<%@ Language=JavaScript %> Welcome. !

 E-mail:enngal@gmail.com

தமக்குத் தீமையைச் செய்தவருக்கும், தாம் பதிலுக்குத் தீமை செய்யாது மன்னித்து விடுவதை, அறிவினுள் எல்லாம் சிறந்த அறிவு என்பார்கள்.

வவுனியா கூட்டுப் படைத்தளம் மீதான தாக்குதலில் உயிரிழந்த பத்து கரும்புலிகளுக்கும் பிரபாகரன் அஞ்சலி செலுத்தியுள்ளார். வவுனியா விடுதியிலிருந்து கடத்தப்பட்ட இளைஞன் கழுத்து நெரித்து கொலை வயல் வெளியில் சடலம் கண்டுபிடிப்பு. மோட்டார் சைக்கிளில் சென்ற மூவர் கூரிய ஆயுதங்களால் குத்தி ஆசிரியையின் தங்க நகை அபகரிப்பு மேற்கொண்டுள்ளனர். மட்டக்களப்பு பொலிஸ் சோதனைசாவடி மீது புலிகள்  அதிகாலை 2 மணியளவில் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். இரனமடு பகுதியில் விடுதலைப்புலிகளின் கட்டிடத்தொகுதி ஒன்றின் மீது விமானத்தாக்கதல் மேற்கொண்டுள்ளனர். கொழும்பு காலி சிறைச்சாலையில் இருந்து தப்பி ஓடிய மூன்று கைதிகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளனர்.

 

 
செய்தி் புதுப்பிக்கப்பட்ட நாள்:13 செப்டம்பர், 2008

* தமிழ்  சினிமா*

*ஜோ‌திட‌ வார பலன்*

 

வவுனியா கூட்டுப் படைத்தளம் மீதான தாக்குதலில் உயிரிழந்த பத்து கரும்புலிகளுக்கும் பிரபாகரன் அஞ்சலி செலுத்தியுள்ளார்.

வவுனியா கூட்டுப் படைத்தளம் மீதான தாக்குதலில் உயிரிழந்த பத்து கரும்புலி உறுப்பினர்களுக்கும் விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அஞ்சலி செலுத்தியுள்ளார்.

வன்னியில் பிரத்தியேகமாக ஒழுங்கு செய்யப்பட்ட ஓரிடத்தில் பிரபாகரன் இந்த அஞ்சலியைச் செலுத்தியுள்ளார்.

கடந்த செவ்வாய்க்கிழமை அதிகாலை வவுனியாவில் இராணுவ மற்றும் விமானப் படைக் கூட்டுத் தளங்கள் மீது விடுதலைப்புலிகள் நடத்திய தாக்குதலில் படைத்தரப்புக்கு
சேதங்கள் ஏற்பட்டுள்ளன.

இந்தத் தாக்குதலில் உயிரிழந்த கரும்புலிகளுக்கு பிரபாகரன் தனது அஞ்சலியை செலுத்தியுள்ளார். இவர்களது உடல்கள் நேற்று முன்தினம் வன்னிக்கு கொண்டு செல்லப்பட்டதும் தெரிந்ததே.

வவுனியா விடுதியிலிருந்து கடத்தப்பட்ட இளைஞன் கழுத்து நெரித்து கொலை வயல் வெளியில் சடலம் கண்டுபிடிப்பு.

வவுனியா நகரிலுள்ள விடுதியொன்றிலிருந்து நேற்று முன்தினம் வியாழக்கிழமை மாலை கடத்திச் செல்லப்பட்ட இளைஞனொருவர் கழுத்து நெரித்துக் கொல்லப்பட்டுள்ளார்.

இவரது சடலம் நேற்றுக் காலை வவுனியா நகருக்கு வெளியே பட்டாணிச்சூர் புளியங்குளம் பகுதியில் 5 ஆம் ஒழுங்கையில் வயல்வெளிக்கு அருகிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டது.

நேற்று முன்தினம் மாலை 5மணியளவில் இந்த இளைஞன் வவுனியா நகரிலுள்ள விடுதியொன்றிலிருந்து இனந்தெரியாத சிலரால் கடத்திச் செல்லப்பட்ட நிலையிலேயே நேற்றுக் காலை இவரது சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கயிற்றினால் கழுத்து நெரிக்கப்பட்டே இவர் கொல்லப்பட்டிருக்கலாமெனக் கருதப்படுகிறது. இவரது கழுத்தில் கயிறொன்றும் கிடந்துள்ளது.

பொதுமக்கள் வழங்கிய தகவலையடுத்து அப்பகுதி கிராம சேவையாளருடன் சென்ற பொலிஸார் சடலத்தை கைப்பற்றி வவுனியா ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர்.

சடலம் அடையாளம் காணப்படுவதற்காக ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டுள்ளது. இறந்தவர் வன்னிப் பகுதியைச் சேர்ந்தவராயிருக்கலாமெனவும் கூறப்படுகிறது.

மோட்டார் சைக்கிளில் சென்ற மூவர் கூரிய ஆயுதங்களால் குத்தி ஆசிரியையின் தங்க நகை அபகரிப்பு மேற்கொண்டுள்ளனர்.

