|
ஜனநாயகமே தமிழ்பேசும்
மக்கள் எதிர்நோக்கும் அனைத்துப் பிரச்சினைகளுக்கும்
ஒரே தீர்வாகும் வவுனியா வைத்தியசாலையின்
வெளிநோயாளர் பிரிவை திறந்து வைத்தபோது
- அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா.
தமிழ் பேசும் மக்கள் அனைவரும்
எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு ஒரே
தீர்வு ஜனநாயக நடைமுறையே ஆகும்.
ஜனநாயகத்தை அமுல்படுத்த பொதுமக்கள்
அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
இவ்வாறு வட மாகாண விஷேட செயலணித்
தலைவரும் சமூகசேவைகள் மற்றும்
சமூகநலத்துறை அமைச்சருமான டக்ளஸ்
தேவானந்தா அவர்கள் வவுனியா மாவட்ட
வைத்தியசாலையின் புதிய நோயாளர் விடுதி
திறப்பு விழாவில் கலந்து
உரையாற்றும்போது தெரிவித்துள்ளார்.
ஆசிய அபிவிருத்தி வங்கியின்
நிதியுதவியுடன், நிக்கொட்
திட்டத்தின்கீழ் 132 மில்லியன் ரூபா
செலவில் நிர்மாணிக்கப்பட்ட வவுனியா
வைத்தியசாலை நோயாளர் விடுதியானது இன்று
முற்பகல் 11 மணியளவில் வடமாகாண ஆளுநர்
விக்டர் பெரேரா அவர்களினால்
உத்தியோகபூர்வமாக திறந்து
வைக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து,
நிர்மாணிக்கப்பட்ட கட்டிடத்தின்
பெயர்ப்பலகையினை அமைச்சர்களான டக்ளஸ்
தேவானந்தா மற்றும் ரிஷாட் பதியுதீன்
ஆகியோர் திரைநீக்கம் செய்து வைத்தனர்.
இதனைத் தொடர்ந்து இடம்பெற்ற வைபவத்தில்
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள்
தொடர்ந்து உரையாற்றுகையில் ஜனநாயகத்தை
மீட்க ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்கள்
சிரத்தையுடன் ஈடுபட்டு வருகின்றார்.
புலிகளின் நிர்ப்பந்தம் காரணமாக
தொலைந்து போய்விட்ட ஜனநாயகத்தை
மீட்கும் ஜனாதிபதியின் கரங்களை
அனைவரும் இணைந்து பலப்படுத்த வேண்டும்.
இதன்மூலமே தமிழ் பேசும் மக்கள்
எதிர்நோக்கும் பிரச்சனைகள்
அனைத்திற்கும் தீர்வுகாண முடியும்
எனவும் தெரிவித்தார்.
இவ்வைபவத்தில் வடமாகாண ஆளுநர் விக்டர்
பெரேரா, வடமாகாண விஷேட செயலணித்
தலைவரும் சமூகசேவைகள் மற்றும்
சமூகநலத்துறை அமைச்சருமான டக்ளஸ்
தேவானந்தா, மீள்குடியேற்ற அமைச்சர்
றிஷாட் பதியுதீன் ஆகியோருடன் வடமாகாண
சுகாதார அமைச்சின் செயலாளர் டொக்டர்
குமாரவேற்பிள்ளை, வடமாகாண சுகாதார
சேவைகள் பணிப்பாளர் டொக்டர்
எம்.மகேந்திரன், நிக்கொட் திட்டப்
பணிப்பாளர் லங்காநேசன், மன்னார்
அரசாங்க அதிபரும், வவுனியா பதில்
அரசாங்க அதிபருமான நீக்கிலாஸ்பிள்ளை,
வவுனியா மேலதிக அரசாங்க அதிபர் திருமதி
சாள்ஸ், வன்னி பிராந்திய பிரதி
பொலிஸ்மா அதிபர் முனசிங்க, வவுனியா
மாவட்ட வைத்தியசாலைப் பணிப்பாளர்
திருமதி பவானி பசுபதிராஜா, வவுனியா
மாவட்ட ஈபிடிபி அமைப்பாளர் சிவன்
சிவகுமார் ரகு, புதுக்குடியிருப்பு
பிரதேச சபைத் தலைவர் செபமாலை
திசவீரசிங்கம், முன்னாள் நாடாளுமன்ற
உறுப்பினரும் வவுனியா மாவட்ட
சுதந்திரக் கட்சி அமைப்பாளருமான
சுமதிபால மற்றும் சமயக்குருமார்,
வைத்தியர்கள், தாதியர், வைத்தியசாலை
ஊழியர்கள் உள்ளிட்ட பெருமளவிலானோர்
பங்குகொண்டமை குறிப்பிடத்தக்கது.
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|