|
சமூகத்தில் பல்வேறு
அரசியல் கருத்துகளைக் கொண்ட போக்குள்ள
குழுக்கள் அவதூறுகளுக்குப் பெயர்
கருத்துச் சுதந்திரமல்ல.
சமூகத்தில் பல்வேறு அரசியல்
கருத்துகளைக் கொண்ட போக்குகள் -
குழுக்கள் நிலவும்போது எதிர்க்
கருத்துகள் அல்லது மாற்றுக் கருத்துகள்
கொண்ட ஒருதரப்பைக் கருத்துப் பலமற்ற
மற்றொரு தரப்பு அவதூறுகளால்
ஆதாரங்களற்ற குற்றச்சாட்டுகளால்
எதிர்கொள்வது எப்போதும் நடக்கும்
ஒன்றுதான். இன்னொருபுறம் பரபரப்புச்
செய்திகளை வெளியிடும் தாகத்தோடு
அவதூறுகளைப் பிரசுரித்து மகிழும்
போக்கும் சில ஊடகங்களில் காணப்படுகிறது.
நமது சூழலில் நிதர்சனம்.கொம்
தீப்பொறி.கொம் போன்ற ஆயுத அரசியல்
சார்ந்த சில ஊடகங்களும் வெறும் பச்சை
வியாபார ஊடகங்களுமே இந்த அவதூறுக்
கலாச்சாரத்தின் பிரநிதிகளாக
இருந்திருக்கிறார்கள்.
ஆனால் புலம் பெயர் சூழலில் மாற்றுக்
கருத்தாளர்கள் எனத் தம்மைப்
பிரகடனப்படுத்தி வரும் விரல் விட்டு
எண்ணக் கூடிய ஒருசிலர் இணையத்தளங்கள்
ஊடாகக் கருத்து சுதந்திரம் என்ற
பதாகையின் கீழ் அப்பட்டமான
புனைவுகளையும் பொய்க்கதைகளையும்
தனிமனித சேறடிப்புகளையும்
தொடர்ச்சியாகச் செய்து வருகின்றனர்.
இந்த இணையத்தளங்களும் இவ்வாறான
செயலுக்கு ஊக்கமும் ஆதரவும் வழங்கித்
தமது இணையத்தளத்தைப் பரபரப்பாக
வைத்துக் கொள்ளும் மலினமான உத்திகளைச்
செய்து வருகின்றன. இவர்களுக்கு இலங்கை
பிரச்சனை பற்றிய அக்கறையை விடச்
செயலூக்கம் கொண்டியங்கும் தனி நபர்கள்
மீதும் அமைப்புகள் மீதும் அவதூறு
மேற்கொள்வதே தலையாய கடமையாகி வருகிறது.
வளர்ந்து வரும் இந்த ஜனநாயக விரோத
போக்கு பரபரப்புச் செய்திகளை
வெளியிடும் தாகம்இ அவதூறுகளைப்
பிரசுரித்து மகிழும் போக்கு அவதூறான
பின்னூட்டங்களை விட்டு
மாற்றுக்கருத்தாளர்கள் மத்தியில்
போட்டிகள் பூசல்களை உருவாக்கும்
எத்தனம் தனிமனிதத் தாக்குதல்களை
ஊக்குவித்தலில் அற்ப மகிழ்ச்சிஇ
செயலூக்கம் கொண்ட
மாற்றுக்கருத்தாளர்களின் மேல்
அவதூறுகளை வீசி அவர்களின்
பெயரைக்கெடுத்தல் போன்ற கேடுகெட்ட
பண்புகளைத் தன்னகத்தே கொண்டுள்ளது.
வெளிப்படைத் தன்மை ஜனநாயகம் என்ற
போர்வையில் தமது கருத்துக்களுக்கு
உடன்படாத தனிமனிதரகள்இ மீதும்
அமைப்புகள் மீதும் அவதூறுகளைச்
செய்வதையே இவர்கள் தொடர்கின்றனர்.
