<%@ Language=JavaScript %> Welcome./\. Welcome. !
 

எங்கள் தேசம் இணையம்

 

www.engaltheaasam.com Welcome To Visit   

 
 

 

 

செய்தி் புதுப்பிக்கப்பட்ட நாள்.29.ஜூன்,2009

* தமிழ்  சினிமா*

*ஜோ‌திட‌ வார பலன்*

எங்கள் தேசத்தின் இன்றைய முக்கிய செய்திகள்!!.29.06.2009

பிரபாகரன் பெற்றோர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை:இலங்கை அரசு திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனின் பெற்றோர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க இலங்கை அரசு திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இலங்கை வன்னி பகுதியில் தமிழர்கள் முகாமில் தஞ்சமடைந்த பிரபாகரனின் தந்தை வேலுப்பிள்ளை மற்றும் அவரது தாயார் பார்வதி அம்மாள் ஆகியோரை, ராணுவம் தங்கள் பாதுகாப்பில் எடுத்துக் கொண்டுள்ளது. விடுதலைப்புலிகள் அமைப்பில் அவர்களுக்கு தொடர்பு எதுவும் இல்லை என்றாலும், பிரபாகரனின் பெற்றோர் என்ற ஒரே காரணத்திற்காக, அந்நாட்டு அரசு அவர்களைத் தனிமைப்படுத்தி உள்ளது.இந்நிலையில்,அவர்கள் மீது வழக்கு தொடரவும், சட்டப்பூர்வ நடவடிக்கைகள் எடுக்கவும் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்காக அவர்களை கொழும்பு கொண்டு செல்ல இலங்கை அரசு முடிவுசெய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. பிரபாகரனின் நடவடிக்கைகளுக்கு உடந்தையாக இருந்ததாக அவர்கள் மீது வழக்கு தொடர இலங்கை அரசு முடிவுசெய்துள்ளதாகத் தெரிகிறது.

.............................................................................

வர்த்தகர் சங்கப் பிரதிநிதிகளுடன் அமைச்சரான விநாயகமூர்த்தி முரளிதரன் சந்திப்பு.

செங்கலடி-பதுளை வீதியில் பொதுமக்கள் போக்குவரத்து தொடர்பாக விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை நீக்குவது தொடர்பாக பாதுகாப்பு அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு தீர்வு காணப்படும் என தேசிய நல்லிணக்க அமைச்சரான விநாயகமூர்த்தி முரளிதரன் செங்கலடிப் பிரதேச வர்த்தகர்களிடம் உறுதியளித்துள்ளார்.

நேற்று மாலை செல்லம் திரையரங்கு மண்டபத்தில் வர்த்தகர் சங்கப் பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற சந்திப்பின் போதே இந்த உறுதிமொழியை அவர் வழங்கியுள்ளார்.

கிழக்கு மாகாணம் விடுவிக்கப்பட்டு சிவில் நிர்வாகம் அமுலுக்குக் கொண்டுவரப்பட்டு இரண்டு வருடங்கள் கடந்த போதிலும் போக்குவரத்துக் கட்டுப்பாடுகள் காரணமாக மக்களின் இயல்பு நிலை தொடர்ந்தும் பாதிக்கப்படுவதாக வர்த்தகர் சங்கத் தலைவரான கே.மோகன் தனது தலைமையுரையின் போது அமைச்சரின் கவனத்திற்கு சுட்டிக்காட்டினார்.

செங்கலடி - பதுளை வீதி ஏ-5 நெடுஞ்சாலை ஊடாக காலை 6 மணிமுதல் மாலை 6 மணிவரையே பொதுமக்கள் போக்குவரத்திற்கு அனுமதியளிக்கப்படுவது,மட்டக்களப்பு - வாழைச்சேனை வீதியில் மயிலம்பாவெளி பொலிஸ் சோதனைச் சாவடி ஊடாக செல்லும் மோட்டார் சைக்கிள்களை உரிமையாளர்களே செலுத்திச் செல்லவேண்டுமென பொலிஸாரால் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடு,ஏறாவூர் எல்லைப்புறத்திலுள்ள தமிழ் குடும்பங்கள் பாதுகாப்பைக் காரணங்கூறி இதுவரை மீளக் குடியமர்த்தப்படாமை,போன்ற விடயங்கள் தொடர்பாக அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனின் கவனத்திற்கு வர்த்தகர் சங்கப் பிரதிநிதிகள் விரிவாக எடுத்துக் கூறினர்.

செங்கலடி - பதுளைவீதியில் பொதுமக்கள் தொடர்பாக விதிக்கப்பட்டுள்ள நேரக் கட்டுப்பாடுகளை நீக்குதல் மற்றும் ஏறாவூர் எல்லைப் புறத்திலுள்ள தமிழ் குடும்பங்களின் மீள் குடியேற்றம் தொடர்பாக பாதுகாப்பு உயர் அதிகாரிகளிடம் பேசி தீர்வைப் பெற்றுத்தருவதாக அமைச்சரினால் உத்தரவாதம் அளிக்கப்பட்டது.

