<%@ Language=JavaScript %> Welcome. !

 E-mail:enngal@gmail.com

தமக்குத் தீமையைச் செய்தவருக்கும், தாம் பதிலுக்குத் தீமை செய்யாது மன்னித்து விடுவதை, அறிவினுள் எல்லாம் சிறந்த அறிவு என்பார்கள்.

கிளிநொச்சியை படையினர் கைப்பற்ற இன்னும் 4கிலோ மீற்றர் தூரம் மட்டுமே பொலிஸ்மா அதிபர் தெரிவித்துள்ளார்.வன்னிக்கள முனைகளில் கொல்லப்பட்ட  புலிகளின் 12 சடலங்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

 
செய்தி் புதுப்பிக்கப்பட்ட நாள்:24 செப்டம்பர், 2008

* தமிழ்  சினிமா*

*ஜோ‌திட‌ வார பலன்*

 

கிளிநொச்சியை படையினர் கைப்பற்ற இன்னும் 4கிலோ மீற்றர் தூரம் மட்டுமே பொலிஸ்மா அதிபர் தெரிவித்துள்ளார்.இன்று வன்னிக்கள முனைகளில் கொல்லப்பட்ட  புலிகளின் 12 சடலங்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சியைப் படையினர் கைப்பற்றுவதற்கு இன்னும் நான்கு கிலோ மீற்றர் தூரமேயிருப்பதாக பொலிஸ்மா அதிபர் ஜயந்த விக்கிரமரட்ன தெரிவித்துள்ளார். கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவு அலுவலகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை காலை நடைபெற்ற விசேட வைபவமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அங்கு அவர் மேலும் பேசுகையில்;

புலிகளின் தலைநகர் கிளிநொச்சியைக் கைப்பற்றுவதற்கான நாட்கள் வெகு தூரத்திலில்லை. தற்போது படையினர் கிளிநொச்சியிலிருந்து நான்கு கிலோ மீற்றர் தூரத்திலேயே உள்ளனர். அடுத்த சில வாரங்களில் படையினர் கிளிநொச்சியைச் சென்றடைந்து விடுவார்கள்.

இந்தச் சூழ்நிலையில் புலிகள் தென்பகுதியில் ஆத்திரமூட்டும் தாக்குதல்களில் ஈடுபட முயல்வார்கள். இதனால், புலிகளின் சந்தேகத்திற்கிடமான நடவடிக்கைகள் குறித்தும் சந்தேகத்திற்கிடமானவர்கள் குறித்தும் மக்கள் விழிப்புணர்வுடனிருக்க வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டார். வவுனியா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ள விடுதலைப் புலிகளின் சடலங்களைப் பார்வையிட்ட வவுனியா மாவட்ட நீதிபதி அவற்றை வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்துமாறு வவுனியா சட்ட வைத்திய அதிகாரிக்கு உத்தரவிட்டுள்ளார்.

வன்னிக்கள முனைகளில் இராணுவத்தினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் இடம்பெற்ற மோதல்களில் கொல்லப்பட்ட 12 சடலங்கள்
இராணுவத்தினரால் வவுனியா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன. இவற்றைவிட ஏற்கனவே ஒரு சடலம் வவுனியா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டு, மருத்துவ பரிசோதனை முடிக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளதாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்தச் சடலங்களை ஐசிஆர்சி ஊடாக விடுதலைப் புலிகளிடம் கையளிப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

<<முன்னைய பதிவுகள்>>

Last update: 20-06-2008. Desigin and Copyright