<%@ Language=JavaScript %> Welcome. !

 E-mail:enngal@gmail.com

தமக்குத் தீமையைச் செய்தவருக்கும், தாம் பதிலுக்குத் தீமை செய்யாது மன்னித்து விடுவதை, அறிவினுள் எல்லாம் சிறந்த அறிவு என்பார்கள்.

வன்னியில் மோதல்கள் தொடர்கின்றன ஞாயிறன்று 20 விடுதலைப் புலிகள் பலி் புலிகள்ளது உடலங்கள், ஆயுதங்கள் மீட்பு.

 

 
செய்தி் புதுப்பிக்கப்பட்ட நாள்:15 செப்டம்பர், 2008

* தமிழ்  சினிமா*

*ஜோ‌திட‌ வார பலன்*

 

வன்னியில் மோதல்கள் தொடர்கின்றன ஞாயிறன்று 20விடுதலைப் புலிகள் பலி் புலிகள்ளது உடலங்கள், ஆயுதங்கள் மீட்பு.

வன்னிக்கள முனைகளில் வவுனியா கிளிநொச்சி மற்றும் வெலிஓயா பிரதேசங்களில் இராணுவத்தினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற மோதல்களில் 20விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டிருப்பதாகவும் 14 இராணுவத்தினர் காயமடைந்திருப்பதாகவும் இராணுவம் தெரிவித்துள்ளது, யாழ்ப்பாணம் முகமாலை பகுதியில் விடுதலைப் புலிகள் வைத்திருந்த கண்ணி வெடியொன்றில் சிக்கிய இராணுவச் சிப்பாய் ஒருவரும் காயமடைந்திருப்பதாகவும் இராணுவம் கூறியுள்ளது.

வவுனியா பாலமோட்டை மற்றும் கிளிநொச்சி மாவட்டம் வன்னேரிக்குளம் பகுதிகளில் நேற்று இராணு்வததினர் தமது இராணுவ நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டிருந்தனர். இதன்போது ஏற்பட்ட மோதல்களில் விடுதலைப் புலிகளுக்கே உயிர்ச்சேதம் ஏற்பட்டிருப்பதாகவும் இராணுவம் தெரிவித்துள்ளது.

வவுனியா பாலமோட்டை பகுதியில் இடம்பெற்ற மோதல்களில் 6 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டுள்ளதாகவும், கிளிநொச்சி வன்னேரிக்குளம் பிரதேச்ததில் மேலும் 6 விடுதலைப் புலிகளும், வெலிஓயா பிரதேசத்தில் உள்ள தண்ணிமுறிப்புக்குளம், ஆண்டான்குளம் ஆகிய பகுதிகளில் இடம்பெற்ற சண்டைகளில் 12 விடுதலைப் புலிகளும் கொல்லப்பட்டிருப்பதாக இராணுவ தலைமையகம் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த மோதல்களிலும் இந்தப் பகுதிகளில் விடுதலைப் புலிகளின் மிதிவெடிகள் கண்ணிவெடிகளில் 14 இராணுவத்தினர் காயமடைந்திருப்பதாகவும் இராணுவ தலைமையகம் வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது

<<முன்னைய பதிவுகள்>>

Last update: 20-06-2008. Desigin and Copyright