<%@ Language=JavaScript %> Welcome. !

 E-mail:enngal@gmail.com

தமக்குத் தீமையைச் செய்தவருக்கும், தாம் பதிலுக்குத் தீமை செய்யாது மன்னித்து விடுவதை, அறிவினுள் எல்லாம் சிறந்த அறிவு என்பார்கள்.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்கள் யாழ் குடாநாட்டு மாணவர்களைச் சந்தித்து கலந்துரையாடி பார்வையிட்டுள்ளனர்.

 

 
செய்தி் புதுப்பிக்கப்பட்ட நாள்:10 செப்டம்பர், 2008

* தமிழ்  சினிமா*

*ஜோ‌திட‌ வார பலன்*

 

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்கள் யாழ் குடாநாட்டு மாணவர்களைச் சந்தித்து கலந்துரையாடி பார்வையிட்டுள்ளனர்.

யாழ்.குடா நாட்டிலிருந்து தேசிய மட்டத்தில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்ட மாணவர்களும், புத்துருவாக்கல் கண்காட்சியில் தமது நவீன கண்டுபிடிப்புகளைக் காட்சிப்படுத்திய மாணவர்களும் இன்று காலை கோட்டை ஸ்ரீ ஜெயவர்த்தனபுரவிலுள்ள பாராளுமன்றத்திற்குச் சென்று பாராளுமன்ற நடவடிக்கைகளையும் பார்வையிட்டுள்ளனர்.

பாராளுமன்றத்திற்குச் சென்ற மாணவர்கள் பாராளுமன்றச் சம்பிரதாயம் மற்றும் நடைமுறைகளை அங்குள்ள அதிகாரிகளிடம் கேட்டுத் தெரிந்து கொண்டதுடன் பாராளுமன்றச் சபை நடவடிக்கைகளையும் அவதானித்துள்ளனர்.

இன்று நண்பகல் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம், இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனம் என்பனவற்றிற்கு விஜயம் செய்த மாணவர்கள் அங்குள்ள ஒலி, ஒளிபரப்பு நடவடிக்கைகளை நேரில் அவதானித்தும், அங்குள்ள அதிகாரிகளிடம் போதிய விளக்கங்களைக் கேட்டும் தெரிந்து கொண்டனர். ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் ஆனந்த சமரக்கோன் கலையரங்கில் சிறப்பு நிகழ்ச்சியில் நேரடியாகக் கலந்து கொண்ட மாணவர்கள், மிகுந்த மகிழ்ச்சியுடன் நிகழ்வுகளில் பங்கேற்று தமது திறமைகளை வெளிப்படுத்தியிருந்ததும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

இதேவேளை, இன்று மாலை சுமார் 10 வருடங்களுக்குப் பின்னர் தேசிய மட்ட விளையாட்டுப் போட்டியிலும், புத்துருவாக்கல் கண்காட்சியிலும் பங்கேற்ற மாணவர்கள் ஜனாதிபதியின் வாசஸ்தலமான அலரிமாளிகைக்குச் சென்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து யாழ்.குடா நாட்டிலிருந்து வந்த மாணவர்கள் என்ற அடிப்படையில் ஜனாதிபதியுடன் தமது மகிழ்ச்சிகளைப் பகிர்ந்து கொண்டனர். இச்சமயம் சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, யாழ்.குடா நாட்டு மாணவர்கள், தேசிய மட்ட விளையாட்டுப் போட்டிகளிலும், புத்துருவாக்கல் கண்காட்சிகளிலும் ஆர்வமுடன் பங்குபற்றியமை குறித்தும், அவர்கள் வெளிப்படுத்திய திறமைகள் மற்றும் அவர்களின் நவீன கண்டுபிடிப்புகள் குறித்தும் ஜனாதிபதியிடம் எடுத்துக் கூறினார்.

இந்நிகழ்வின் போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ யாழ்.குடா நாட்டு மாணவர்களுடன் அன்னியோன்னியமாக மகிழ்ச்சியுடன் கலந்துரையாடியுள்ளதுடன், மாணவர்களின் திறமைகளைப் பாராட்டியுள்ளதும் குறிப்பிடத்தக்கதாகும்.

<<முன்னைய பதிவுகள்>>

Last update: 20-06-2008. Desigin and Copyright