|
யாழ். மாவட்ட பாடசாலைகளுக்கு
பாடப் புத்தகங்கள் அனுப்பி வைக்கும்
வைபவம் கொழும்பு துறைமுகத்தில்
இடம்பெற்றது.
யாழ்ப்பாணம் மாவட்ட
பாடசாலை மாணவர்களுக்கு அடுத்த கல்வி
ஆண்டுக்கான பாடப் புத்தகங்கள் இன்று
கொழும்புத் துறைமுகத்திலிருந்து கப்பல்
மூலம் அனுப்பி வைக்கப்படும் வைபவம்
துறைமுகத்தின் பண்டாரநாயக்க இறங்கு
துறையில் இடம்பெற்றுது.
இந்த வைபவத்தில்
கல்வியமைச்சர் சுசில் பிரேம் ஜயந்த,
கல்விச் சேவைகள் அமைச்சர் நிர்மல
கொத்தலாவல மற்றும் பிரதி கல்வியமைச்சர்
எம்.சச்சிதானந்தன், வட மாகாண விசேட
செயலணித் தலைவரும், சமூக சேவைகள்
மற்றும் சமூகநலத்துறை அமைச்சருமான
டக்ளஸ் தேவானந்தா அவர்களும் கலந்து
கொண்டனர்.
யாழ்ப்பாண மாவட்டத்தின்
கல்வி வலயங்களில் இயங்கும்
பாடசாலைகளுக்கு 8 இலட்சத்து 42 பாடப்
புத்தகங்கள் தேவைப்படுகின்றன. இவற்றுள்
6 இலட்சத்து 14 ஆயிரம் பாடப்
புத்தகங்கள் இன்று கப்பலில்
ஏற்றப்படுகின்றன. எஞ்சிய புத்தகங்கள்
எதிர்வரும் 15ஆம் திகதி அனுப்பி
வைக்கப்படும் எனவும் கல்வி அமைச்சு
மேலும் தெரிவித்துள்ளது.
|