<%@ Language=JavaScript %> Welcome. !

 E-mail:enngal@gmail.com

தமக்குத் தீமையைச் செய்தவருக்கும், தாம் பதிலுக்குத் தீமை செய்யாது மன்னித்து விடுவதை, அறிவினுள் எல்லாம் சிறந்த அறிவு என்பார்கள்.

கொழும்பில் இடம்பெற்ற புதிய கண்டுபிடிப்புக்கள் கண்காட்சியில் அசத்திய யாழ். மாணவர்கள். அனைவரையும் வியப்பிலாழ்த்தினர்.

 

 
செய்தி் புதுப்பிக்கப்பட்ட நாள்:07 செப்டம்பர், 2008

* தமிழ்  சினிமா*

*ஜோ‌திட‌ வார பலன்*

 

கொழும்பில் இடம்பெற்ற புதிய கண்டுபிடிப்புக்கள் கண்காட்சியில் அசத்திய யாழ். மாணவர்கள். அனைவரையும் வியப்பிலாழ்த்தினர்.

தேசிய புத்தாக்குனர் திணைக்கள ஏற்பாட்டில் கொழும்பில் இடம்பெற்ற புத்துருவாக்குதல் மற்றும் புதுமை புகுத்தல் கண்காட்சியில் தமது படைப்புக்களை காட்சிப்படுத்திய யாழ். மாணவர்கள் அனைவரையும் வியப்பிலாழ்த்தினர்.

கொழும்பு உயர் தொழில்நுட்ப கல்லூரியில் இன்றையதினம் (07.09.208) நடைபெற்றுள்ள புத்தாக்கல் மற்றும் புதுமைபுகுத்தல் 2008 நிகழ்வில் பங்கு கொள்வதற்குத் தமக்குரிய வசதிகளை ஏற்;பாடு செய்து தருமாறு, யாழ்.மாவட்ட புத்துருவாக்கல் மற்றும் புதுமைபுகுத்தல் கண்டுபிடிப்பு மாணவர்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களிடம் யாழ்ப்பாணத்திலிருந்து வேண்டுகோள் விடுத்திருந்தனர்

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ்.தலைமையகத்திற்கு கடந்த வாரம் சென்றிருந்த புத்துருவாக்கல் மற்றும் புதுமை புகுத்தல் மாணவர்கள் கொழும்பில் நடைபெறவுள்ள நிகழ்வில் தாமும் பங்கு கொண்டு, தமது திறமைகளை வெளிப்படுத்துவதற்கு யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு செல்வதற்கான பயண ஏற்பாடுகள் உட்பட அனைத்து வசதிகளையும் செய்து தருமாறு ஈ.பி.டி.பி.யின் யாழ்.மாவட்ட அமைப்பாளரான உதயன் என்றழைக்கப்படும் சில்வேஸ்திரி அலன்டின் ஜுட்டிடம் தெரிவித்திருந்தனர்.

அவர்களது கோரிக்கைகளை ஈ.பி.டி.பி.யின் யாழ்.மாவட்ட அமைப்பாளர் உதயன், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் கவனத்திற்கு கொண்டு வந்தமையைத் தொடர்ந்து, மாணவர்கள் அனைவரும்  கொழும்பு வருவதற்கான ஏற்பாடுகள் அனைத்தையும் மேற்கொண்டதுடன் சகல உதவி ஒத்தாசைகளையும் அவர் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

யாழ். சுண்டிற்குளி மகளிர் கல்லூரி மாணவி செல்வி சோபிதா கமலராஜா கடல்நீரை எளிய முறையில் நன்னீராக்கல்

யாழ். மத்திய கல்லூரி மாணவன் செல்வன் உதயகுமார் டயந்தன் தேங்காய் துருவும் கருவி மூலம் இலகுவாக மரக்கறி நறுக்குதல்

யாழ். மத்திய கல்லூரி மாணவன் செல்வன் ராசேந்திரம் ருபேந்திரன் இருட்டு வேளைகளில் வாசிக்க உதவும் மூக்குக்கண்ணாடி

யாழ். மத்திய கல்லூரி மாணவன் செல்வன் செந்தூர்ச் செல்வன் அம்புஜன் பிற்பொக்கட் அடித்தால் அபாய ஒலி எழுப்பும் பேர்ஸ்

யாழ். மத்திய கல்லூரி மாணவன் செல்வன் ராஜரட்ணம் விதூஷன் இலகுவழியில் மரக்கறி நறுக்க உதவும் கருவி

யாழ். சுண்டிற்குளி மகளிர் கல்லூரி மாணவி செல்வி ரேணுகா அமிர்தலிங்கம் வேப்பிலை, துளசி இலை மூலம் உடல் நலத்திற்கு கேடு விளைவிக்காத நுளம்புத்திரி

கோப்பாய் சரவணபவ வித்தியாலய மாணவன் செல்வன் நல்லநாதன் பிரசாந்தன் இருட்டில் நடக்க உதவும் சப்பாத்து, இருளில் சுத்தப்படுத்த உதவும் தும்புத்தடி, இரவில் நடக்க உதவும் கைதடி

யாழ். மத்திய கல்லூரி மாணவன் செல்வன் சுரேஷ்குமார் தர்ஷன் பாதுகாப்பான எளிய முறையிலான எலிப்பொறி. இப்பொறியில் எலி உள்ளே போகமுடியும். வெளியே வரமுடியாது.

யாழ். மத்திய கல்லூரி மாணவன் செல்வன் எஸ்.பிரதாபன் உணவுச் சாலைகளுக்கு ஏற்ற வகையில் பெருமளவு மரக்கறிகளை மின்சாரத்தாலும் கையினாலும் வெட்டும் உபகரணம்.
 

 

<<முன்னைய பதிவுகள்>>

Last update: 20-06-2008. Desigin and Copyright