|
|
|
|
|
 |
|
இதயவீணையின்
இன்றைய முக்கிய செய்திகள்!! |
|
|
வணக்கம்!
இதயவீணையின் செய்திகள்!! 29.01.2010
செய்தியாசிரியர்: ஷோபா
வாசித்தளிப்பவர்: சுபாஷினி
முதலில் தலைப்புச் செய்திகள்!!!
.யாழ்.மாவட்டத்தில் வறுமைக் கோட்டின்
கீழ் வாழும் பெண்களின் சுயதொழில்
ஊக்குவிப்புக்கென அமைச்சர் டக்ளஸ்
தேவானந்தா ஒரு தொகுதி தையல்
இயந்திரங்களை வழங்கியுள்ளார்.
.இனவாதத்தையோ வீணான கலவரங்களையோ
தூண்டும் வகையில் எவரும் செயற்படக்
கூடாது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ
தெரிவித்துள்ளார்.
.அரசியலமைப்பில் திருத்தம் கொண்டு
வந்து நாட்டில் நல்லாட்சியை
ஏற்படுத்துவதற்கு எதிர்க்கட்சியினர்
அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்க
வேண்டும் என ஊடகத்துறை அமைச்சர்
தெரிவித்துள்ளார்.
.சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தமது
அமைச்சுப் பதவியை இராஜினாமாச்
செய்யவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்.மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச்
சேர்ந்த வறுமைக் கோட்டின் கீழ் வாழும்
பெண்களின் சுயதொழில் ஊக்குவிப்புக்கென
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஒரு தொகுதி
தையல் இயந்திரங்களை வழங்கியுள்ளார்.
அமைச்சரின் யாழ்.அலுவலகத்தில் இன்றைய
தினம் இடம்பெற்ற இந்த நிகழ்வில் கணவனை
இழந்த பெண்கள் மற்றும் வறுமைக்கோட்டின்
கீழ் வாழும் பெண்களுக்கென 11 தையல்
இயந்திரங்களும் உள்ளக இடப்பெயர்விற்கு
உள்ளானவர்களில் தையல் தொழிலை
சுயமுயற்சியாக கொண்டவர்களுக்கு என
இரண்டு இயந்திரங்களும்
வழங்கப்பட்டுள்ளன.
இதேவேளை தொழில் செய்ய முடியாத
நிலையிலுள்ள குடும்பத் தலைவரைக் கொண்ட
குடும்பங்கள் மற்றும் கணவர் காணாமல்
போன நிலையிலுள்ள குடும்பங்களுக்கு என
8 தையல் இயந்திரங்கள் அமைச்சர் டக்ளஸ்
தேவானந்தாவினால் வழங்கப்பட்டுள்ளன.
இந்தத் தையல் இயந்திரங்களை வழங்கி
வைத்து அவர்கள் மத்தியில் உரை
நிகழ்த்திய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா
பாதிப்புக்குள்ளான மக்களின்
மேம்பாட்டுக்கென வழங்கப்படும் இந்தத்
தையல் இயந்திரங்களை உரிய முறையில்
பயன்படுத்தி வாழ்வை மேம்படுத்திக்
கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக்
கொண்டுள்ளார்.
இந்த நிகழ்வில் யாழ்;.மாநகர சபை
முதல்வர் திருமதி யோகேஸ்வரி
பற்குணராஜா பிரதி முதல்வர் துரைராஜா
இளங்கோ றீகன் மற்றும் சமூக சேவைகள்
மற்றும் சமூக நலத்துறை அமைச்சின்
அதிகாரிகள் உட்படப் பலர் கலந்து
கொண்டதும் குறிப்பிடத்தக்கதாகும்.
------------
இனவாதத்தையோ வீணான கலவரங்களையோ
தூண்டும் வகையில் எவரும் செயற்படக்
கூடாது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ
தெரிவித்துள்ளார்.
நேற்று மாலை பத்திரிகைகளின் பிரதம
ஆசிரியர்கள் இலத்திரனியல் ஊடகங்களின்
முக்கியஸ்தர்கள் ஊடக நிறுவனங்களின்
தலைவர்கள் ஆகியோரை நேற்றைய தினம்
அலரிமாளிகையில் சந்தித்துத்
கலந்துரையாடிய ஜனாதிபதி மஹிந்த
ராஜபக்ஷ இதனைத் தெரிவித்துள்ளார்.அவர்
மேலும் கருத்துத் தெரிவிக்கையில்
நாட்டில்;கலவரங்களைத் தூண்டும்
வகையிலான செயற்பாடுகளுக்கு ஊடகங்கள்
ஒருபோதும் இடமளிக்கக்கூடாது எனவும்لل
சமுதாயத்தை உருவாக்கும் பணியில்
ஊடகங்களின் செயற்பாடுகள் அமைய வேண்டுமே
தவிர அவற்றை அழிக்கும் வகையில் அமையக்
கூடாது எனவும் தெரிவித்துள்ளார்.
