|
வணக்கம்!
இதயவீணையின் செய்திகள்!! 10.09.2009
செய்தி ஆசிரியர் :- ஷோபா
வாசித்தளிப்பவர் :- அனுஷா
முதலில் தலைப்புச் செய்திகள்!!!
வன்னியில்
இருந்து இடம்பெயர்ந்து நலன்புரி
முகாம்களிலுள்ள யாழ்.மாவட்டத்தைச்
சேர்ந்த 6,833 பேர் நாளை
யாழ்ப்பாணத்திற்கு அழைத்துச்
செல்லப்படவுள்ளனர்.
புலிகளால்
சேதப்படுத்தப்பட்ட சரித்திர
முக்கியத்துவம் வாய்ந்த யாழ்.கோட்டையை
மீண்டும் பழைய நிலைமைக்கு கொண்டுவரும்
பொருட்டு புனரமைக்கப்படவுள்ளது.
வடமாகாணத்தில்
அரச சேவையில் புதிதாக
30,உத்தியோகத்தர்களை அரச சேவைகள்
ஆணைக்குழு நியமித்துள்ளது.
வன்னியிலிருந்து இடம்பெயர்ந்த
மக்களுக்கு மேலும் 125 மில்லியன் ரூபா
பெறுமதியான மருந்துப் பொருட்களை
இந்தியா அன்பளிப்பு செய்துள்ளது.
வடக்குக்
கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்தி
பணிக்கு புலம்பெயர்ந்த தமிழ் மக்களின்
ஒத்துழைப்பு மிகவும் அவசியம் என
அமைச்சர் மஹிந்த சமரசிங்க
தெரிவித்துள்ளார்.
வன்னியில் இருந்து இடம்பெயர்ந்து
வவுனியாவிலுள்ள அகதி முகாம்களில்
தங்கியுள்ளவர்களில் யாழ்.மாவட்டத்தைச்
சேர்ந்த 6,833,பேர் நாளை
யாழ்ப்பாணத்திற்கு அழைத்துச்
செல்வதற்கான அனைத்து ஏற்பாடுகளும்
மேற்கொள்ளப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட
அரசாங்க அதிபர் கே.கணேஷ்
தெரிவித்துள்ளார்.
நலன்புரி நிலையங்களில்
தங்கியுள்ளவர்களில் யாழ்.மாவட்டத்தைச்
சேர்ந்த 35,000,பேரின் விபரங்களை
வவுனியா அரச அதிபர் யாழ்.செயலகத்திற்கு
அனுப்பியிருந்ததாகவும் அந்த விபரங்கள்
பிரதேச செயலகங்களுக்கு அனுப்பப்பட்டு
ஏனைய தரவுகள் சேகரிக்கப்பட்டுள்ளதாகத்
தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் முதலில்
கிடைத்த தகவல்களின் அடிப்படையில்
6,833,பேர் வவுனியாவில் இருந்து நாளை
அழைத்துச் செல்லப்படவுள்ளதாகத்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை நாளைய தினம் வவுனியா நலன்புரி
முகாம்களிலிருந்து அழைத்துச்
செல்லப்படும் மக்கள் பிரதேச
செயலர்களிடம் ஒப்படைக்கப்பட்டு அவர்கள்
மூலமாக உறவினர்களிடம்
சேர்க்கப்படுவார்கள் எனத்
தெரிவிக்கப்பட்டுள்ளதும்
குறிப்பிடத்தக்கதாகும்.
-------------------------
புலிகளால் சேதப்படுத்தப்பட்ட சரித்திர
முக்கியத்துவம் வாய்ந்த யாழ்.கோட்டையை
மீண்டும் பழைய நிலைமைக்கு கொண்டுவரும்
பொருட்டு புனரமைக்கப்படவுள்ளது.
