|
அமைச்சர் டக்ளஸ்
தேவானந்தாவிடமிருந்து விடைபெற்று
யாழ். புறப்பட்ட முதலாவது தொகுதி
விளையாட்டு அணியினர்.
தேசிய விளையாட்டுப் போட்டிகளில் ஒரு
தங்கப்பதக்கம் உட்பட 3 பதக்கங்களை
வென்றெடுத்துள்ள நிலையில் முதலாவது
தொகுதி அணியினர் இன்றிரவு வடபகுதி
நோக்கி புறப்பட்டனர்.
மேல் மாகாணம் உட்பட நாட்டின் முன்னணி
பாடசாலைகளுக்கிடையிலான கடும்
போட்டியிலும் மத்தியிலும் உடற்பயிற்சி
மெய்வல்லுநர் போட்டியில் ஊர்காவற்றுறை
சென். அன்ரனீஸ் கல்லூரி அணி
தங்கப்பதக்கத்தை வென்றெடுத்திருப்பது
அனைவரினதும் பாராட்டுதல்களைப்
பெற்றள்ளது. மேலும் மானிப்பாய் மகளிர்
கல்லூரி வலைப்பந்தாட்டத்திலும்,
மானிப்பாய் இந்துக்கல்லூரி
கைப்பந்தாட்டத்திலும் தேசிய ரீதியில்
வெண்கலப்பதக்கங்களை வென்றெடுத்துள்ளன.
தற்போது கொழும்பில் இடம்பெறும்
பாடசாலைகளுக்கிடையிலான தேசிய
விளையாட்டுப் போட்டிகளில் பங்கெடுத்த
நிலையில் முதலாவது தொகுதி அணியினர்
வடபகுதி நோக்கி செல்வதற்காக இன்றிரவு
திருகோணமலை நோக்கி பயணமாகினர்.
முன்னதாக வடமாகாண விஷேட செயலணித்
தலைவரும் ஈபிடிபி செயலாளர் நாயகமுமான
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின்
வாசஸ்தலத்திற்கு நேரடியாகச் சென்ற
மாணவ மாணவியர்கள் அமைச்சர் டக்ளஸ்
தேவானந்தா அவர்கள் தமக்குச்
செய்துதவிய தங்குமிட, ஆகாரம் மற்றும்
போக்குவரத்து உட்பட அனைத்து உதவிகள்
ஒத்தாசைகளுக்கும் நன்றி கூறி
வாஞ்சையுடன் விடைபெற்றனர்.
அவர்கள் மத்தியில் உரையாற்றிய அமைச்சர்
டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தம்மை
சந்தித்து விடைபெற வந்திரந்த மாணவர்கள்
அனைவருக்கும் தமது நல்வாழ்த்துக்களைத்
தெரிவித்துக் கொண்டதுடன்
வெற்றியினையும் தோல்வியினையும் சமனாக
ஏற்றுக்கொள்ள வேண்டும் என அறிவுரை கூறி
அன்புடன் வழியனுப்பி வைத்தார். |