|
தேசிய மட்ட விளையாட்டுப் போட்டிகளின் இறுதி நிகழ்வான மெய்வல்லுனர் போட்டிகளில் பங்கு பற்றும் முகமாக யாழ்.மாவட்டப் பாடசாலைகளின் விளையாட்டு வீரர்கள் கொழும்பிற்கு வருகை தந்துள்ளனர்.
ஏற்கனவே மாகாண மட்டப் போட்டிகளில் பங்குபற்றும் பொருட்டு வவுனியாவில் தங்கியிருந்த பாடசாலை விளையாட்டு அணியினரும், அதனை அடுத்து யாழில் இருந்து திருகோணமலைக்குக் கப்பல் மூலம் வந்துள்ள பிறிதொரு குழுவினரும் கொழும்புக்கு வந்துள்ளார்கள்.
யாழ்.மாவட்டத்தைச் சேர்ந்த 141 மாணவ, மாணவிகள் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் சமூக சேவைகள் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்களின் ஏற்பாட்டில் சமூக சேவைகள் அமைச்சின் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேற்படி மாணவ மாணவிகளை அமைச்சர் அவர்கள் இன்றைய தினம் நேரடியாகச் சென்று பார்வையிட்டதுடன் அவர்களின் தேவைகள் குறித்தும் கலந்துரையாடினார். அவர்களுடன் உரையாடிய அமைச்சர் கலந்து கொள்ள உள்ள போட்டிகளில் திறமையாகப் பங்குபற்றி வெற்றிகளை ஈட்ட வேண்டும் எனவும் தனது வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொண்டார்.






|