யாழ்.படைத் தளபதியின் வழிகாட்டலில்
இராணுவத்தின் 51வது படைப்பிரிவினர்
இந்தப் புனரமைப்பு பணிகளில் ஈடுபட்டு
வருவதாகத் தேசிய பாதுகாப்பிற்கான ஊடக
மத்திய நிலையம் தெரிவித்துள்ள அதேவேளை
1618ம் ஆண்டு யாழ்ப்பாணத்தைக்
கைப்பற்றிய போர்த்துக்கேயர் இந்தக்
கோட்டையை அமைத்ததாகவும் அதன்பின்னர்
1658ல்,யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றிய
ஒல்லாந்தர் இக்கோட்டையை மேலும்
விஸ்தரித்து புனரமைத்ததாகவும்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிற்காலத்தில் புலிகள் தமது பயங்கரவாத
நடவடிக்கைகளிற்கு இக்கோட்டையைப்
பயன்படுத்தி வந்ததின் காரணமாக
யாழ்.கோட்டை
பெருஞ்சேதத்திற்குள்ளானதாகவும் 1996ம்
ஆண்டு படையினர் மேற்கொண்ட படை
நடவடிக்கையினால் யாழ்.கோட்டையை
படையினர் முற்றாகக் கைப்பற்றியதாகத்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த
யாழ்.கோட்டையைப் பாதுகாத்து உல்லாசப்
பயணிகளைக் கவரும் இடமாக
மாற்றியமைக்கும் நோக்கில் தற்போது
புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு
வருவதாகத் தேசிய பாதுகாப்பிற்கான ஊடக
மத்திய நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.
----------------------
வவுனியா நிவாரண முகாம்களில் இருக்கும்
இடம்பெயர்ந்தோரைப் பொறுப்பேற்க
அவர்களின் உறவினர்கள் முன்வந்தால்
அவர்களை விடுவிப்பதற்கு அரசாங்கம்
தயாராகவுள்ளதாக மீள்குடியேற்றம்
மற்றும் அனர்த்த நிவாரண சேவைகள்
அமைச்சர் ரிஷாத் பதிய10தீன்
தெரிவித்துள்ளார்.
இது குறித்த மாதிரி விண்ணப்பப் படிவம்
ஒன்று பத்திரிகைகளில்
பிரசுரிக்கப்பட்டுள்ளதாகவும் இந்த
விண்ணப்பங்களில் பல அதிகாரிகள்
கையெழுத்திட வேண்டும் எனத்
தெரிவித்துள்ளதுடன் குறிப்பாக ஒருவர்
விடுவிக்கப்படுவதற்கு முன்னர்
பாதுகாப்புப் படையினர் வவுனியா கட்டளை
அதிகாரி கையெழுத்திட வேண்டும் எனத்
தெரிவித்துள்ள அமைச்சர் ரிஷாத்
பதிய10தீன் பாதுகாப்பு காரணங்களால்
இந்த நடைமுறை செயற்படுத்தப்படுவதாகவும்
மேலும் தெரிவித்துள்ளார்.
------------------
இடம்பெயர்ந்த மக்களுக்கென சேவையாற்றிய
இந்திய மருத்துவக் குழு தனது பணியை
முடித்துக் கொண்டு நாடு
திரும்பியுள்ளது.
