<%@ Language=JavaScript %> Welcome. !

 E-mail:enngal@gmail.com

தமக்குத் தீமையைச் செய்தவருக்கும், தாம் பதிலுக்குத் தீமை செய்யாது மன்னித்து விடுவதை, அறிவினுள் எல்லாம் சிறந்த அறிவு என்பார்கள்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள மல்லாவிப் பிரதேசத்துக்குள் படையினர் பிரவேசம்  பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. 

 

 
செய்தி் புதுப்பிக்கப்பட்ட நாள்:01 செப்டம்பர், 2008

* தமிழ்  சினிமா*

*ஜோ‌திட‌ வார பலன்*

 

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள மல்லாவிப் பிரதேசத்துக்குள் படையினர் பிரவேசம்  பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. 

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள மல்லாவிப் பிரதேசத்துக்குள் படையினர் நுழைந்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

புலிகளின் கடுமையான தாக்குதல்களை முறியடித்து அவர்களின் பாதுகாப்பு முன்னரங்குகளை தாக்கி அழித்தவாறே இராணுவத்தின் 57 ஆவது படையணி நேற்றுக் காலை மல்லாவிக்குள் சென்றுள்ளது.

பீரங்கி மற்றும் கனரக ஆயுதங்கள் மூலம் புலிகள் மீது தாக்குதல் நடத்திவரும் படையினர் மல்லாவிப் பிரதேசத்தில் உள்ள புலிகளின் முக்கிய தளங்களை கைப்பற்றியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மன்னார் பூநகரி ஏ 32 வீதி, யாழ்ப்பாணம் - கண்டி ஏ 9 வீதி ஆகியவற்றை ஒன்றிணைக்கும் வெல்லாங்குளம் - மாங்குளம் வீதியிலேயே இந்த மல்லாவி நகரம் அமைந்துள்ளது. இதன் காரணமாக மல்லாவி இராணுவ ரீதியில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இடமாக கணிக்கப்படுகிறது.

இங்கு புலிகளின் பிரதான விநியோக மற்றும் நிருவாக நடவடிக்கைகள் இடம்பெற்று வந்தமை அறிந்ததே. புலிகளின் பலத்த தாக்குதல்களை முறியடித்தவாறே படையினர் மல்லாவி நகரை நோக்கி முன்னேறி வருவதாக பாதுகாப்பு அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

<<முன்னைய பதிவுகள்>>

Last update: 20-06-2008. Desigin and Copyright