மோட்டார் சைக்கிளில் சென்ற மூவர் கொண்ட கொள்ளை கோஷ்டி ஒன்று கூரிய ஆயுதங்களைக் காட்டி ஆசிரியை ஒருவரை அச்சுறுத்திய பின் அவர் அணிந்திருந்த தங்கநகைகளை அபகரித்த பின் அவரது கழுத்து மற்றும் கை, மார்புப் பகுதிகளில் அவ்வாயுதத்தால் குத்திவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்.

இச்சம்பவம் சீகிரிய பொலிஸ் பிரிவிலமைந்துள்ள களுந்தேவ என்ற கிராமத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 1.30 மணியளவில் நிகழ்ந்துள்ளது.

கண்டலம டி.எஸ். சேனநாயக்க மகா வித்தியாலயத்தில் கல்வி கற்பிக்கும் சுசீமா தர்மசேன என்ற ஆசிரியையே இவ்வாறு கத்திக்குத்திற்கு இலக்கானவராவார்.

பலத்த காயத்துக்குள்ளான ஆசிரியை தம்புள்ள ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சீகிரிய பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி டி.எம். சோமதிலக்க தலைமையிலான பொலிஸ் குழுவினர் இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மட்டக்களப்பு பொலிஸ் சோதனைசாவடி மீது புலிகள்  அதிகாலை 2 மணியளவில் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

மட்டக்களப்பு திமிலதீவு பகுதியில் அமைந்துள்ள பொலிஸ் சோதனைசாவடி மீது விடுதலைப்புலிகள் இன்று அதிகாலை 2 மணியளவில் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

பாதுகாப்பு பிரிவினர் இத் தாக்கதளுக்கு பதில் தாக்குதல் மேற்கொண்டுள்ளதாகவும் அத் தாக்குதலின் பின்னர் விடுதலைப்புலிகள் அப் பிரதேசத்தை விட்டு வெளியேரியதாகவும் இத் தாக்கதல்களின் போது உரு பொலிஸ் அதிகாரி பலியாகியுள்ளதாகவும் தேசிய பாதுகாப்பிற்கான ஊடக மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

மட்டக்களப்பு புதூர் கிராமத்திலேயே இந்த முகாம் அமைந்துள்ளது. அப்பிரதேசத்தில் பாதுகாப்பு பிரிவினர் சோதனை நடவடிக்கை மேற்கொண்டுவருவதாகவும் தேசிய பாதுகாப்பிற்கான ஊடக மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இரனமடு பகுதியில் விடுதலைப்புலிகளின் கட்டிடத்தொகுதி ஒன்றின் மீது விமானத்தாக்கதல் மேற்கொண்டுள்ளனர்.

இரனமடு பகுதியில் இருந்து ஒரு கிலோமீற்றர் தூரத்தில் அமைந்துள்ள காட்டுப் பகுதியில் அமைந்திருந்த பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்பட்ட விடுதலைப்புலிகளின் கட்டிடத் தொகுதி ஒன்றின் மீது விமானப்படையினர் விமானத் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

இரனமடு காட்டுப்பகுதியில் பகுதில் மிகவும் மறைவான ஒரு பிரதேசத்தில் அமைந்திருந்த இந்த கட்டிடத் தொகுதி கொங்ரீட்டினால் அமைக்கப்பட்டு்ள்ளது.

இன்று காலை 8.00 மணியளவில் விமானப்படையினரின் யுத்த ஜெட் விமானங்களை பயன்னடுத்தி மேற்கொள்ளப்பட்ட இந்த தாக்குதல் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டதை விமானிகள் உறுதி செய்துள்ளதாக தேசிய பாதுகாப்பிற்கான ஊடக மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

மட்டக்களப்பு வெலாவெலி பகுதியில் இன்று பொலிஸ் ஜீப் வண்டி ஒன்றின் மீது கீளேமோர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

பொலிஸ் அதிகாரிகள் சிலர் பயணித்துக் கொண்டிருந்த பொலிஸ் ஜீப் வண்டி ஒன்றை இலக்கு வைத்து மட்டக்களப்பு வெலாவெலி பகுதியில் இன்று காலை கீளேமோர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இன்று காலை 9.10 மணியளவில் இடம்பெற்ற கிளேமோர் தாக்குதலில் 4 பொலிஸார் காயமடைந்துள்ளதாக தேசிய பாதுகாப்பிற்கான ஊடக மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

பொலிலிஸார் இப்பகுதியில் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டுவருவதாககவும் தேசிய பாதுகாப்பிற்கான ஊடக மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

கொழும்பு காலி சிறைச்சாலையில் இருந்து தப்பி ஓடிய மூன்று கைதிகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளனர்.

காலி சிறைச்சாலையில் இருந்து தப்பி ஓடிய மூன்று கைதிகள் காலி சிறைச்சாலை அதிகாரிகளால் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளனர்.

சிறைச்சாலை காவலரொருவரை கூரிய ஆயுதமொன்றினால் குத்தி காயப்பட்டுத்திவிட்டு சிறைச்சாலை மதிலால் பாய்ந்து தப்பி ஓட சென்ற மூன்று கைதிகளில் இருவர் காலி ஹவ்லொக் வீதியில் வைத்து சுட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

மற்றொரு கைதி சினத் தோட்டத்தில் வைத்து சுட்டுக் கொள்ளப்பட்டதாக காலி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

<<முன்னைய பதிவுகள்>>

Last update: 20-06-2008. Desigin and Copyright