|
சுவிற்சர்லாந்தின் தலைநகர்
பேர்ணில் உள்ள சுவிஸ் பாரளுமன்றத்தின்
முன்பு புலிகளுக்கெதிராக மாபெரும் ஆர்ப்பாட்டம்
நாளை.
இலங்கையில் புலிகளியக்கம் மக்களுக்கு
எதிராக கட்டவிழ்த்து வரும் பயங்கரவாத
நடவடிக்கைகளை சர்வதேசத்திற்கு
உணர்த்தும் முகமாக இலங்கை மக்கள்
பரந்து வாழுகின்ற நாடுகள் எங்கும்
புலிகளுக்கெதிரான ஆர்பாட்டங்கள் இடம்
பெற்று வருகின்றன.
இத்தாலி லண்டன் ஜேர்மன் சுவீடன்
வரிசையில் சுவிஸ் பேர்ண் பாரளுமன்றம்
முன்பாக புலிகளின் சகல மனித உரிமை
மீறல்களை கண்டித்தும் உலக நாடுகள்
அனைத்தும் புலிகளை தடை செய்வது போன்று
சுவிற்சலாந்து அரசாங்கமும் புலிகள்
இயக்கத்தை அந்நாட்டில் தடை செய்ய
வேண்டும் என்று கோரியும் நாளைய தினம்
06.09.2008ம் திகதி பகல் 12.30
மணியளவில் மாபெரும் ஆhப்பாட்டம் ஒன்று
இடம்பெற உள்ளது. இலங்கை மக்கள்
ஒன்றியத்தினரால் ஏற்பாடு
செய்பப்பட்டுள்ள இலங்கை மக்கள்
நலன்சார்ந்த இவ்நிகழ்வில் அனைவரையும்
கலந்து கொள்ளுமாறு ஆர்ப்பாட்ட
ஏற்பாட்டாளர்கள் வேண்டுகோள்
விடுத்துள்ளனர்.
 |