<%@ Language=JavaScript %> Welcome. !

 E-mail:enngal@gmail.com

தமக்குத் தீமையைச் செய்தவருக்கும், தாம் பதிலுக்குத் தீமை செய்யாது மன்னித்து விடுவதை, அறிவினுள் எல்லாம் சிறந்த அறிவு என்பார்கள்.

புலிகளின் இலகு ரக இரு விமானங்கள் வான் பகுதியில் வைத்து சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது பாதுகாப்பு அமைச்சு செய்தி வெளியிட்டுள்ளது.  வன்னிக்களத்தில் விமானத்தாக்குதலை அதிகரித்து படையினர் முன்னேற முயற்சி தாக்குதல்கள் தீவிரமடைந்துள்ளன. கிழக்கு மாகாண முதலமைச்சர் பிள்ளையானின் (சிவநேசத்துரை சந்திரகாந்தன்)அவர்களின்  ஊடகவியலாளர் ஒருவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்துள்ளார்.

 

 
செய்தி் புதுப்பிக்கப்பட்ட நாள்:09 செப்டம்பர், 2008

* தமிழ்  சினிமா*

*ஜோ‌திட‌ வார பலன்*

 

புலிகளின் இலகு ரக இரு விமானங்கள் வான் பகுதியில் வைத்து சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது பாதுகாப்பு அமைச்சு செய்தி வெளியிட்டுள்ளது.

வவுனியா விமானப் படைத் தளத்தை அண்மித்த பகுதிகளின் மீது குண்டுத் தாக்குதல் நடத்திய புலிகளின் இலகு ரக விமானமொன்றை விமானப் படையின் விமானங்கள் முல்லைத்தீவு வான் பகுதியில் வைத்து சுட்டு வீழ்த்தியுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு செய்தி வெளியிட்டுள்ளது.

வவுனியாவுக்குள் அதிகாலை 4.00 மணியளவில் புலிகளின் இரு விமானங்கள் பிரவேசித்ததை ரேடர்கள் காட்டியதை அடுத்து, கட்டுநாயக்கா விமானப் படைத்தளத்திலிருந்து அனுப்பி வைக்கப்பட்ட விமானப் படையின் ஜெட் விமானங்களே புலிகளின் இலகு ரக விமானத்தின் மீது தாக்குதல் நடத்தியதாக விமானப் படையின் விங் கொமாண்டார் ஜனக நாணயக்கார உறுதி தெரிவித்துள்ளார். மேலதிக தகவல்கள் கிடைத்தவுடன் தரப்படும்.

வன்னிக்களத்தில் விமானத்தாக்குதலை அதிகரித்து படையினர் முன்னேற முயற்சி தாக்குதல்கள் தீவிரமடைந்துள்ளன.

வன்னியில் பாரிய படை நகர்வு தொடர்கையில் விமானப் படை விமானங்களின் தாக்குதல்கள் தீவிரமடைந்துள்ளன நேற்று திங்கட்கிழமையும் கிளிநொச்சிக்கு வடமேற்கே குண்டுவீச்சு விமானங்கள் கடும் தாக்குதலை நடத்தியுள்ளதாக விமானப்படையினர் தெரிவித்துள்ளனர்.

மன்னார் பூநகரி வீதியில் நாச்சிக்குடாவுக்கு வடக்கே நேற்றுக்காலை 8.35மணியளவில் இந்தத்தாக்குதல் நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

விடுதலைப் புலிகளின் பதுங்குகுழிகள் மற்றும் வலு நிலைகள் மீதே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக விமானப் படையினர் கூறியுள்ளனர்.

வன்னிக்களமுனையில் முன்னேற்ற முயற்சியில் ஈடுபட்டு வரும் 57ஆவது, 58ஆவது படையினருக்கு உதவுவதற்காகவே தற்போது நாச்சிக்குடா, வன்னேரி, அக்கராயன் பகுதிகளில் விமானத்தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

நேற்று முன்தினம் பூநகரி, மாங்குளம் பகுதிகளில் மூன்றுக்கும் மேற்பட்ட தடவைகள் விமானத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதும் தெரிந்ததே.

கிழக்கு மாகாண முதலமைச்சர் பிள்ளையானின் (சிவநேசத்துரை சந்திரகாந்தன்)அவர்களின்  ஊடகவியலாளர் ஒருவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்துள்ளார்.

கிழக்க மாகாண முதலமைச்சர் திரு சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களின் முன்னாள் ஊடகப் பொறுப்பாளரான ராதிகா தேவகுமார் என்பவர் பிரபாகரன் தலைமையிலான மனநோயாளிகளால் இன்று துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகியுள்ளார். துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்த அவர் மட்டக்களப்பு மருத்துவமனையில் சிகிற்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பு கல்லடியில் ஊடகவியலாளர் மீது மனநோயாளிகளால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. இதில் ஊடகவியலாளரான 35 வயதுடைய ராதிகா தேவகுமார் இன்றிரவு 7.40 மணியளவில் கல்லடியில் அமைந்துள்ள அவரது வீட்டுக்கு அருகில் வைத்து இவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. வயிற்றில் படுகாயமடைந்த நிலையில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவர் சிறிது காலம் கிழக்கு மாகாண முதலமைச்சரான சந்திரகாந்தன் அவர்களின் ஊடக செயலாளராக பணியாற்றியிருந்தமை இங்கே குறிப்பிடத்தக்கது. தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளுடன் நெருக்கமாக இணைந்து பணியாற்றுபவர்களை ஒழித்துக்கட்டுவதன்மூலம் தமது தமிழீழக் கனவை நனவாக்கமுடியுமென கனவு காணும் புலிப்பயங்கரவாதிகளின் வரலாறு புதைக்கப்படும் காலம் வெகுவிரைவில் என்பதனை கிழக்குமக்கள் விரைவில் தமது செயற்பாட்டின்மூலம் நிரூபிப்பது நிட்சயமாகும்.

<<முன்னைய பதிவுகள்>>

Last update: 20-06-2008. Desigin and Copyright