<%@ Language=JavaScript %> Welcome. !

 E-mail:enngal@gmail.com

தமக்குத் தீமையைச் செய்தவருக்கும், தாம் பதிலுக்குத் தீமை செய்யாது மன்னித்து விடுவதை, அறிவினுள் எல்லாம் சிறந்த அறிவு என்பார்கள்.

23.09.2004 அன்று வன்னிக் கும்பலின் கோழைச் செயலுக்கு இலக்காகி மண்ணில் மாவீரர்களாய் கல்லறையில் உறங்கும் கேணல் றெஜி லெப்டினன் கேணல் துமிலன் 2ஆம் லெப்டினன் எழில் ஆகிய வீர மறவர்களின் நான்காம் ஆண்டு நினைவஞ்சலி.

 
செய்தி் புதுப்பிக்கப்பட்ட நாள்:23 செப்டம்பர், 2008

* தமிழ்  சினிமா*

*ஜோ‌திட‌ வார பலன்*

 

23.09.2004 அன்று வன்னிக் கும்பலின் கோழைச் செயலுக்கு இலக்காகி மண்ணில் மாவீரர்களாய் கல்லறையில் உறங்கும் கேணல் றெஜி லெப்டினன் கேணல் துமிலன் 2ஆம் லெப்டினன் எழில் ஆகிய வீர மறவர்களின் நான்காம் ஆண்டு நினைவஞ்சலி.

விடுதலைக்காய் வீறுநடை கொண்ட
வெற்றித்திலகங்களே
உங்கள் சுவடுகளின் ஈரம் காயவில்லையே
கல்லறையில் நீங்கள் உறங்கினாலும்
உங்களின் தியாகம் உறங்கவில்லையே
தயவுடனே நீங்கள் உறங்குங்கள்
உங்கள் கனவுகளைச் சுமந்து
எம் பணி தொடரும்

கேணல் றெஜியின் வாழ்க்கையும் வீர வரலாறும்

எழில் கொæசும் கிழக்குப்பதியின் மட்டு மண்ணின் வாசம் வீசும் கிரான் எனும் கிராமத்திலே வினாயமூர்த்தி. புவனேஸ்வரி தம்பதியினருக்கு ஆறாவது மழலையாய் பிறந்தார் இவருக்கு தாய்இ தந்தையர் சிவனேசதுரை எனும் பெயரை சூட்டினர் வினாயமூர்த்தி. புவனேஸ்வரி தம்பதியினருக்கு ஐந்து பெண் பிள்ளைகளும் இரண்டு ஆண் பிள்ளைகளும் இவற்றில் கடைசி மகன் தான் கருணா அம்மானும் குடும்ப வாழ்க்கையில் சந்தோசமாக பாச உறவுகளாய் வாழ்ந்து கொண்டிருக்கும் போதுதான் சூழ் நிலை காரணமாக கருணா அம்மான் விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைந்து கொண்டார்.

இப்படி இணைந்ததும் றெஜி அவர்கள் சென் யேஜப் கல்லூரியில் உயர் கல்வியை பயின்று கொண்டிருந்தார் தன் தம்பியின் பிரிவினை தாங்க முடியாத றெஜியும் தன்னை விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைத்துக் கொண்டார் இவ்வாறு இருக்க தமிழனுக்கோ துரோகமிழைக்கும் துரோகியான பிரபாகரனின் மனதை புரியாதவர்களாய் செயலாற்றிக் கொண்டிருந்தனர் தமிழ் மக்களுக்கு தன்னிறைவான விடிவினை பெற்றுக் கொடுக்க தளராது உழைத்த வீரர் இவர்.

