<%@ Language=JavaScript %> Welcome. !

 E-mail:enngal@gmail.com

தமக்குத் தீமையைச் செய்தவருக்கும், தாம் பதிலுக்குத் தீமை செய்யாது மன்னித்து விடுவதை, அறிவினுள் எல்லாம் சிறந்த அறிவு என்பார்கள்.

யாழ். பாடசாலை மாணவ விளையாட்டு அணிகளின் பல்வேறு தேவைகளையும் கேட்டறிந்து நடவடிக்கை மேற்கொண்டு வரும் அமைச்சர்.

 

 
செய்தி் புதுப்பிக்கப்பட்ட நாள்:10 செப்டம்பர், 2008

* தமிழ்  சினிமா*

*ஜோ‌திட‌ வார பலன்*

 

யாழ். பாடசாலை மாணவ விளையாட்டு அணிகளின் பல்வேறு தேவைகளையும் கேட்டறிந்து நடவடிக்கை மேற்கொண்டு வரும் அமைச்சர்.

யாழ் சென் ஜோன்ஸ் கல்லூரி, யாழ்ப்பாணக்கல்லூரி உடுவில் மகளிர் கல்லூரி அளவெட்டி அருணாசலம் பாடசாலை ஆகியவற்றின் பாடசாலை விளையாட்டு அணிகள் நேற்றைய தினம் கொழும்பு வந்தடைந்த நிலையில் நேற்று மாலை ஜனாதிபதியுடன் தமது சந்திப்பை மேற்கொண்டிருந்தன. இதேவேளை இன்று காலை முதல் மதியம் வரை சமூக சேவைகள் அமைச்சுப் பணிமனைக்கு வருகை தந்து அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுடன் நீண்டநேரம் கலந்துரையாடி தமது தேவைகள் மற்றும் வேண்டுகோள்களையும் தெரியப்படுத்தினர்.

தேசிய விளையாட்டுப் போட்டிகளில்; ஹொக்கி போட்டிகளில் பங்குகொள்ள வருகை தந்துள்ள நிலையில் இப்போட்டிகள் நாளைய தினம் இடம்பெறவுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்து.

பாடசாலைகளுக்கிடையிலான தேசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்குகொள்ளும் யாழ் மாணவர்களின் தங்குமிட உணவு போக்குவரத்து உட்பட அனைத்து தேவைகளையும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களே பொறுப்பெடுத்து மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கதாகும். நேற்றைய தினம் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம், ரூபவாஹினிக் கூட்டுத்தாபனம், பாராளுமன்றம் ஆகிய இடங்களைச் சென்று பார்வையிடுவதற்கும் ஜனாதிபதியுடனான சந்திப்புக்கும் சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஒழுங்குகளை மேற்கொண்டதுடன் மாணவர்களை நேரில் அழைத்துச் சென்றதும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.

<<முன்னைய பதிவுகள்>>

Last update: 20-06-2008. Desigin and Copyright