு விடுதலைப் புலிகளின் முகாமொன்றிலிருந்து மீட்கப்பட்டு தற்போது ரத்மலான விமானப்படைகளின் முகாமில் வைக் கப்பட்டுள்ளதாகவும் குற்றப் புலன ய்வுப் பிரிவினர் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளனர்.

விடுதலைப் புலிகளுக்கு கப்பல் மூலம் ஆயுதங்களைக் கொண்டு வந்ததாகக் கூறப்படும் யாழ்ப்பாணம் தொண்டமானாற்றைச் சேர்ந்த எம்.ரா ஜேந்திரன் கருணாகரன் மற்றும் ஏவு கணைத் தாக்குதலை மேற்கொண்டு வானூர்தியை அழித்ததாகக் கூறப்ப டும் அருளானந்தன் நிஷாந்தன் ஆகிய இரண்டு விடுதலைப் புலி உறுப்பினர்களையும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

எம்.ஐ.24ரக உலங்குவானூர்தியை ஏவுகணை மூலம் தாக்கியழித்த சம்பவம் குறித்த விசாரணைத்தகவல்களை நீதிமன்றத்திற்கு அறிவித்த குற்றப் புலனாய்வுப் பிரிவினர் 2000 ம் ஆண்டு செப்டெம்பர் 23ஆம் திகதி திருகோணமலையில் மேற் கொள்ளப்பட்ட சாம் 3ரக ஏவுகணை களைத் தாக்குதலினால் வானூர்தி உப்பாறு களப்பில் வீழ்ந்ததாகத் தக வலளித்தனர்.

அருளானந்தன் நிஷாந்தன் என்ற சந்தேக நபர் 1990ஆம் ஆண்டு காலப்பகுதியில் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைந்து கொண்டுள்ளதாகவும் இறுதிக் காலம் வரை அவர் இயக்க செயற்பாடுகளை முன் னெடுத்துள்ளதாகவும் விசாரணை களின் மூலம் தெரியவந்துள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதி மன்றத்தில் மேலும் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபரிடம் மேற்கொள்ளப் பட்ட விசாரணைகளின் போது ஏவு கணைத் தாக்குதல் மேற்கொள்ளப் பட்ட பின்னர் ஏவுகணையின் கூட்டில் ஏவுகணைத் தாக்குதல் மேற் கொள்ளப்பட்ட திகதி, நேரம், மேற் கொண்டவரின் பெயர் விபரங்களை தமிழ்மொழியில் கூட்டில் பதித்து களஞ்சியப்படுத்துவது தெரியவந் ததாகவும்,விடுதலைப் புலிகளுக் கெதிரான இறுதி யுத்தத்தின் போது இவ்வாறான பல ஏவுகணைக் கூடுகள் மீட்கப்பட்டதாகவும் தகவலளித்த குற்றப் புலனாய்வுப் பிரிவினர்,மீட் கப்பட்ட ஏவுகணைக் கூடுகளில் எம்.ஐ.24ரக வானூர்தியை அழிப் பதற்குப் பயன்படுத்திய ஏவுகணைக் கூடும் இருப்பதாகத் தெரிவித்துள் ளனர்.

இந்தச் சம்பவங்கள் குறித்து மேலும் பல தகவல்களைப் பெற்றுக் கொள்வதற்கு சந்தேக நபர்களை தொடர்ந்தும் தடுத்து வைத்து விசாரணை மேற்கொள்ள அனுமதிக்க வேண்டுமெனக் குற்றப் புலனாய்வுத் துறையினர் நீதிமன்றத்தில் இதன் போது அனுமதி கோரினர்.பின்னர் வேண்டுகோளுக்கு அனுமதியளித்த நீதவான் எதிர்வரும் 26ஆம் திகதி விசாரணைகளின் நிலைமை குறித்து மீண்டும் நீதிமன்றத்திற்கு அறிவிக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

<<முன்னைய பதிவுகள்>>

டக்ளஸ் தேவானந்தா அவர்களின் மக்கள் பணிகள்(படங்கள் இணைப்பு)

தோழர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அன்று ஆற்றிய பாராளுமன்ற உரையின் ஒளி வடிவம்!!

தமிழ் தலைவர்டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அன்றேசொல்லிவைத்த சிந்தனை இது!...[மேலும்]

 

 
  Last update: 20-06-2008. Desigin and Copyright    Welcome. to Visit.Engaltheaasam.com ..!