தேர்தலில் தாம் வெற்றி பெறுவதற்கு
உதவிய அனைத்து ஊடகங்களுக்கும் நன்றி
தெரிவிப்பதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி
தேர்தலின் போது ஒரு சில ஊடக
நிறுவனங்கள் பொய்யான தகவல்களை
வெளியிடுவதிலும் தமக்கு சேறு
பூசுவதிலும் முன்னின்று
செயற்பட்டதாகவும் தெரிவித்ததுடன் தமது
அரசியல் வரலாற்றில் இவ்வாறு மோசமானதோர்
நிலைமையைத் தாம் ஒருபோதும் காணவில்லை
என்றும் தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு முக்கியமானதோர் பொறுப்பு
உள்ள இனங்கள் இடையே அநாவசியமான
குரோதங்களையோ கலவரங்களையோ
தூண்டாடுவதற்கு இடமளிக்கக் கூடாது
இனவாதத்தை தூண்டுவதற்கும் கலவரங்களை
ஏற்படுத்துவதற்கும் சிலர் முயற்சித்த
போதிலும்لل அது முடியவில்லை எனத்
தெரிவித்துள்ள ஜனாதிபதி வெறுமனே
அரசியல் குரோதங்களை வளர்ப்பதின் மூலமே
இனவாதம் தழைத்தோங்க வழிவகுப்பதாகவும்
ஊடகங்கள் பொறுப்புணர்வுடன் செயற்பட
வேண்டும் எனவும் அதேபோன்று மீண்டும்
நாட்டில் பயங்கரவாதம் பிரிவினைவாதம்
அல்லது வேறு வழியிலான கலவரங்கள் ஏற்பட
ஒருபோதும் இடமளிக்கப்படமாட்டாது
எனவும் அதற்கு உந்துசக்தியா ஊடகங்களும்
செயற்படக் கூடாது எனத்
தெரிவித்துள்ளார்.
இந்தத் தடவை நடைபெற்று முடிந்த தேர்தல்
மிக அமைதியாகவும் நீதி நியாயமாகவும்
அசம்பாவிதங்கள் எதுவும் இன்றி
இடம்பெற்றதாகவும் அது மட்டுமல்ல அரச
ஊடகங்களில் முக்கியஸ்தர்கள் பலருக்கு
மரண அச்சுறுத்தல்கள்
விடுக்கப்பட்டதாகவும் அவர்கள் அதனையும்
சகித்துக் கொண்டு தமது பணியை செவ்வனே
நிறைவேற்றியதாகத் தெரிவித்த ஜனாதிபதி
மக்களின் அமோக ஆதரவுடன் வெற்றி
பெற்றுள்ளதால் தாம் மக்களுக்கு
வழங்கிய வாக்குறுதிகளை மஹிந்த
சிந்தனையின் அடிப்படையில்
நிறைவேற்றுவோம் எனத் தெரிவித்ததுடன்
தமக்கோ நாட்டிற்;கோ அபகீர்த்தியை
ஏற்படுத்துவதால் எந்தப் பயனையும்
எவரும் பெற்றுக் கொள்ளமாட்டார்கள்
என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும் என
மேலும் தெரிவித்துள்ளார்.
----------
அரசியலமைப்பில் திருத்தம் கொண்டு வந்து
நாட்டில் நல்லாட்சி ஒன்றை
ஏற்படுத்துவதற்கு எதிர்க்கட்சியினர்
அரசாங்கத்திற்குப் பூரண ஒத்துழைப்பினை
வழங்க வேண்டும் என தகவல் ஊடகத்துறை
அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன
தெரிவித்துள்ளார்.
தகவல் ஊடகத்துறை அமைச்சில் நேற்று
இடம்பெற்ற விஷேட செய்தியாளர்
மாநாட்டில் உரை நிகழ்த்திய அமைச்சர்
லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன
எதிர்க்கட்சி இதற்கு ஒத்துழைப்பு
வழங்காத பட்சத்தில் பாராளுமன்றத்தின்
மூலம் மூன்றில் இரண்டு
பெரும்பான்மையைப் பெற்று எதிர்கால
நடவடிக்கையை முன்னெடுப்பதற்கு
அரசாங்கம் தயாராகவுள்ளதாகவும்
வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாதவாறு
60வீதமான வாக்குகளைப் பெற்று ஜனாதிபதி
மஹிந்த ராஜபக்ஷ வெற்றி
பெற்றுள்ளாதாகவும் இது
நன்றியுணர்வுள்ள நாட்டு மக்கள்
அவருக்கு வழங்கிய கௌரவமாகும் எனத்
தெரிவித்துள்ளார்.
