|
மாங்குளத்திற்கருகில்
விடுதலைப் புலிகளின் பயிற்சி முகாம்
மீது விமானத் தாக்குதல் பாதுகாப்பு
அமைச்சகம் செய்தி வெளியிட்டுள்ளது.
மாங்குளத்திற்கருகில்
விடுதலைப் புலிகளின் பயிற்சி முகாம்
மீது விமானத் தாக்குதல் முல்லைத்தீவு
மாவட்டம் மாங்குளத்தி்ற்கு மேற்கே
3கிலோ மீற்றர் தொலைவில்
அமைந்திருந்த விடுதலைப் புலிகளின்
பயிற்சி முகாம் ஒன்றின்மீது இன்று காலை
10.20 மணியளவில் விமானப்படையின்
தாக்குதல் விமானங்கள் குண்டுத்
தாக்குதல்களை நடத்தியுள்ளதாகப்
பாதுகாப்பு அமைச்சகம் செய்தி
வெளியிட்டுள்ளது.
தெரிவு செய்யப்பட்ட இந்த இலக்கின் மீது
வெற்றிகரமாக வான் தாக்குதல்
நடத்தப்பட்டுள்ளதாக விமானப்படைப்
பேச்சாளர் விங் கமாண்டர் ஜனக்க
நாணயக்கார தெரிவித்துள்ளார். விடுதலைப்
புலிகளின் அடையாளம் காணப்பட்ட
இலக்குகள் மீது இன்று ஞாயிற்றுக்கிழமை
விமானப்படையினர் நடத்திய இரண்டாது வான்
தாக்குதல் இது என்பது
குறிப்பிடத்தக்கது. |
|
|
பூனகரி
கெளதாரிமுனையில் வான் தாக்குதல்
கடற்புலிகளின் 'கடல்' முகாம் நிர்மூலம்
ஜனக்க நாணயக்கார தெரிவித்துள்ளார்.
பூனகரி கெளதாரிமுனையில்
வான் தாக்குதல் கடற்புலிகளின் 'கடல்'
முகாம் நிர்மூலம் என்கிறது விமானப்படை
கிளிநொச்சி மாவட்டம் பூனகரி
பிரதேசத்தில் உள்ள கெளதாரிமுனை
பகுதியில் கடற்புலிகளின் முக்கிய தளம்
ஒன்றின் மீது இன்று அதிகாலை
4.15மணியளவில் விமானப்படையினர்
நடத்திய தாக்குதல் ஒன்றில் அந்த முகாம்
அழிக்கப்பட்டுள்ளதாக விமான்பபடை
பேச்சாளர் விங் கமாண்டர் ஜனக்க
நாணயக்கார தெரிவித்துள்ளார்.
'கடல்' என்று பெயரிடப்பட்டுள்ள
கடற்புலிகளின் இந்தத் தளத்தின்மீது -
விமானப்படையினருக்குக் கிடைத்த இரகசிய
தகவலையடுத்தே இந்த வான் தாக்குதல்
நடத்தப்பட்டதாகவும், இந்தத்
தாக்குதலின் பின்னர் இன்று காலை அந்தப்
பகுதியில் விடுதலைப் புலிகளின்
நடமாட்டம் அதிகமாக இருந்தது
அவதானிக்கப்பட்டதாகவும் பாதுகாப்பு
அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில்
தெரிவிக்கப்பட்டுள்ளது |
|
|
|