பாதுகாப்பு
படையினர் யாழ் குடாநாட்டில் உள்ள 50 பாடசாலைகளுக்கு கணனிகள் அன்பளிப்பு
குடாநாட்டில் உள்ள பாடசாலைகளின் கல்வித் தரத்தை
உயர்த்தும் நன்நோக்கில் அப்பிரதேச
பாடசாலைகளுக்கு 50 கணனிகள் கடந்த திங்களன்று
இலவசமாக வழங்கப்பட்டதாக பாதுகாப்பு வட்டாரங்கள்
தெரிவித்தன.
இதற்கான ஏற்பாடுகளை யாழ். கட்டளைத் தளபதி மேஜர்
ஜெனரல் ஜீ.ஏ. சந்திரசிறி மேற்கொண்டார். இவரது
கோரிக்கையை அடுத்து நெஸ்லே லங்கா லிமிட்டட்
மற்றும் ஸ்ரீலங்கா மீளமைப்பு நிறுவனம் என்பன
இந்த கணனிகளைஅன்பளிப்பாக வழங்கின. இக்
கணனிகளை வழங்கும் வைபவம் தௌ;ளிப்பளை யூனியன்
பாடசாலையில் இம்மாதம் 7 ஆம் திகதி நடைபெற்றது.
மேஜர் ஜெனரல் ஜீ.ஏ. சந்திரசிறி தலைமையில்
நடைபெற்ற இவ்வைபவத்தில் பாடசாலை அதிபர்களிடம்
கணனிகள் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டன.
வடமாகாண கல்விப் பணிப்பாளர்கள், யாழ் மாவட்ட
மேலதிகக் கல்விப் பணிப்பாளர், மற்றும்
அதிபர்கள், ஆசரியர்கள், மாணவர்கள் உட்பட
பெருந்தொகையானோர் இந்த வைபவத்தில் கலந்த
கொண்டனர்.
இதற்கு முன்னரும் யாழ். பாதுகாப்புப் படைத்
தலைமையகத்தின் மூலம் க.பொ.த. உயர்தரப்
பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற 21
பாடசாலைகளுக்கு கணனிகள் இலவசமாக வழங்கப்பட்டமை
குறிப்பிடத்தக்கது