|
“நாம் பயிரிடுவோம் நாட்டை வளர்படுத்துவோம்”
என்ற தலைப்பில் இன்று மட்டக்களப்பு மாவட்ட
அரசாங்க அதிபர் அலுவலகத்தில் அரசாங்க
அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தலைமையில்
மேற்குறிப்பிட்ட தொனிப்பொருளை மையப்படுத்தி
பெற்றோலியம் மற்றும் கனிய வள அமைச்சர்
A.H.M பௌசி, தேசிய நல்லிணக்க மறுசீரமைப்பு
அமைச்சர் வி.முரளிதரன் அனர்த்த நேவைகள்
அமைச்சர் அமீர் அலி மட்டு மாநகர முதல்வர்
சிவகீத்தா பிரபாகர் பிரதி அரசாங்க அதிபர்
திருமதி கேதீஸ்வரன் உள்ளிட்ட பலரும்
அத்தோடு அமைச்சரவையின் பொறுப்புள்ள
அதிகாரிகள், பிரதேச
செயலாளர்கள்,கூட்டுறவு சங்கத்தினர் மற்றும்
பலர் இக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
இக்
கூட்டத்தில் முக்கியமாக விவசாயிகளுக்கு
இலவச கிருமி நாசினிகளை வழங்கல் மற்றும்
செய்கை பண்ணப்படாத இடங்களில் மீண்டும்
செய்கை பண்ண ஏற்பாடு செய்தல்
என்பனவும், எரிபொருள் அமைச்சர் பௌசி
அவர்களிடம் அமைச்சர் கருணா அம்மான்
கேட்டுக்கொண்டதற்கு இணங்க வாகரை,
கிரான், ஈச்சந்தீவு, மரப்பாலம் போன்ற
பிரதேசங்களில் எரிபொருள் நிரப்பு நிலையங்கள்
திறந்துவைக்கப்படவுள்ளது.



 |