|
வணக்கம்!
இதயவீணையின் செய்திகள்!! 09.09.2009
செய்தி ஆசிரியர் :- ஷோபா
வாசித்தளிப்பவர் :- அனுஷா
முதலில் தலைப்புச் செய்திகள்!!!
நலன்புரி
முகாம்களிலுள்ள மக்களை வெளியார்
பொறுப்பேற்க விரும்பும் பட்சத்தில்
அதற்காக விண்ணப்பிக்க முடியும் என
மீள்குடியேற்ற அமைச்சின் செயலாளர்
தெரிவித்துள்ளார்.
இலங்கையின்;முதலாவது ஆறு நட்சத்திர
ஹோட்டல் கற்பிட்டியில்
அமைக்கப்படவுள்ளது.
சிறிய மின்
திட்டங்கள் மூலம் 500 மெஹாவோர்ட்ஸ்
மின்சாரம் பெறுவதற்கான அனுமதி
வழங்கப்பட்டுள்ளதாக மின்சக்தி எரிசக்தி
அமைச்சு தெரிவித்துள்ளது.
பயங்கரவாதத்தை
இல்லாதொழிப்பதற்கு இலங்கை இராணுவத்தின்
ஒத்துழைப்பு அவசியம் என பிலிப்பைன்ஸ்
தெரிவித்துள்ளது.
வடமாகாணத்தில்
மின்சார விநியோகத்தை விஸ்தரிக்கும்
பொருட்டு 05 மின் திட்டங்கள்
ஆரம்பிக்கப்படவுள்ளதாக மின்சார சபை
அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வவுனியா யாழ்ப்பாணம் மற்றும்
திருகோணமலையிலுள்ள அரசாங்க நிவாரணக்
கிராமங்களிலும் நலன்புரி
நிலையங்களிலும் தங்க
வைக்கப்பட்டிருக்கும் குடும்பங்களை
வெளியார் பொறுப்பேற்க விரும்பினால்
அதற்காக விண்ணப்பிக்க முடியும் என
அனர்த்த நிவாரண சேவைகள் மற்றும்
மீள்குடியேற்ற அமைச்சின் செயலாளர்
யூ.எல்.எம்.ஹால்டீன் தெரிவித்துள்ளார்.
பொறுப்பேற்கவுள்ள நபர்களுக்குத்
தங்குமிட வசதி உணவு உடை மற்றும் ஏனைய
தேவைகள் வழங்கப்படுவதை விண்ணப்பதாரி
தமது விண்ணப்பப் படிவத்தில்
உறுதிப்படுத்துவதுடன் பிரதேச கிராம
சேவையாளர் ஊடாக பிரதேச செயலாளரிடம்
விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட
வேண்டும் எனவும்لل பிரதேச செயலாளர்
தனது சிபாரிசுடன் மாவட்டச் செயலாளரின்
சிபாரிசையும் முன்வைத்துلل அவர் ஊடாக
குறித்த நிவாரண கிராமம் அமைந்துள்ள
மாவட்டச் செயலாளருக்கு அனுப்பி வைக்க
வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
--------------------------
திருகோணமலை தம்பலகாமத்தில் ரை ஸ்டார்
நிறுவனத்தின் 34வது ஆடைத்
தொழிற்சாலையைக் கிழக்கு மாகாண ஆளுனர்
ரியல் அட்மிரல் மொஹான் விஜயவிக்ரம
மற்றும் கிழக்கு மாகாண முதலமைச்சர்
சிவனேசதுரை சந்திரகாந்தன் ஆகியோர்
திறந்து வைத்துள்ளனர்.
இத்தொழிற்சாலையில் தம்பலகாமம்
பிரதேசத்தைச் சேர்ந்த சுமார் 1,000
பேருக்கு வேலை வாய்ப்பு
வழங்கப்பட்டுள்ளதாகவும் தொழிற்சாலையில்
இரண்டு வயதிற்குட்பட்ட
குழந்தைகளிற்கான ஆடைகள்
தயாரிக்கப்படும் முதலாவது கேள்வி
ஒப்பந்தம் பிரித்தானியாவிலிருந்;து
கிடைத்துள்ளதாக ரை ஸ்ரார் நிறுவனத்தின்
தலைவர் குமார் தேவபுர தெரிவித்துள்ளார்.
