|
புளொட்
அமைப்பின் சுவிஸ் கிளையினரால் வருடந்தோறும்
ஜுலை மாதத்தில் நடத்தப்பட்டு வரும் வீரமக்கள்
தின நிகழ்வுகள் எதிர்வரும்
05.07.2009,ஞாயிற்றுக்கிழமை பிற்பகல்
2.30மணியளவில் சூரிச் மாநகரிலுள்ள உன்ரர்
அப்போல்ரன் மண்டபத்தில்
நடைபெறவுள்ளது.இதில் ஆரம்ப நிகழ்வாக
வீரமக்கள் தினத்திற்குரிய மலராஞ்சலி
மற்றும் அக வணக்கம் என்பன
இடம்பெறுவதுடன்,இதனைத் தொடர்ந்து நிகழ்வில்
பிரதம அதிதியாகவும்,சிறப்பு விருந்தினர்களாகவும்
பங்கேற்போரின் உரைகளும் முக்கியஸ்தர்களின்
உரைகளும் இடம்பெறவுள்ளது.
அத்துடன் விசேட நிகழ்வுகளாக பின்னணி
இசைக்கு ஆடுதல், வினோதவுடைப்
போட்டி,பொது அறிவுப்போட்டி,
நாடகம்,நாட்டியம் போன்ற பல கலை நிகழ்ச்சிகளும்
இடம்பெறவுள்ளது.மற்றும் அண்மையில்
சுவிஸ்வாழ் தமிழ் மாணவ மாணவியர்களுக்காக
தமிழீழ மக்கள் கல்விக் கழகத்தினால்
நடத்தப்பட்ட பொது அறிவுப் போட்டியில்
பங்கேற்ற மாணவ மாணவியர்க்கு பரிசில்கள்
வழங்கும் நிகழ்வும் இடம்பெறவுள்ளது.
வேறு மேலதிக விபரங்கள் தேவைப்படின்
தயவுசெய்து பின்வரும் தொலைபேசி இலக்கங்களுடன்
தொடர்பு கொள்ளவும். 076- 368 15
46.. 076-310 82 17.. 078 -312 43
39.. 077- 203 88 81
வீரமக்கள்தின நிகழ்வு நடைபெறும் மண்டபம்.
GemeinsSchfts
Zentrum Affolten,
Bodenacker.25
8049 Zürich
நன்றி.. தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்
-சுவிஸ்கிளை |