இந்திய மருத்துவக் குழுவினரைப்
பாராட்டும் நிகழ்வு நேற்று
கொழும்பிலுள்ள தாஜ் சமுத்ராவில்
நடைபெற்ற நடைபெற்றுள்ளதாகவும்
இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக
அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா
கலந்து கொண்டுள்ளதாகத்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
60 பேர் கொண்ட இந்திய மருத்துவக் குழு
புல்மோட்டையில் மருத்துவமனை அமைத்துச்
செயற்பட்டு வந்ததுடன் பின்னர் வவுனியா
நிவாரணக் கிராமங்களில் தனது பணிகளைத்
தொடர்ந்து வந்ததாகவும் மெனிக்பாம்
உட்பட பல நிவாரணக் கிராமங்களில் மூன்று
மாத காலத்தில் சுமார் 42,ஆயிரம்
நோயாளருக்குச்
சிகிச்சையளித்துள்ளதாகவும் இந்திய உயர்
ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
----------------------
தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வு
தொடர்பான விசேட பேச்சுவார்த்தை ஒன்று
முதலாளிமார் சம்மேளனத்திற்கும்
தொழிற்சங்கங்களுக்கும் இடையில் இன்று
கொழும்பில் நடைபெறுவதாகத்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதலாளிமார் சம்மேளனத்தின் பிரதி
செயலாளர் நாயகம் கனிஷ்ட வீரசிங்கவினால்
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பொது
செயலாளர் ஆறுமுகன் தொண்டமானிற்கும்
ஏனைய கூட்டு ஒப்பந்தத்தை சார்ந்த
தொழிற்சங்கங்களுக்கும் விடுத்துள்ள
அழைப்பைத் தொடர்ந்தே மீண்டும்
இச்சந்திப்பு இடம்பெறுவதாகவும்
இதன்போது இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்
இலங்கை தேசிய தோட்ட தொழிலாளர் சங்கம்
பெருந்தோட்ட தொழிற்சங்க கூட்டு கமிட்டி
ஆகிய தொழிற் சங்கங்களின் பிரதிநிதிகள்
முதலாளிமார் சம்மேளனத்துடன் தோட்ட
தொழிலாளரின் சம்பளத்தை அதிகரிப்பது
தொடர்பாக பேச்சுவார்த்தை
நடாத்துவதாகவும் தோட்டத்
தொழிலாளர்களின் சம்பளத்தை நாளொன்றிற்கு
500 ரூபாவாக உயர்த்துவதற்கு
வலியுறுத்தித் தொழிற்சங்க நடவடிக்கை
மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
-----------------
வடமாகாணத்தில் அரச சேவையில் புதிதாக
30,உத்தியோகத்தர்களை அரச சேவைகள்
ஆணைக்குழு நியமித்துள்ளது.
திருகோணமலையில் நேற்று நடைபெற்ற வைபவம்
ஒன்றில் வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல்
ஜி.ஏ.சந்திரசிறி இதற்கான நியமனக்
கடிதங்களை வழங்கியுள்ளதுடன்
வழங்கப்பட்ட நியமனங்களுக்கான
தகுதியுடையவர்கள் கிளிநொச்சி
முல்லைத்தீவு மன்னார் மற்றும்;வவுனியா
மாவட்டங்களில் இருந்து தெரிவு
செய்யப்பட்டுள்ளதாகவும்
அறிவிக்கப்பட்டுள்ளது.
------------------
வன்னியிலிருந்;து இடம்பெயர்ந்த
மக்களுக்கு மேலும் 125 மில்லியன் ரூபா
பெறுமதியான மருந்துப் பொருட்களை
இந்தியா அன்பளிப்பு செய்துள்ளது.
சுகாதார அமைச்சர் நிமல் சிறிபால டி
சில்வாவிடம் இந்திய அரசாங்கத்தின்
மருந்துப் பொருட்கள்
கையளிக்கப்பட்டுள்ளது.இந்நிகழ்வில்
கலந்து கொண்டு கருத்துத்
தெரிவித்துள்ள இலங்கைக்கான இந்திய
உயர்ஸ்தானிகர் ஆலொக் பிரசாத் இந்தியா
இடம்பெயர்ந்த மக்களை அவர்களது சொந்த
இடங்களில் குடியமர்த்துவதற்கு மேலும்
பல அத்தியாவசிய உதவிகளை எதிர்வரும்
காலங்களில் இலங்கைக்கு வழங்கவுள்ளதாகத்
தெரிவித்துள்ளார்.