-------------------------
இலங்கையின்;; முதலாவது ஆறு நட்சத்திர
ஹோட்டல் கற்பிட்டியில்
அமைக்கப்படவுள்ளது.
இந்த ஆறு நட்சத்திர ஹோட்டலிற்கான
அடிக்கல் நேற்றுக் காலை
நடாட்டப்பட்டுள்ளதாகவும் உலகில்
முன்னணியில் திகழும் ஹோட்டல் நிர்வாக
நிறுவனமான சிக்ஸ் சென்ஸஸ் இந்த ஆறு
நட்சத்திர ஹோட்டலை முகாமைத்துவம்
செய்யவுள்ளதாகவும் சுற்றுலாத்துறை
ஊக்குவிப்பு அமைச்சர் பைசர் முஸ்தபா
தெரிவித்துள்ளார்.
நாட்டில் சுமார் 30 வருட காலமாக
நீடித்து வந்த பயங்கரவாதம் ஜனாதிபதி
மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில்
முடிவிற்குக் கொண்டு வரப்பட்டுள்ளதைத்
தொடர்ந்து சர்வதேச தரம் கொண்ட
நிறுவனங்கள் நாட்டில் முதலீடு
செய்வதற்கும் முகாமைத்துவம்
செய்வதற்கும் முன்வந்துள்ளதாகவும் இதன்
மூலம் சுற்றுலாத்துறை என்றுமில்லாதவாறு
உயர்ந்த இடத்தை அடையவுள்ளதாக அமைச்சர்
பைஸர் முஸ்தபா மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை டச் பே ரிசோட்ஸ் ஆறு
நட்சத்திர ஹோட்டலானது 175 மில்லியன்
அமெரிக்க டொலர் செலவில்
அமைக்கப்படவுள்ளதாகவும் 5 ஆயிரம்
ஏக்கர் நிலப்பரப்பில் இயற்கையான
சதுப்பு நிலத்திற்கு மத்தியில் இது
அமைக்கப்படவுள்ளதுடன் முதற்கட்டமாக 5
ஆயிரம் அறைகள் அமைக்கப்படவுள்ளதாக
ஹோட்டலின் தலைவர் நீல் த சில்வா
தெரிவித்துள்ளார்.
------------------------
நாடளாவிய ரீதியிலுள்ள 695
பாதுகாப்பற்ற ரயில் கடவைகளையும் இந்த
வருட இறுதிக்குள் திருத்தியமைப்பதற்கு
நடவடிக்கை எடுக்கப்படுமென பயணிகள்
போக்குவரத்து அமைச்சர் லசந்த
அழகியவண்ண நேற்றுப் பாராளுமன்றத்தில்
தெரிவித்துள்ளார்.
தற்போது நாட்டிலுள்ள ஐம்பது வீத
பாதுகாப்பற்ற ரயில் கடவைகளின் பணிகள்
தடைப்பட்டுள்ளதாகவும் இவற்றில்
பணிபுரிந்தவர்கள் தமக்கான சம்பளம்
போதாது என்ற நிலையில் சுயவிருப்பத்தின்
பேரில் தொழிலிலிருந்து விலகிச்
சென்றுள்ளதாகத் தெரிவித்துள்ளதுடன்
இப்பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட்டு
மீண்டும் இதே ரயில் கடவைகளை இயங்க
வைப்பதற்கு உரிய நடவடிக்கை
எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ள
அமைச்சர் லசந்த அழகியவண்ண சமுர்த்தி
அதிகார சபையுடன் இணைந்து இதற்குரிய
நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும்
இவ்விடயம் தொடர்பாகச் சமுர்த்தி
அதிகார சபையுடன் நான்கு சுற்றுப்
பேச்சுவார்த்தைகள்
இடம்பெற்றுள்ளதாகவும் ஓரிரு தினங்களில்
இறுதிப் பேச்சுவார்த்தை
நடைபெறவுள்ளதாகவும் மேலும்
தெரிவித்துள்ளார்.
