<%@ Language=JavaScript %> Welcome./\. Welcome. !
 

எங்கள் தேசம் இணையம்

 

www.engaltheaasam.com Welcome To Visit   

 
 

 

 

செய்தி் புதுப்பிக்கப்பட்ட நாள்.செப்டம்பர்.10.2009

* தமிழ்  சினிமா*

*ஜோ‌திட‌ வார பலன்*

ஜனநாயக மக்கள் விடுதலை முன்னண புளொட் நகரசபை உறுப்பினர்கள் பதவி சத்தியப்பிரமாணம்!

ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்)சார்பில் வவுனியா நகரசபை தேர்தலில் போட்டியிட்டு வெற்றியீட்டிய வேட்பாளர்கள் இன்று (10.09.2009) காலை நகரசபை உறுப்பினர்களாக பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டுள்ளனர். தமிழரசுக் கட்சியின் நீண்டகால உறுப்பினரும் தந்தை செல்வா நற்பணி மன்ற தலைவரும் சமாதான நீதவானும் பிரபல சமூக சேவையாளருமாகிய இறைபணிச் செம்மல் வை.தேவராஜா முன்னிலையில் திரு.ஜி.ரி.லிங்கநாதன், திரு.சு.குமாரசாமி, திரு.க.பார்த்தீபன் ஆகியோர் நகரசபை உறுப்பினர்களாக சத்தியப்பிரமாணம் செய்து கொண்ட வைபவத்தில் புளொட் அமைப்பின் வன்னி மாவட்ட பொறுப்பாளர் திரு.பவன், வவுனியா மாவட்ட பொறுப்பாளர் திரு.நிசாந்தன், வவுனியா மாவட்ட அரசியல் பொறுப்பாளர் திரு.சிவம் ஆகியோருடன் நகரசபை வேட்பாளர்கள்,கட்சி உறுப்பினர்கள்,பெரியோர்கள், ஆதரவாளர்கள் என பெருமளவானோர் கலந்துகொண்டனர்.

இதன் பின்னர் நகரசபை உறுப்பினர்களும்,கட்சி முக்கியஸ்தர்களும்,ஆதரவாளர்களும் கோவிற்குளத்தில் அமைந்துள்ள மக்கள் யுத்தத்தின் மகத்தான தளபதி அமரர் உமாமகேசுவரனின் நினைவு இல்லத்திற்கு சென்று மலரஞ்சலி செலுத்தினர்.

<<முன்னைய பதிவுகள்>>

 

Last update: 20-06-2008. Desigin and Copyright Welcome. to Visit.Engaltheaasam.com ..!