மயிலம்பாவெளி பொலிஸ் சோதனைச் சாவடி ஊடாக மோட்டார் சைக்கிளில் பயணம் செய்வோர் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து இக்கூட்டத்திற்கு வருகைதந்திருந்த பொலிஸ் அதிகாரிகளின் கவனத்திற்கு அமைச்சரினால் கொண்டுவரப்பட்டு அந்தப் பிரச்சினைக்கு உடனடித் தீர்வு காணப்பட்டது.

மோட்டார் சைக்கி: உரிமையாளர்தான் அதனைச் செலுத்திச்செல்லவேண்டும் என்ற கட்டுபாட்டை உடனடியாக நீக்குவதாக இக்கூட்டத்தில் கலந்து கொண்ட உதவி பொலிஸ் அத்தியகட்சகர் அத்துலத் முதலி அறிவித்தார்.

.............................................................................

இடம்பெயர்ந்த 129 சிறுமிகள் கோவில்குளம் சிவன்கோவில் சிறுவர் இல்லத்தில் ஒப்படைப்பு.

வவுனியா இடைத்தங்கல் முகாம்களில் தங்கியிருந்த 129,சிறுமி்கள் வவுனியா மாவட்ட நீதிமன்றத்தின் மூலம் சிறுவர் நன்னடத்தைப் பிரிவினரின் பொறுப்பில் வவுனியா கோவில்குளம் சிவன்கோவில் சிறுவர் இல்லத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

சிவன்கோவில் அருளகம் சிறுவர் இல்லத்தில் ஏற்கனவே சுமார் 100 வரையிலான சிறுவர்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றார்கள். இவர்களுக்கு மேலதிகமாக 129 சிறுமிகள் சிவன்கோவில் அறங்காவலர் சபையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

சிறுவர், சிறுமியர்க்கென தனித்தனியான இல்லங்கள் ஏற்கனவே இங்கு அமைக்கப்பட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே, இராணுவத்தினர், பொலிசார், அரச அதிபர், பிரதேச செயலர் ஆகியோரின் ஒத்துழைப்புடன் வைரவபுளியங்குளம், வைரவர்கோவிலருகில் அமைக்கப்பட்டுள்ள புதிய சிறுவர் இல்லத்தில் 65 சிறுவர்கள் அனுமதிக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சிறுவர் இல்லத்தின் செயற்பாடுகள், இங்குள்ள சிறுவர்களின் நலன்கள் என்பவற்றை வவுனியா மாவட்ட நீதிமன்றம் நேரடியாகக் கண்காணித்து வருகின்றது. மாவட்ட சிறுவர் நன்னடத்தை பிரிவு அதிகாரிகளும் இந்த இல்லத்தை மேற்பார்வை செய்து வருகின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

சிறிலிய செவன என பெயர் சூட்டப்பட்டுள்ள இந்த சிறுவர் இல்லத்திற்குத் தேவையான அனைத்து உதவிகளையும் ஜனாதிபதியின் பாரியார் திருமதி சிராந்தி ராஜபக்ச வழங்குவதற்கு முன்வந்துள்ளார்.

.............................................................................

சரணடைந்துள்ள புலிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு தரப்பினரிடம் சரணடைந்துள்ள விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கு எதிராக நாட்டில் அமுலில் இருக்கும் சட்டங்களுக்கு ஏற்ப உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும். அதைத் தவிர்ந்து அவர்களுக்கென்று புதிதாகவொரு நீதிமன்றக் கட்டமைப்பினை ஏற்படுத்த வேண்டிய அவசியமில்லை என்று பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளரும் அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

இந்த சட்ட நடவடிக்கைகளின் பிரகாரம் அவர்களுக்கு புனர்வாழ்வளிப்பதா அல்லது உரிய தண்டனைகளை வழங்குவதா என்பது தொடர்பில் தீர்மானிக்கப்படும். இதேவேளை புலிகள் இயக்கத்தினரால் பலவந்ததாக சேர்க்கப்பட்டு கட்டாயத்தின் பேரில் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்பட்ட போராளிகளுக்கு எதிராக மாற்று நடவடிக்கைகள் கையாளப்படவுள்ளன என்றும் அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.

இது தொடர்பில் அமைச்சர் கெஹெலிய மேலும் கூறியுள்ளதாவது

தனிநாட்டுக் கோரிக்கையினை வேண்டி கடந்த 30வருடங்களுக்கு மேலாக நாட்டிற்குள் வியாபித்திருந்த விடுதலைப் புலிகள் இயக்கம் தற்போது முற்றாக அழிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அவ்வியக்கத்தின் தலைவர் உட்பட அனைத்து உறுப்பினர்களும் வன்னியில் மேற்கொள்ளப்பட்ட மனிதாபிமானப் போர் நடவடிக்கைகளின் போது கொல்லப்பட்டனர்.