--------------------------
உயிர்வாயுلل காற்று மற்றும் நீர்
ஆகியவற்றின் ஊடான சிறிய மின்
திட்டங்கள் மூலம் 500 மெஹாவோர்ட்ஸ்
மின்சாரம் பெறுவதற்கான அனுமதி
வழங்கப்பட்டுள்ளதாக மின்சக்தி எரிசக்தி
அமைச்சு தெரிவித்துள்ளது.
இத்தகைய 159 சிறிய ரக மின்
திட்டங்களின் ஊடாக 500 மெஹாவோர்ட்ஸ்
மின்சாரத்தைப் பெற்றுக் கொள்வதற்கான
திட்டம் இரு வருடங்களில் பூர்த்தி
செய்யப்படவுள்ளதுடன் நாட்டின் மொத்த
மின்சாரத் தேவையில் 10 வீதத்தை
இத்திட்டங்களின் ஊடாகப் பெற்றுக்
கொள்வதற்கு மின்சக்தி எரிசக்தி அமைச்சு
எதிர்பார்ப்பதாகவும் காற்றினூடாக 80
மெஹாவோர்ட்ஸ் மின்சாரம் உற்பத்தி
செய்வதற்காக அனுமதி
வழங்கப்பட்டுள்ளதாகவும்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
குப்பை கூளங்கள் கரும்புச் சக்கை உமி
என்பவற்றின் ஊடாக மின்சாரம் உற்பத்தி
செய்யும் பல திட்டங்கள் ஏற்கனவே
ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன் இவற்றின்
ஊடாக 130 மெஹாவோர்ட்ஸ் மின்சாரம்
உற்பத்தி செய்யப்படுவதாகவும் மேலும்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
----------------------------
தெனியாய பிரதேசத்தில் வைத்து
பொலிஸாரால் கைது செய்யப்பட்ட
ஊடகவியலாளர்கள் மூவரும் நேற்று
பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
தெனியாய பகுதியில் தனியார் தோட்டம்
ஒன்றிற்குள் அனுமதியின்றிப்
பிரவேசித்து அங்கு அமைக்கப்பட்டு வரும்
கட்டிடம் ஒன்றைப் படம் பிடித்த
குற்றச்சாட்டின் பேரில் இவர்கள் கைது
செய்யப்பட்டிருந்ததுடன் பொலிஸார்
இவர்கள் மூவரையும் நேற்று மொறவக்கை
நீதவான் நீதிமன்றத்தில்
ஆஜர்படுத்தியிருந்த சமயம் நீதவான்
மூவரையும் தலா 3,000 ரூபா ரொக்கப்
பிணையிலும் 50,000 ஆயிரம் ரூபா சரீர
பிணையிலும் விடுதலை செய்துள்ளார்.
இதேவேளை இந்த ஊடகவியலாளர்கள் மீதான
வழக்கு விசாரணை எதிர்வரும் நவம்பர்
மாதம் 4ம் திகதி நடைபெறவுள்ளதும்
குறிப்பிடத்தக்கதாகும்.
-------------------------
சட்டவிரோதமான முறையில் பிரான்ஸ{க்குச்
செல்ல முற்பட்ட இலங்கையைச் சேர்ந்த ஆறு
பேர் இந்தியாவில் கைது
செய்யப்பட்டுள்ளனர்.