நலன்புரி முகாம்களில் தங்கியுள்ள
சுமார் 50,000 மக்களுக்கு மருத்துவ
சிகிச்சை வழங்குவதற்கு எனக் கடந்த
ஜனவரி மாதத்திலிருந்து 100,மில்லியன்
ரூபா பெறுமதியான மருந்து மற்றும்
உபகரணங்களை இந்தியா
வழங்கியுள்ளதாகவும் இடம்பெயர்ந்த
மக்களுக்கு உரிய தருணத்தில் மருத்துவ
உதவிகளை வழங்கிய இந்தியாவிற்கு
சுகாதார அமைச்சு நன்றி தெரிவித்துக்
கொண்டுள்ளதும் குறிப்பிடத்தக்கதாகும்.
--------------------------------
உயர்கல்வி நடவடிக்கைகளுக்காக
எதிர்வரும் 2015ம் வருடம் வரை உதவி
ஒத்துழைப்புகளை வழங்குவதற்கு உலக வங்கி
முன்வந்துள்ளதாக உயர் கல்வியமைச்சர்
விஸ்வ வர்ணபால பாராளுமன்றத்தில்
தெரிவித்துள்ளார்.
தற்போது உயர்கல்வி துறையில் 60ற்கு
மேற்பட்ட கருத்திட்டங்கள்
நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதுடன்
இதற்கென 10,000மில்லியன் ரூபா
ஒதுக்கப்பட்டுள்ளதுடன்
பல்கலைக்கழகங்களிலிருந்து பகிடிவதைகளை
முற்றாக ஒழிப்பதற்குரிய நடவடிக்கைகளை
மேற்கொள்வதற்கும் அதற்கு எதிரான சட்ட
நடவடிக்கைகளை கடுமையாக்குவதற்கும்
கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும்
அமைச்சர் விஸ்வ வர்ணபால
தெரிவித்துள்ளார்.
பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின்
சேவை வயதெல்லையை 55ல்,இருந்து 57,ஆக
அதிகரிப்பதற்கு நடவடிக்கை
எடுக்கப்பட்டுள்ளதாகவும் பல்கலைக்கழக
அனுமதியை மேலும் அதிகரிப்பதற்கும்
அடுத்த வருடம் முதல் 25,000 பேரை
பல்கலைக்கழகங்களில் இணைத்துக்
கொள்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும்
எனத் தெரிவித்துள்ள உயர்
கல்வியமைச்சர் இந்திய நீதிமன்றங்களில்
பகிடிவதையை மனித உரிமை துஸ்பிரயோகமாக
தீர்ப்பளித்து தண்டனைகள் வழங்கப்படுவதை
இங்கு நாம் குறிப்பிட வேண்டும் எனத்
தெரிவித்துள்ளதுடன் பகிடிவதைகள்
நிறுத்தப்பட வேண்டும் எனவும்
அதற்குரிய கடும் நடவடிக்கைகள்
மேற்கொள்ளப்படும் எனவும் மேலும்
தெரிவித்துள்ளார்.
-----------------------------
வடக்கு கிழக்கு மாகாணங்களின்
அபிவிருத்தி பணிக்கு புலம்பெயர்ந்த
தமிழ் மக்களின் ஒத்துழைப்பு மிகவும்
அவசியம் என மனித உரிமைகள் அமைச்சர்
மஹிந்த சமரசிங்க நேற்று இடம்பெற்ற
ஊடகவியலாளர் மாநாட்டில்
தெரிவித்துள்ளார்.
வன்முறைகளை நிறைவிற்குக் கொண்டு
வருவதினை சமாதானம் என கூறிவிட முடியாது
என்றும் மனித விழுமியங்களின் உண்மையான
மேம்பாடே சமாதானம் எனத்
தெரிவித்துள்ளதுடன் எதிர்காலத்தில்
ஏற்படக்கூடிய முறுகல் நிலைகளை
தவிர்க்கும் நிரந்தர சமாதானத்தை
ஏற்படுத்துவதற்கு நடவடிக்கை
எடுக்கப்பட வேண்டும் எனவும்
இடம்பெயர்ந்து முகாம்களில் தங்கியுள்ள
மக்களுக்கு நிவாரணங்களை வழங்குவதற்கும்
அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்வதற்கும்
புலம்பெயர் தமிழ் மக்கள் ஒத்துழைப்பு
வழங்க வேண்டும் எனவும் அமைச்சர்
மஹிந்த சமரசிங்க மேலும்
தெரிவித்துள்ளார்.