ஆதாரமற்ற அவதூறுகளைப் பிரசுரித்து
விட்டுப் பொய்க் குற்றம் சாட்டப்பட்ட
தனி நபரோ அமைப்போ அதற்குப் பதிலளிக்க
வேண்டும் என்பது தான் இவர்களது வாதம்.
ஜனநாயகச் சூழலைப் பலப்படுத்துவதும்
அதிகாரத்தை விமர்சிப்பதுமான
காத்திரமான நிலையை ஒரு ஊடகம்
முன்னெடுக்கும்போது அதன் ஆசிரியர்கள்
மிகவும் பொறுப்புணர்வுடனும் அரசியல்
அறத்துடனும் வெளிப்படையாகவும்
இயங்குவது முன்நிபந்தனையாகிறது. ஆனால்
ஜனநாயகம் கருத்துச் சுதந்திரம் என்ற
போர்வையில் எவ்வித ஆதாரங்களுமற்ற
குற்றச்சாட்டுகளையும் அரசியல் நீக்கம்
செய்யப்பட்ட வெறும் கிசுகிசுக்களையும்
யாரும் எழுதலாம் அதனைக் கருத்துச்
சுதந்திரம் என்ற பேரில் இந்த
ஊடகங்களும் பிரசுரிப்பார்கள் என்பது
அறமற்ற நிலைப்பாடாகும். மறுபுறத்தில்
ஆரோக்கியமான கருத்துருவாக்கத்துக்கும்
நேர்மையான கருத்துப்
பரிமாற்றத்துக்கும் இந்தப் போக்குத்
தடையாகவுமுள்ளது. எனவே இந்தப்
பொறுப்பற்ற இணையத்தளங்களின் போக்கை
வெறுமனே பரபரப்பை ஏற்படுத்துவதற்காகச்
செய்யப்படும் மலிவான ஊடக உத்திஇ என்று
போகிற போக்கில் நாம் சாடிவிட்டு
மட்டும் போய்விட முடியாது.
இலக்கியச் சந்திப்புப் போன்ற
நிகழ்வுகளும் புலம்பெயர்
சிறுபத்திரிகைக் கலாச்சாரமும் ஆயுதக்
கலாச்சார எதிர்ப்பையும் மனித உரிமை
மீறல்களுக்கெதிரான குரலையும் அதிகார
அரசியலைக் கேள்விக்குள்ளாக்கும்
மாற்றுக் கலாச்சார மறுத்தோடி
அரசியலையும் ஜனநாயக விழுமியங்களையும்
கடந்த இரு தசாப்தங்களுக்கு மேலாகப்
புலம் பெயர் நாடுகளில் கட்டமைத்துப்
பேணி வந்துள்ளன. தலித்தியம் பெண்ணியம்
புலம்பெயர் இலக்கியம் போன்ற பல்வேறு
சிந்தனை போக்குகளும் செயல்பாடுகளும்
இம்மாற்றுக் கருத்து அரசியலின்
பன்முகத்தன்மையின் சகிப்புத் தன்மையின்
பெறுபேறுகள்.
புகலிட அரசியல் பரப்பில் பல ஆண்டுகளாக
அரசியல் செயல்பாட்டாளர்களால்
அச்சுறுத்தலுக்கும்
வன்முறைக்குமிடையில் தொடர்ந்து
செயலூக்கத்துடன் கட்டிக்காத்து
வளர்க்கப்பட்ட மாற்றுக்கருத்து
அரசியலின் பெறு பேறுகளைக்
கொச்சைப்படுத்தும் நோக்கே அவதூறுகளைப்
பிரசுரிக்கும் இத்தகைய இணையத்
தளங்களின் உள்நோக்கம் என நாம்
கருதுகிறோம்.
திட்டமிட்டுக் கட்டமைக்கப்பட்டு
வெளியாகும் ஆதாரமற்ற
குற்றச்சாட்டுகளும் அவதூறுகளும் பல
தனிமனிதர்களையும் அமைப்புகளையும் சக
ஊடகங்களையும் சூழலிலிருந்து
தனிமைப்படுத்தி ஒதுக்கும்
நோக்கத்துடனும் உள்முரண்களைப்
பகைமுரண்களாக்கும் தந்திரத்துடனும்
மாற்றுக் கருத்தாளர்கள் இரத்தம் சிந்தி
உருவாக்கிய சனநாயக் குரல்களின்
தொகுப்பைச் சிதைக்கும் எத்தனத்துடனுமே
எழுதப்படுகின்றன என்று நாம்
கருதுகிறோம்.
