இராணுவ
வெற்றியை கௌரவிப்பதற்கான தேசிய வைபவம்.03.06.2009 புதன்கிழமை கொழும்பு காலிமுகத்திடலில்
நடைபெற்றது.
முப்படைகள், பொலிஸ் மற்றும் சிவில்
பாதுகாப்பு படை அதிகாரிகள் உட்பட
5,244 படையினர் பங்கேற்ற மரியாதை அணிவகுப்பு
மற்றும் கடல், வான், வழி சாகசங்களுடன்
இராணுவ வெற்றியை கௌரவிப்பதற்கான தேசிய
வைபவம் நேற்று புதன்கிழமை கொழும்பு
காலிமுகத்திடலில் நடைபெற்றது. பொது
நிர்வாக, உள்நாட்டலுவல்கள் அமைச்சினால்
இந்த தேசிய வைபவம் ஏற்பாடு
செய்யப்பட்டிருந்தது.அதிதிகள் வருகையுடன்
ஆரம்பமான இந்நிகழ்வு ஜனாதிபதி மகிந்த
ராஜபக்ஷவின் வருகையுடன் உத்தியோக பூர்வமாக
நடைபெற ஆரம்பித்தது.
மங்கல மேள முழக்கத்திற்கும், சங்கொலிக்கும்
மத்தியில் ஜனாதிபதி தேசியக் கொடியை ஏற்றி
வைத்ததுடன்,100 பாடசாலை மாணவிகள்
தேசிய கீதமிசைத்தனர்.பின்னர்
25,பாடசாலை மாணவிகளால் ஜயமங்கல கீதம்
இசைக்கப்பட்டது.
இதனையடுத்து,இலங்கையின் சுதந்திரம்
இறைமை,தேசிய ஒருமைப்பாடு,ஒற்றுமை என்பவற்றிற்காக
உயிர் நீத்தவர்களை நினைவு கூரும்
பொருட்டு 2 நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்ட
பின்னர் ஜனாதிபதி மரியாதை வணக்கத்துடன்,
21 மரியாதை பீரங்கி வேட்டுகளும்
தீர்க்கப்பட்டன.
“Victory Parade - Galle Face, Sri
Lanka - June 3rd, 2009 (Tamil/Sinhala/English)