போலிக்கடவுச்சீட்டு மற்றும் போலி
விஸாக்களைப் பயன்படுத்தி குறித்த
இலங்கையர்கள் பிரான்ஸ் செல்ல முற்பட்ட
சமயம் ஹைதராபாத் விமான நிலையத்தில்
வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாகவும்
இலங்கையிலிருந்து தமிழகம் சென்று
போலியான ஆவணங்களைச் சமர்ப்பித்து
இவர்கள் பிரான்ஸ் செல்வதற்கு விஸா
பெற்றுள்ளதாகவும்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
---------------------------
மட்டக்களப்பு பகுதியில்
மீள்குடியேற்றம் தொடர்பான
தேவைகளுக்கென சுமார் 36 மில்லியன் ரூபா
நிதி உதவியை ஜென் ஜப்பானிய தொண்டு
நிறுவனங்கள் வழங்கியுள்ளதாகத்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பில் மீள்குடியேறும்
மக்களுக்குப் பயன்படுத்தும் வகையில்
ஜப்பான் அரசாங்கம் இந்தத் தொண்டு
நிறுவன கூட்டிணைப்புத் திட்டத்தின்
கீழ் இந்த நிதி உதவியை
வழங்கியுள்ளதாகவும் மட்டக்களப்பின்
கிரான் செங்கலடி கிராம சேவகர்
பிரதேசங்களில் மீள்குடியேறும் மக்களின்
ஜீவனோபாயத்திற்கு என 40 விவசாயக்
கிணறுகள் மற்றும் 40 நீர்க் குழாய்கள்
போன்றவை இந்நிதியின் மூலம் பெற்றுக்
கொடுக்கப்படும் எனத்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வாழ்வாதாரத் திட்டத்தின் ஊடாக
1,000 குடும்பங்கள்
நன்மையடையவுள்ளதாகவும் ஜென் ஜப்பானிய
தொண்டு நிறுவனம் பொருளாதாரம் மற்றும்
தனியார் துறை சார்ந்த உதவிகளை 1970ம்
ஆண்டிலிருந்து வழங்கி வருவதாகவும்
ஜப்பானின் 6 தொண்டு நிறுவனங்கள்
கூட்டிணைந்து வடக்கு யுத்தத்தின் போது
இடம்பெயர்ந்த மக்களுக்கு அத்தியாவசிய
நீர் விநியோகம் உட்பட பல தேவைகளுக்கு
ஏற்கனவே 60 மில்லியன் ரூபா வரை
உதவியளித்துள்ளதும்
குறிப்பிடத்தக்கதாகும்.
இந்த வாழ்வாதார நிதி உதவித் திட்டம்
தொடர்பான உடன்படிக்கையில் இலங்கைக்கான
ஜப்பான் தூதுவர் குனியோ டக்காஹஷி
மற்றும் ஜென் தொண்டு நிறுவனத்தின்
கொழும்பு தலைமைக் காரியாலய அதிகாரி
சு10 நிஷிமாரு ஆகியோர் நேற்று
ஜப்பானிய தூதரகத்தில் வைத்துக்
கைச்சாத்திட்டுள்ளதாகவும்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
--------------------
பயங்கரவாதத்தை இல்லாதொழிப்பதற்கு
இலங்கை இராணுவத்தின் ஒத்துழைப்பு
அவசியம் என பிலிப்பைன்ஸ் கோரிக்கை
விடுத்துள்ளது.
உலகின் மிகக்கொடிய பயங்கரவாத அமைப்பான
புலிகளை எத்தகைய யுத்த ரீதியாகத்
தோற்கடிக்க முடிந்தது என்பதனை இலங்கை
உயர் இராணுவ அதிகாரி பிலிப்பைன்ஸ்
இராணுவ அதிகாரிகளுக்கு
விளக்கியுள்ளதாகவும் தற்போது
பிலிப்பைன்ஸிற்கு விஜயம் செய்துள்ள
இலங்கை இராணுவ மேஜர் ஜெனரல் மஹிந்த
ஹதுருசிங்க விளக்கமளித்துள்ளதாகவும்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை பயங்கரவாத அமைப்பு ஒன்றை
இல்லாதொழிப்பதற்கு வெளிநாடொன்று முதல்
தடவையாக இலங்கையிடம் உதவி
கோரியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதும்
குறிப்பிடத்தக்கதாகும்.