இன்று ஆதிக்கத்திலிருக்கும் ஆயுத
வன்முறைக் கலாச்சாரத்தின் கூறுகளே
இந்த அவதூறுப் பிரச்சாரங்களின்
கலாச்சார அடிப்படையாகும். சனநாயக
வேடமிட்டு வன்முறைக் கலாச்சாரத்தை
இத்தகைய ஊடகங்கள் ஊக்குவிக்கின்றன.
பொய்கள் புனைவுகளின் அடிப்படையில்
தனிமனித தாக்குதல்களையும் ஆதாரமற்ற
கட்டுக்கதைகளையும் அரசியல்
செயல்பாட்டாளர்கள் குறித்துப்
பிரசுரித்து அவர்களின் பெயர்களுக்குக்
ஊறு விளைவித்து அவர்களின் சமூக அரசியல்
செயல்பாட்டை தடைசெய்யும் நடைமுறைஇ
ஆயுதக் கலாச்சார அரசியலில் மாற்றுக்
கருத்தாளர்கள் தடைசெய்யப்பட்டதற்கும்
ஆதாரமின்றி குற்றம் சாட்டப்பட்டுக்
கொலை செய்யப்பட்டதற்கும் ஒப்பானதே.
இத்தகைய நடவடிக்கைகளில் ஒன்றுக்கு
மேற்பட்ட ஊடகங்கள் ஈடுபட்டிருந்தாலும்
அண்மைக் காலங்களில் இத்தகைய போக்கினை
முன்னெடுப்பதில் மிகுந்த தீவிரம்
காட்டும் தேசம் இணையத்தளத்தில் இதுவரை
வெளியான நூற்றுக்கணக்கான அவதூறுப்
பக்கங்களிலிருந்து ஒரு சில துளிகளை
மட்டும் இங்கே எடுத்துக்காட்டாகக்
குறிப்பிடுகிறோம்:
இலண்டன் தலித் மாநாட்டைக் குறித்து
ஏராளமான அவதூறுகள் தேசம் நெற்றில்
கட்டுரையாகவும் பின்னூட்டங்களாகவும்
வெளியாயின. தலித் சமூக மேம்பாட்டு
முன்னணி என்.ஜீ.ஓக்களின் வாலாகச்
செயற்படுகிறது எனப் பொய்க்
குற்றச்சாட்டுகள் எழுதப்பட்டன.
கலைச்செல்வனின் மூன்றாமாண்டு
நினைவுகூரலில் நடந்த கருத்து
விவாதங்கள் கொச்சையாகத் திரிக்கப்பட்டு
தேசத்தில் வெளியாகின. அந்த விவாதம்
குறித்து முற்றிலும் பொய்யான செய்திகளே
எழுதப்பட்டன.
1983 ஜூலைப் படுகொலைகள் நினைவாகப்
பிரான்ஸில் நடத்தப்பட்ட நெடுங்குருதி
நிகழ்வு குறித்துப் பொய்யான தகவல்கள்
பிரசுரிக்கப்பட்டன.
அண்மையில் நடந்த பெண்கள் சந்திப்புக்
குறித்து விமர்சித்து எழுதப்பட்ட
கேவலம் பிடித்த கட்டுரைகள் தேசத்தால்
தேடிப் பிடித்து மறுபிரசுரம்
செய்யப்பட்டன. பெண்கள் சந்திப்பில்
உள்ளாடைகள் தொங்கவிடப்பட்டிருந்ததின்
அரசியல் குறியீடு அர்த்தப்பாட்டையே
கொச்சைப்படுத்தி அங்கே
தொங்கவிடப்பட்டிருந்தவை
உபயோகிக்கப்பட்டவையா எனக் கேட்டிருந்த
வக்கிரமான பின்னூட்டமும் தேசத்தில்
வெளியாகியது.