.............................................................................

மீண்டும் தாக்குதல் அபாயம்:அமெரிக்கர்கள் இலங்கை செல்ல வேண்டாம்- ஒபாமா அரசு எச்சரிக்கை

அமெரிக்க அரசு இலங்கை செல்லும் அமெரிக்கருக்கான ஒரு அறிக்கை வெளியிட்டு உள்ளது. அதில் கூறி இருப்ப தாவது:-விடுதலைப்புலிகளை வெற்றி கொண்டிருப்பதாக இலங்கை அரசு அறிவித்து இருந்தாலும் அங்கு விடுதலைப்புலிகளின் குழுக்கள் தொடர்ந்து இருக்கிறது.அவர்கள் தாக்குதல் நடத்த வாய்ப்புகள் உள்ளன.

குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளுக்கு செல்ல கூடாது.இங்கு கண்ணி வெடிகள் இன்னும் அகற்றப்படாமல் இருக்கின்றன. ஆயுத குழுக்களும் திடீர் தாக்குதல் நடத்தும் வாய்ப்பு உள்ளது.

.............................................................................

தமிழர் விடுதலைக் கூட்டணியின் கொள்கை விளக்கக் கூட்டமும் தேர்தல் பிரச்சாரமும் ஆரம்பம்.

யாழ்ப்பாணம் மாநகர சபைத் தேர்தலுக்கான தமிழர் விடுதலைக் கூட்ணியின் கொள்கை விளக்கக் கூட்டம் யாழ்ப்பாணம் ஸ்ரான்லி வீதியில் அமைந்துள்ள தமிழர் விடுதலைக் கூட்டணி அலுவலகத்தில் எஸ் சங்கையா தலைமையில் நடைபெற்றது

இந்த நிகழ்வில் யாழ்ப்பாணம் மாநகர சபை முதன்மை வேட்பாளரும் தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவருமான வி.ஆனந்த சங்கரி ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் மத்திய குழு உறுப்பினர் ரி.சிறிதரன் உட்பட மற்றும் பலர் உரையாற்றினார்கள்.

.............................................................................

அமைப்பில் இருந்தவர்கள் இராணுவத்தில் சேர ஆர்வம்காட்டவில்லை- சிவனேசத்துரை சந்திரகாந்தன்.

தமது அமைப்பு ஆயுதப் பிரிவை கலைத்துள்ள போதிலும் அமைப்பில் இருந்தவர்கள் அரசாங்கப் படைகளிலோ,பொலிசிலோ சேர்ந்து கொள்வதற்கு ஆர்வம்காட்டவில்லை என தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் தலைவரும் கிழக்கு மாகாண முதலமைச்சருமான சிவனேசத்துரை சந்திரகாந்தன் கூறுகின்றார்.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளைச் சேர்ந்த சிலர் இலங்கை இராணுவத்தில் சேrந்துள்ளதாக வெளியாகியுள்ள தகவல்கள் குறித்து கேட்ட போது,10 இற்கும் குறைவானவர்களே தான் அறிந்தவரை இராணுவத்தில் சேர்ந்துள்ளதாக பதிலளித்த அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

"எமது கட்சியின் ஆயுதப் பிரிவு கடந்த சில மாதங்களுக்கு முன்பு கலைக்கப்பட்டது.ஆயுதங்களும் முற்றாக ஒப்படைக்கப்பட்டது.இந் நிலையில் எமது அமைப்பின் ஆயுதப் பிரிவில் இருந்தவர்களிடம் சுயதொழில் வாய்ப்பு மற்றும் பாதுகாப்பு படைகளில் சேர்வது தொடர்பாக யோசனைகளை நாம் முன் வைத்தோம்.

சுய தொழில் வாய்ப்பின் நிமித்தம் பயிற்சி,அதற்கான கடன் வசதி அளிக்கப்படும் என உறுதி மொழி வழங்கப்பட்டது.இதன்படி சர்வதேச தொண்டர் நிறுவனமொன்றின் உதவியுடன் பயிற்சி வழங்கவும் தீர்மானிக்கப்பட்டிருந்தது.

அது மட்டுமல்ல தகைமைக்கு ஏற்ப பாதுகாப்பு படையிலேயே,பொலிசிலோ விரும்பினால் சேர முடியும் என்று கூறியிருந்தோம்.அந்த அடிப்படையில் பாதுகாப்பு படையில் சேர்வதற்கு பலரும் தயக்கம் காட்டினார்கள்.கணிசமானவர்கள் சேரவும் மறுத்து விட்டார்கள்" என்றார்.

<<முன்னைய பதிவுகள்>>

 

Last update: 20-06-2008. Desigin and Copyright Welcome. to Visit.Engaltheaasam.com ..!