----------------
கிழக்கு மாகாணத்தில் உல்லாசப்
பயணிகளின் வருகை அதிகரித்துள்ளதாகத்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிலாவெளி பாசிக்குடா அறுகம்பை ஆகிய
பிரதேசங்களில் முன்னொரு
போதுமில்லாதவாறு பெருந்தொகையான
உள்நாட்டு வெளிநாட்டு சுற்றுலாப்
பயணிகள் வந்து செல்வதாகவும் இங்குள்ள
ஹோட்டல்கள் சுற்றுலாப் பயணிகளால்
நிரம்பிக் காணப்படுவதுடன் தொழில்
வருமானமும் அதிகரித்துள்ளதாகத்
தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் வெளிநாட்டு
உல்லாசப் பயணிகளின் வருகையினால்
அலங்காரப் பொருட்கள் விற்பனையாளர்களும்
ஆர்வத்துடன் வியாபாரத்தில் ஈடுபட்டு
வருவதும் சுட்டுக்காட்டப்பட்டுள்ளது.
இதேவேளை இங்கு வருகின்ற சுற்றுலாப்
பயணிகளுக்குத் தேவையான பொதுவசதிகளை
ஏற்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகள்
மேற்கொள்ளப்பட்டுள்ளதாகக் கிழக்கு
மாகாண அமைச்சர்
எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்
தெரிவித்துள்ளதுடன் இதற்கமைய
முதற்கட்டமாக மட்டக்களப்பு பாசிக்குடா
பிரதேசத்திலுள்ள சுமார் எட்டு ஏக்கர்
காணி தெரிவு செய்யப்பட்டு அங்குவரும்
உல்லாசப் பயணிகளுக்கு தேவையான வாகனத்
தரிப்பிடம் மற்றும் மலசலகூட வசதிகள்
தங்குமிடம் போன்றவற்றை மாகாண
நிதியிலிருந்து ஏற்படுத்திக்
கொடுக்கவுள்ளதாகவும் இதற்குத் தேவையான
சாத்திய வள அறிக்கைகள் பெறப்பட்டு
வருவதாகவும் மேலும் தெரிவித்துள்ளார்.
-------------------------
இடம்பெயர்ந்த மக்கள் தங்கியுள்ள
வவுனியா நலன்புரி நிலையத்தில் இருந்து
புலி உறுப்பினர் ஒருவர் கைது
செய்யப்பட்டுள்ளதாகத்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர் புலிகளின்
சிறைச்சாலைகளுக்கு பொறுப்பாளராகப்
பணியாற்றியதாகவும் புலிகளினால் கைது
செய்யப்படுவர்கள் இவரின் நேரடி
கண்காணிப்பிலேயே சிறையில்
அடைக்கப்பட்டு வந்துள்ளதாகவும் பொலிஸ்
விசாரணையிலிருந்து தெரிய
வந்துள்ளதுடன் ஏற்கனவே கைது
செய்யப்பட்ட புலி உறுப்பினர் ஒருவர்
வழங்கிய தகவலின் அடிப்படையில் இவர்
கைது செய்யப்பட்டுக் குற்றப்
புலனாய்வுப் பிரிவுப் பிரிவினரால்
தொடர்ந்தும் விசாரணைகள்
மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
-----------------------
அமெரிக்காவில் செயற்பட்டு வரும்
புலிகள் இயக்கத்தின் முக்கியஸ்தரான
வி.உருத்திரகுமாரனுக்கு எதிராக
அமெரிக்கா சட்ட நடவடிக்கை எடுக்க
வேண்டும் என அரசாங்கம் கோரிக்கை
விடுத்துள்ளது.