ரிபிசி வானொலி நிலையத்தில்
களவாடியவர்கள் எஸ். எல். டி. எப்
உறுப்பினர்களே என்றொரு ஆதாரமற்ற
குற்றச்சாட்டு தேசத்தில் பிரசுரமாகியது.
தேசம் தனக்குக் கிடைக்கும் தகவல்களை
அடிப்படை ஊடகவியலாளரின்
விதிமுறைகளுக்கமைய சரி பிழை பார்ப்பது
கிடையாது. எழுந்தமானமாகக்
குற்றச்சாட்டுகளைத் தேசம்
அள்ளியெறியலாம். குற்றம்
சாட்டப்பட்டவர்களே பதிலளித்து தங்கள்
நற்பெயரை நிறுவ வேண்டும் என்பது
தேசத்தின் கருத்து. தேசம் இதுவரை
வெளியிட்ட சரமாரியான
குற்றச்சாட்டுகளுக்கும்
பழிப்புகளுக்கும் இதுவரை எதுவித
ஆதாரங்களையும் சமர்ப்பித்ததில்லை.
அரசியல் - கலை இலக்கியத் தளங்களில்
தனியாகவும் அமைப்பாகவும் இயங்கும் நாம்
பின்வருபனவற்றை வலியுறுத்தி இந்தக்
கூட்டு அறிக்கையை வெளியிடுகிறோம்:
1. கடந்த காலங்களில் தேசம்
இணையத்தளத்தில் ஆதாரங்களில்லாமல்
முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு
ஆதாரங்களைத் தேசம் ஆசிரியர் குழுவினர்
வெளியிட வேண்டும். ஆதாரங்களை
வெளியிடமுடியாத பட்சத்தில் தேசம்
இணையத்தளம் ஊடக நெறிகளின்படி வருத்தம்
தெரிவித்தாக வேண்டும்.
2. செய்திகள் கட்டுரைகளின்
நம்பகத்தன்மையை உறுதி செய்யாமல் (அவை
தனிநபர்களையோ அமைப்புகளையோ நேரடியாகவோ
மறைமுகமாகவோ அவதூறு செய்யும் நோக்கில்
எழுதப்பட்டிருப்பின்) பிரசுரிப்பதை
நிறுத்த வேண்டும்.
11 செப்ரம்பர் 2008
தொடர்புகளுக்கு:
opposecalumny@googlemail.com
1.
கற்சுறா - மற்றது - கனடா
2. அருந்ததி - தலித் சமூக மேம்பாட்டு
முன்னணி - பிரான்ஸ்
3. ரஞ்சி -ஊடறு- சுவிஸ்
4. செழியன் - கருமையம்- கனடா
5. நிர்மலா ராஜசிங்கம் -
எஸ்.எல்.டி.எவ் - இங்கிலாந்து
6. அ. தேவதாசன் - தலித் சமூக
மேம்பாட்டு முன்னணி - பிரான்ஸ்
7. பௌஸர் - மூன்றாவது மனிதன் -
இங்கிலாந்து
8. அசுரா - தலித் சமூக மேம்பாட்டு
முன்னணி - பிரான்ஸ்
9. யோகரட்ணம் - தலித் சமூக மேம்பாட்டு
முன்னணி - பிரான்ஸ்
10. சுந்தரலிங்கம் -தலித் சமூக
மேம்பாட்டு முன்னணி - பிரான்ஸ்
11. ஷோபாசக்தி - சத்தியக்கடதாசி -பிரான்ஸ்
12. சுகன் - சத்தியக்கடதாசி - பிரான்ஸ்
13 தியோ ரூபன் - சத்தியக்கடதாசி -
பிரான்ஸ்
14. விஜி - கிழக்கிலங்கை ஜனநாயக
முன்னணி - பிரான்ஸ்
15. எம். ஆர். ஸ்டாலின் - கிழக்கிலங்கை
ஜனநாயக முன்னணி - பிரான்ஸ்
16. ராகவன் - எஸ்.எல்.டி.எவ்-
இங்கிலாந்து