இந்த வெற்றியைத் தொடர்ந்து நாட்டை
சமாதானத்திலும் அபிவிருத்தியிலும்
முன்னெடுப்பதே எதிர்கால நோக்காகும்
எனவும் நல்லாட்சியை ஏற்படுத்தி
நாட்டைக் கட்டியெழுப்புவதில்
எதிர்க்கட்சி தம்முடன் இணைந்து
செயற்பட முடியும் என்பதுடன்
அரசியலமைப்பில் திருத்தம் கொண்டு
வருவதில் அவர்கள் அரசாங்கத்திற்கு உதவ
முடியும் எனத் தெரிவித்துள்ள அமைச்சர்
லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன
எவ்வாறாயினும் பாராளுமன்றத் தேர்தலில்
தமக்கு நாட்டு மக்கள் மூன்றில் இரண்டு
பெரும்பான்மையைப் பெற்றுத் தருவர்கள்
என்பது உறுதி எனத் தெரிவித்துள்ளதுடன்
நாட்டின் நிர்வாகத்தில் மாற்றங்களை
ஏற்படுத்துவதற்கான அங்கீகாரத்தைத் தாம்
மக்களிடம் கோரும் பட்சத்தில் மக்கள்
அதற்கு பூரண ஆதரவு தருவார்கள் எனவும்
தெரிவித்துள்ளார்.
சகல மக்களுக்கும் பொருத்தமான
நிர்வாகத்தை ஏற்படுத்துவதே
ஜனாதிபதியின் நோக்கம் எனவும்
எதிர்வரும் நவம்பர் மாதம் வரையிலான
அவரது முதலாவது பதவிக் காலத்தில்
அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வார்
என்பதுடன் அடுத்து வரும் ஆறு
வருடங்களில் நாட்டில் நல்லாட்சியை
ஏற்படுத்துவார் எனத் தெரிவித்துள்ள
அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன
எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில்
யானையா அன்னமா என்ற பிரச்சினையும்
எதிர்க்கட்சியினருக்கு உள்ளதாகவும்
சாதாரண மக்களின் தேவைகளைப் புரிந்து
கொள்ளாமல் செயற்பட்டால் இன்னும் ஐந்து
தேர்தல்களில் கூட ஐக்கிய தேசியக்
கட்சியினால் வெல்ல முடியாது எனவும்
தெரிவித்துள்ளார்.
-------------
இன்று முதலே அடுத்த பொதுத்
தேர்தலிற்காக அரசாங்கம் தயாராகி
வருவதாக ஆளும் ஐக்கிய மக்கள்
சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச்
செயலாளரும் அமைச்சருமான சுசில்
பிரேம்ஜயந்த் தெரிவித்துள்ளார்.
இன்று நடைபெற்ற செய்தியாளர்
சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத்
தெரிவித்த அமைச்சர் சுசில் பிரேம்
ஜயந்த் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும்
கட்சிகளுடனான பேச்சுவார்த்தைகளை
ஆரம்பிப்பதற்கு எண்ணியுள்ளதாகவும்
ஐக்கிய மக்கள் சுதந்திரக்
கூட்டமைப்பில் ஏதேனும் குறைபாடுகள்
இருப்பின் அவற்றை நிவர்த்தி செய்து
கொண்டு பொதுத் தேர்தலில் அமோக
வெற்றியீட்ட எதிர்பார்த்துள்ளதாகத்
தெரிவித்ததுடன் இதன் மூலம் நாட்டில்
அரசியல் ஸ்திரநிலையை ஏற்படுத்தி
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ
முன்வைத்துள்ள மஹிந்த சிந்தனைத்
திட்டத்தின் அடிப்படையில் வளமானதும்
சுபீட்சமானதுமான நாட்டை
உருவாக்குவதற்கு நடவடிக்கை
மேற்கொள்ளவுள்ளதாகவும்
தெரிவித்துள்ளார்.
------------
நாட்டின் 6வது நிறைவேற்று அதிகாரமுடைய
ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்காக
நடைபெற்ற தேர்தலானது ஒப்பீட்டளவில்
அமைதியாக நடைபெற்றமை தமக்குத்
திருப்தியளிப்பதாக ஐக்கிய நாடுகள்
சபையின் பொதுச் செயலாளர் பான் கீ மூன்
தெரிவித்துள்ளார்.
வன்முறைகள் இல்லாத வகையில் தேர்தல்
நடைபெற்று முடிந்துள்ளமை
வரவேற்கத்தக்கது எனவும் தேர்தல்
அதிகாரிகளால் வெளியிடப்பட்டுள்ள
முடிவுகளைச் சகல அரசியல் கட்சிகளும்
ஏற்றுக் கொள்ள வேண்டும் எனத்
தெரிவித்துள்ள ஐக்கிய நாடுகளின் பொதுச்
செயலாளர் மூன்று தசாப்த காலமாக
நாட்டில் நிலைகொண்டிருந்த தீவிரவாதம்
ஒழிக்கப்பட்ட பின்னர் நடைபெற்ற
முதலாவது தேர்தல் தொடர்பில் தாம்
உன்னிப்பாக அவதானித்ததாகவும்
தெரிவித்துள்ளார்.