-----------------------
பெற்றோரை பிரிந்த நிலையில் திருகோணமலை
மாவட்டத்தின் புல்மோட்டை நலன்புரி
நிலையத்தில் தங்கியிருந்த இரு
குழந்தைகள் வவுனியா கோவில்குளம்
சிவன்கோவில் அருளகம் சிறுவர்
இல்லத்திற்கு அனுப்பி
வைக்கப்பட்டுள்ளனர்.
நான்கு வயதான தயாபரன் புகழரசி மற்றும்
2 வயதான தயாபரன் சாகலரசி என்னும் இரு
சகோதரிகளுமே அழைத்து வரப்பட்டுள்ளதாக
வவுனியா கோவில்குளம் சிவன்கோவில்
அறங்காவலர் அவையின் செயலாளர் ஆறுமுகம்
நவரட்ணராஜா தெரிவித்துள்ளதுடன்
புல்மோட்டை நலன்புரி நிலையத்தில்
தங்கியிருந்த இவர்களை இனங்கண்ட சிறுவர்
பராமரிப்பு அதிகாரிகள்
கெப்பிட்டிகொல்லாவ நீதிமன்றத்தின்
கவனத்திற்கு கொண்டு வந்துள்ளதினைத்
தொடர்ந்து நீதிமன்றம் இருவரையும்
வவுனியா கோவில் குளம் அருளகம் சிறுவர்
இல்லத்திற்கு அனுப்பி வைக்குமாறு
உத்தரவிட்டுள்ளது.
வவுனியா கோவில்குளம் சிவன் கோவில்
அருளகம் சிறுவர் இல்லத்தில் வைத்து
பராமரிக்கப்பட்டு வரும் இந்த
குழந்தைகளின் பெற்றோர் அல்லது
நெருங்கிய உறவினர்கள் இருந்தால் ஆலய
நிர்வாகத்துடன் தொடர்பு கொள்ளுமாறு
சிவன் கோவில் அறங்காவலர் அவையின்
செயலாளர் கோரிக்கை விடுத்துள்ளதும்
குறிப்பிடத்தக்கதாகும்.
-------------------------------
வன்னியில் மோதல் இடம்பெற்ற பகுதிகளில்
நிலக்கண்ணிவெடிகளை அகற்றுவதற்கு
அமெரிக்க அரசாங்கம் தனது உதவிகளை
மீண்டும் வழங்குவதற்கு முன்வந்துள்ளது.
இதனடிப்படையில் ஒரு லட்சம் டொலர்
பெறுமதியான கண்ணிவெடிகளை அகற்றும்
இயந்திரங்களை வழங்குவதுடன் இலங்கை
பாதுகாப்புப் படையினருக்குக்
கண்ணிவெடிகளை அகற்றுவதற்கான
பயிற்சிகளையும் வழங்கவுள்ளதாகவும்
வடக்கு மகாணத்தில் இருந்து
இடம்பெயர்ந்து நலன்புரி நிலையங்களில்
தங்கவைக்கப்பட்டுள்ள மக்களை விரைவில்
அவர்களின் சொந்த இடங்களில்
மீளகுடியமர்த்தும் நோக்கிலேயே இந்த
உதவிகள் வழங்கப்படுவதாக கொழும்பிலுள்ள
அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.
----------------------------------
குடிவரவு குடியகழ்வு திணைக்களத்தினால்
மன்னார் மாவட்டத்தில் நடமாடும்
சேவையொன்று மேற்கொள்ளப்படுவதாக மன்னார்
மாவட்ட அரசாங்க அதிபர்
ஏ.நீக்கலாஸ்பிள்ளை தெரிவித்துள்ளார்.