17. எஸ் பஷீர் எஸ்.எல்.எம்.அய்.சி -இங்கிலாந்து
18. சந்துஷ் - எஸ்.எல்.டி.எவ் -
இங்கிலாந்து
19. நமோ பொன்னம்பலம் - எஸ்.எல்.டி.எவ்
- கனடா
20. அகிலன் கதிர்காமர் -
எஸ்.எல்.டி.எவ்- யு.எஸ்.ஏ
21. டாக்டர் நீதிராஜா - இங்கிலாந்து
22. ரவி பொன்னுத்துரை - வைகறை - கனடா
23. சாந்தன் - விம்பம் - இங்கிலாந்து
24. ஜெபா - மற்றது- கனடா
25. ரவி - மனிதம் -சுவிஸ்
26. ரகு கதிரவேலு - ஈழநாசம் இணையத்தளம்
- கனடா
27. நஜா மொகமட் எஸ்.எல்.அய்.எப் -
இங்கிலாந்து
28. கே. கிருஷ்ணராஜா விம்பம் -
இங்கிலாந்து
29. டாக்டர் ரயீஸ் முஸ்தபா
எஸ்.எல்.அய்.எப் - இங்கிலாந்து
30. எஸ்.எம்.மார்சூக் இஸ்லாம்-
அய்.எஸ்.ஏ.எம் - இங்கிலாந்து
31. வில்பிரெட் வில்சன் வைகறை - கனடா
32. ஏ. குமாரதுரை விழிப்பு இணையத்தளம்
- டென்மார்க்
33. கீரன் - இங்கிலாந்து
34. செல்வராஜா ஆதவன் - கனடா
35. வாசுகி பரமசாமி - கனடா
36. விஜயகுமாரி முருகையா - கனடா
37. தர்சனா தர்மலிங்கம் - இங்கிலாந்து
38. எஸ். சுந்திரகுமார் - இங்கிலாந்து
39. எஸ். தவராஜா - இங்கிலாந்து
40. ஷாரிகா திராணகம - நெதர்லாந்து
41. டாக்டர் நிக்கலஸ்பிள்ளை -
இங்கிலாந்து
42. ரஜிதா. எஸ். வேலு- இங்கிலாந்து
43. உமா - ஜெர்மனி
44. மல்லிகா பரராஜசிங்கம்- ஜெர்மனி
45. எஸ்.பாலன் - இங்கிலாந்து
46. எஸ். வேலு - இங்கிலாந்து
47. மு. நித்தியானந்தன் - இங்கிலாந்து
48. அபி இராசரட்ணம் - இங்கிலாந்து
49. காண்டீபன் - இங்கிலாந்து
50. த.ஜெயகுமார் - இங்கிலாந்து
51. போல் பெர்னான்டோ - இங்கிலாந்து
52. அகிலன் வர்ணகுலசிங்கம் -
இங்கிலாந்து
53. சிவசாமி சிவராஜன் - ஜெர்மனி
54. மங்கை சிவராஜன் - ஜெர்மனி
55. தர்மினி - பிரான்ஸ்
56. தேவா - சுவிஸ்
57. சங்கீதா ஜெயகுமார் - இங்கிலாந்து
58. சுமதி ரூபன் - கனடா
59. இன்பா சுசீந்திரன் - ஜெர்மனி
60. ந. சுசீந்திரன் - ஜெர்மனி
61. மனோரஞ்சன் - கனடா
62. ஏ. எம். ரஷ்மி - இங்கிலாந்து
63. போல்(நரேஷ்) - இங்கிலாந்து
64. ஜெமினி - ஜெர்மனி
65. நந்தன் - ஜெர்மனி
66. நிமோ - ஜெர்மனி
67. சங்கர் - ஜெர்மனி
68. நா.சபேசன் - இங்கிலாந்து
69. நா. சிறி கெங்காதரன் - இங்கிலாந்து
70. ஈசன் சோமசுந்தரம் - இங்கிலாந்து
71. எம்.வை.எம் சித்தீக் - இங்கிலாந்து
72. பாலசூரியன் – நெதர்லாந்து
73. சிவகுமார் - இங்கிலாந்து.
74. சோலையூரான் - பிரான்ஸ் |