தான் செய்யும் ஒவ்வொரு செயலும் தன்மானமும் தகுதியுமுடையனவாய் இருக்கும் வன்னி நிலப்பரப்பிலிருந்து பிரபாகரனுக்கு வரும் எல்லா உயிராபத்துக்களிலிருந்தும் பாதுகாத்த வீரர் இவர் இவ்வாறு சில காலம் உறுன்டோடிய பின் கிழக்கின் தளபதியாக கருணா அம்மான் நியமிக்கப்பட்டார் இதன் பின் கருணா அம்மான் மக்களுக்கு நிலையானதோர் சமாதானத்தை நிலைநாட்ட பல வழிகளிலும் சிந்தித்தார் இப்படி இருக்கும் போது இப்போ வன்னியில் தமிழ் மக்களை மனிதக் கேடயங்களாக பயன்படுத்தி அதில் குளிர்காயும் பிரபாகரன் அன்று கிழக்கு மக்களையும் போராளிகளையும் நிற்க்கதியற்ற தமிழூழத்துக்காய் பலி கொடுக்க சிந்தித்தான் பிரபாகரனின் பொறியில் மக்களையும் போராளிகைளையும் சிக்க வைக்க கூடாதென சிந்தித்த கருணா அம்மான் இவ் ஆயுதப் போராட்டத்தால் மக்களுக்கு விடிவு கிடைக்கப் போவதில்லை என்பதை உணர்ந்து தன்னையும் தன் போராளிகளையும் புலிகள் அமைப்பிலிருந்து பிரித்தெடுத்தார்.

இதன் பின் தமிழ் மக்களுக்கு நிலையான சமதானத்தை பெற்றுக் கொடுக்கச் சிந்தித்தார் இதன் நோக்கமாகவே இலங்கை அரசுடன் இணைந்தார் இவ்வாறு இணைந்ததும் அரசியல் வேலைத்திட்டங்களை மும்முரமாக முன்னெடுத்தார் இவ்வாறு இருக்கம் போதுதான் றெஜியும் தமிழ் மக்களுக்கான நிரந்தர விடிவினை பெற்றுக் கொடுக்க செயலாற்றிக் கொண்டிருந்தார் பல இன்னல்களுக்கும் கஸ்ரங்களுக்கம் மத்தியில் செயலாற்றும் போது தனது துணைக்காக கருணா அம்மானின் மெய்பாதுகாவலராக இருந்த துமிலன் மற்றும் எழில் ஆகிய போராளிகளையும் தன்னுடன் சேர்த்துக் கொண்டார்.

இவ்வாறு இருக்கும் போதுதான் கொலை வெறி பிடித்த துரோகி பிரபாகரன் இவர்களை கொலை செய்ய ஆள் அனுப்பினான் தன் உயிரையே துச்சமென நினைத்து பல உயிராபத்துக்களிலிருந்து பிரபாகரனை பாதுகாத்த றெஜியை வæசகம் கொண்ட பிரபாகரனே கொன்றான். இப்படிப்பட்ட மாவீரர்கள் இன்று இம் மண்ணில் இருந்திருந்தால் இதற்க்கு மேலான நிம்மதியையும் சந்தோசத்தையும் மக்களுக்கு பெற்றுக் கொடுத்திருப்பார்கள் இன்று எமது கட்சி இந்த நிலையில் இருக்குதென்றால் காரணம் இவர்கள் செய்த தியாகங்களும் தான். தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் எனும் பெயரை சூட்டுவதற்க்கு கருணா அம்மானுக்கு ஆலோசனை வழங்கி அப்பெயரை சூட்டினார். அவரால் சூட்டப்பட்ட இந்த நாமம் இன்று வேர் விட்டு கிளை விட்டு அரசியல் கட்சியாக பிரவேசிக்கிறது. இம் மாவீரர்களை நினைவு கூரும் இன் நாளில் நாங்களும் தலை சாய்த்து மௌனிக்கின்றோம்.

இவ்வண்ணம்
பா.லவனியன்
அரசியல் தலைமைக் காரியாலயம் ரிஎம்விபி

<<முன்னைய பதிவுகள்>>

Last update: 20-06-2008. Desigin and Copyright