இந்த நடமாடும் சேவை இன்றும் நாளையும்
எதிர்வரும் 28ம் திகதிகளில் மன்னார்
மாவட்ட செயலகத்தில் இடம்பெறுவதாகவும்
இந்த சேவையின் ஊடாகக் கடவுச்சீட்டு
புதுப்பித்தல் கடவுச்சீட்டுகளிற்கான
விண்ணப்பங்கள் போன்ற நடவடிக்கைகளை
மேற்கொள்ள முடியும் என மன்னார் மாவட்ட
அரசாங்க அதிபர் ஏ.நீக்கலஸ்பிள்ளை
மேலும் தெரிவித்துள்ளார்.
-----------------------
தென்மாகாண சபைத் தேர்தலிற்கான அனைத்து
ஏற்பாடுகளும் தயார் நிலையிலுள்ளதாகத்
தேர்தல் செயலகம் தெரிவித்துள்ளது.
தென்மாகாண சபைத் தேர்தலில் 17 லட்சத்து
61 ஆயிரத்து 859 பேர்
வாக்களிப்பதற்குத் தகுதி
பெற்றுள்ளதாகவும் தேர்தல் வாக்குப்
பதிவுகளுக்காக காலி மாத்தறை மற்றும்
ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில்
1,485,தேர்தல் மத்திய நிலையங்கள்
அமைக்கப்பட்டுள்ளதுடன் வாக்குகளை
எண்ணுவதற்காக 161மத்திய நிலையங்கள்
நிறுவப்பட்டுள்ளதாகவும் இதில்
தபால்மூல வாக்குகளை எண்ணுவதற்கான 11
மத்திய நிலையங்களும் உள்ளடங்குவதாகத்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை தென்மாகாண சபைக்கான
தேர்தலிற்கான வாக்காளர் அட்டை
விநியோகம் இந்த மாதம் 22ம் திகதி
ஆரம்பமாகவுள்ளதாகவும் இந்த நடவடிக்கை
அடுத்த மாதம் 2ம் திகதி வரை
இடம்பெறவுள்ளதாக பிரதி தபால் மா அதிபர்
ஆர்.டி.பி.காமினி தெரிவித்துள்ளதுடன்
வாக்காளர் அட்டைகள் இந்த மாதம்
18ம்திகதி அஞ்சல் காரியாலங்களுக்கு
அனுப்பி வைக்கப்படவுள்ளதாகவும் மேலும்
தெரிவித்துள்ளதும்
குறிப்பிடத்தக்கதாகும்.
------------------------
டென்மார்க்கிலுள்ள உலக சிறுவர்
காப்பகம் சிறுவர்களுக்கு உதவிகளை
வழங்கும் பொருட்டுلل இந்து
மதபீடத்திற்கு இரண்டு லட்சம் ரூபா
நிதியினை வழங்கியுள்ளது.
இந்த நிதியின் மூலம் வவுனியா நிவாரண
முகாமிலுள்ள சிறுவர்களுக்கு உதவி
செய்யவுள்ளதாகத் தெரிவித்துள்ள
சர்வதேச இந்துமதபீடத்தின் செயலாளர்
பாபு சர்மா குறிப்பாக வவுனியா நிவாரண
முகாம்களிலுள்ள சிறுவர்களின் கல்வி
மேம்பாட்டிற்காக உதவி செய்யவுள்ளதாகத்
தெரிவித்துள்ளாh.
அங்குள்ள சிறுவர்களுக்குக் கற்றல்
நடவடிக்கைகளுக்குரிய உபகரணங்களைச்
சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின்
உதவியுடன் நேரடியாக முகாம்களிலுள்ள
சிறுவர்களுக்குக் கையளிக்கவுள்ளதாக
இந்துமதபீடத்தின் செயலாளர் பாபு சர்மா
தெரிவித்துள்ளதும்
குறிப்பிடத்தக்கதாகும். |