புலிகள் இயக்கத்தின் ஆயுத
கொள்வனவுகளில் ஈடுபட்ட கே.பி எனப்படும்
குமாரன் பத்மநாதன் அண்மையில் கைது
செய்யப்பட்டதைத் தொடர்ந்து தற்போது
அந்த இயக்கத்தில் உருத்திரகுமார்
தீவரமாக செயற்பட்டு வருவதாக அரசாங்கம்
சுட்டிக்காட்டியுள்ளதுடன் இவ்விடயம்
தொடர்பாகக் கருத்துத் தெரிவித்துள்ள
வெளிவிவகாரச் செயலாளர் பாலித கோஹன
தடைசெய்யப்பட்ட ஒரு பயங்கரவாத
இயக்கத்தின் உறுப்பினரும்
பயங்கரவாதத்தை ஆதரித்து வருபவருமான
உருத்திரகுமாரன் சட்டத்தின் முன்
நிறுத்தப்படுவதை அமெரிக்கா
உறுதிப்படுத்த வேண்டும் என
தெரிவித்துள்ளார்.
-------------------------
செனல்-4 வீடியோ காட்சிகள் குறித்து
வெளிநாட்டுத் தூதுவர்கள் மற்றும்
உயர்ஸ்தானிகர்களுக்குத்
தெளிவுபடுத்தும் நிகழ்வு நேற்றைய தினம்
இடர்முகாமைத்துவம் மற்றும் மனித
உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க
தலைமையில் இடம்பெற்றுள்ளது.
இந்த போலியான வீடியோ காட்சி தொடர்பாக
வெளிநாட்டுத் தூதுவர்கள்
உயர்ஸ்தானிகர்களுக்கு அமைச்சர் மஹிந்த
சமரசிங்க விளக்கமளித்துள்ளதுடன்
ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளிக்கும்
வகையில் மாநாடு ஒன்றையும் ஏற்கனவே
நடாத்தியுள்ளதாகத்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
வீடியோக் காட்சிகள் தொடர்பாக
ஜனாதிபதியின் பணிப்புரைக்கு அமைவாக
நான்கு கட்ட விசாரணைகள்
நடாத்தப்பட்டதாகவும் இந்த வீடியோ
காட்சிகள் கேம் கோடர் மூலமாகவே
ஒளிப்பதிவு செய்யப்பட்டவை என்பதுடன்
போலியான ஒலிப்பதிவு நவீன
தொழில்நுட்பத்தின் மூலம்
பதிவாக்கப்பட்டுள்ளதாகவும்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை ஜனாதிபதி செயலகத்தில்
நடைபெற்ற இந்த நிகழ்வில் வெளிவிவகார
செயலாளர் பாலித கோஹன சட்டத்தரணி மொகான்
பீரிஸ் சிரேஷ்ட விரிவுரையாளர் டாக்டர்
சத்துர சில்வா மற்றும் உயர்மட்ட
இராணுவ அதிகாரிகள் ஆகியோர் கலந்து
கொண்டதும் குறிப்பிடத்தக்கதாகும்.
--------------------
வடமாகாணத்தில் மின்சார விநியோகத்தை
விஸ்தரிக்கும் பொருட்டு 05,மின்
திட்டங்கள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக
மின்சார சபை அதிகாரிகள்
தெரிவித்துள்ளனர்.
வவுனியா மன்னார் கிளிநொச்சி
மாவட்டங்களில் ஆரம்பிக்கப்படவுள்ள
இத்திட்டத்திற்கு 25 மில்லியன் ரூபா
நிதி செலவிடப்படவுள்ளதாகவும் வவுனியா
மாவட்டத்தில் இரு திட்டங்களும் பரந்தன்
மற்றும் பூநகரி ஆகிய இடங்களில் தலா
ஒவ்வொரு திட்டங்களும் மன்னார்
மாவட்டத்தில் ஒரு திட்டமும்
ஆரம்பிக்கப்படவுள்ளதாகத்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
வவுனியாلل மன்னார் மாவட்டங்களிற்குத்
தேவையான மின்சாரம் தேசியக்
கட்டமைப்பிலிருந்து வழங்கப்படும் எனத்
தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் பூநகரி
பரந்தன் பிரதேசத்திற்கு அதிஉயர்
அழுத்தம் கூடிய மின்சாரம் கிடைக்கும்
வரை மின்பிறப்பாக்கிகள் மூலம்
மின்சாரம் வழங்கப்படும் எனவும்
மின்சார சபை அதிகாரிகள் மேலும்
தெரிவித்துள்ளனர். |