|
இடைத்தங்கல்
முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களின்
குறைபாடுகளை களையும் அதேவேளை இவ்வருட
இறுதிக்குள் அவர்களை மீளவும்
குடியேற்றுவதற்கான நடவடிக்கைகள் துரிதமாக
மேற்கொள்ளப்பட வேண்டுமென ஈழமக்கள் ஐனநாயகக்கட்சியின்
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் என்.
சந்திரகுமார் தெரிவித்தார்.
ஐனாதிபதி செயலகத்தில் நேற்று நடைபெற்ற
அபிவிருத்தி மற்றும் நல்லிணக்கம் தொடர்பான
சர்வகட்சி குழு கூட்டத்தில் ஈழமக்கள்
ஐனநாயகக் கட்சி சார்பில் கலந்து
கொண்டு உரையாற்றுகைளிலேயே சந்திரகுமார்
மேற்கண்டவாறு தெரிவித்தார்.
குடாநாட்டு மக்கள் தற்போதைய சூழலில்
எதிர் பார்த்திருக்கும் இனப்பிரச்சினை
தீர்வுகுறித்து சந்திரகுமார் மேலும்
உரையாற்றுகையில்:
அனைத்து கட்சிகளின் நல்லெண்ணத்தை இனப்பிரச்சினைக்கான
தீர்வு விடயத்தில் முன்னெடுத்து செல்வதற்காக
ஐனாதிபதி மேற்கோண்டுள்ள நடவடிக்கைகளை
நாம் பாராட்டுகின்றோம். குடாநாட்டில்
வாழ்ந்து வரும் மக்கள் பெரும் எதிர்பார்ப்புகளுடன்
காணப்படுகின்றனர். இவர்களின் அபிலாசைகளை
நிறைவு செய்யும் வகையில் ஏ9 பாதையினை
திறந்து அவர்களது கொழும்பு நோக்கிய
பயணத்திற்கு விரைவில் ஏற்பாடு செய்யப்பட
வேண்டும்
இதன் மூலம் இம் மக்கள் தமது இயல்பு
வாழ்க்கையை தாமே விருத்தி செய்யும்
நிலை ஏற்படும் என மேலும்தெரிவித்தார். |