சிறுசிறு வன்முறைச் சம்பவங்கள்
இடம்பெற்ற போதிலும் ஜனாதிபதித் தேர்தல்
அமைதியான முறையிலேயே நடைபெற்றதாகவும்
தேர்தல்கள் செயலகத்தினால் வழங்கப்படும்
கட்டளைகளைச் சகலரும் ஏற்றுக் கொள்ள
வேண்டும் என்பதுடன் தேச நன்மையைக்
கருத்திற் கொண்டு அனைவரும் பொறுப்புடன்
செயற்படுவார்கள் எனவும் ஐக்கிய
நாடுகளின் பொதுச் செயலாளர் பான் கீ
மூன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
----------
சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தமது
அமைச்சுப் பதவியை இராஜினாமாச்
செய்யவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் பேசும் மக்களின் உரிமைகளை
வென்றெடுப்பதற்குப் பேரம் பேசும் பலம்
அவசியம் என்பதில் நம்பிக்கை கொண்டுள்ள
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நடைபெற்று
முடிந்த ஜனாதிபதித் தேர்தலில்
யாழ்.மாவட்டத்தின் முடிவுகளைத்
தொடர்ந்து தமது பதவியை இராஜினாமாச்
செய்வதற்குத் தீர்மானித்துள்ளதாகத்
தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமது இராஜினாமா குறித்து ஜனாதிபதி
மஹிந்த ராஜபக்ஷவிடம் தெரிவித்துள்ள
போதிலும் ஜனாதிபதி அதற்கு மறுப்புத்
தெரிவித்துள்ளதாகத்
தெரிவிக்கப்பட்டுள்ள அதேவேளை
இச்செய்தியை அறிந்த அமைச்சரின்
ஆதரவாளர்கள் பொது அமைப்புகளின்
பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள்
அமைச்சரின் யாழ்.பணிமனைக்கு வருகை
தந்தவண்ணமுள்ளதாகவும்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின்
அமைச்சுப் பதவி இராஜினாமாத் தொடர்பாக
நாம் அமைச்சருடன் தொடர்புகளை
ஏற்படுத்துவதற்கு செய்தித்
தயாரிப்புகளில் ஈடுபடும் வரை பல்வேறு
முயற்சிகளை மேற்கொண்ட போதிலும்
அமைச்சரின் தொடர்பு கிடைக்கவில்லை
என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
---------------
எமது நாட்டின் அரச ஊழியர்கள்
புத்திசாலிகள் என்பதை ஜனாதிபதி
தேர்தலின் மூலம் நிரூபித்துள்ளார்கள்
எனப் பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள்
அமைச்சர் கலாநிதி சரத் அமுனுகம
தெரிவித்துள்ளார்.
நேற்றுக் காலை இடம்பெற்ற ஊடகவியலாளர்
சந்திப்பில் கருத்துத் தெரிவித்த
அமைச்சர் சரத் அமுனுகம சரத் பொன்சேகா
பெரிய ஒரு தொகையை சம்பளமாக வழங்குவதாக
நிறைவேற்ற முடியாத வாக்குறுதியை
வழங்கியிருந்த போதிலும் அதன் உண்மை
நிலையை அறிந்த அரசாங்க ஊழியர்கள் அதனை
நிராகரித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அமோக
வெற்றிக்காக 60முதல் 70வீதமான அரச
ஊழியர்கள் தபால் மூலம் தமது வாக்குகளை
வழங்கியமை விஷேட அம்சம் எனத்
தெரிவித்துள்ள அமைச்சர் சரத் அமுனுகம
அமைதியானதும் சுதந்திரமானதுமான
முறையில் இம்முறை தேர்தல் நடந்து
முடிந்துள்ளதாகவும் இந்த ஜனாதிபதி
தேர்தலை நடாத்தி முடிப்பதற்கான
ஒத்துழைப்பை வழங்கிய தேர்தல் ஆணையாளர்
உட்பட சகல அரச ஊழியர்களுக்கும் பொது
நிர்வாக அமைச்சர் என்னும் வகையில்
நன்றிகளை தெரிவித்துக் கொள்வதாகவும்
இந்த நாட்டிலுள்ள சகல பிரஜைகளுக்கும்
இந்த தேர்தலின் போது நல்ல
சந்தர்ப்பத்தை அரசாங்கம் வழங்கியது
என்றும் தெரிவித்துள்ளார். |
|
|
|
|
|