<%@ Language=JavaScript %> Welcome. !

 E-mail:enngal@gmail.com

தமக்குத் தீமையைச் செய்தவருக்கும், தாம் பதிலுக்குத் தீமை செய்யாது மன்னித்து விடுவதை, அறிவினுள் எல்லாம் சிறந்த அறிவு என்பார்கள்.

மன்னார் முசலி பிரதேசத்தில் இருந்து இடம்பெயர்ந்த மக்களை மீள் குடியேற்ற அரச   பிரதேச செயலாளர் நடவடிக்கை.

 

 
செய்தி் புதுப்பிக்கப்பட்ட நாள்:01 செப்டம்பர், 2008

* தமிழ்  சினிமா*

*ஜோ‌திட‌ வார பலன்*

 

மன்னார் முசலி பிரதேசத்தில் இருந்து இடம்பெயர்ந்த மக்களை மீள் குடியேற்ற அரச   பிரதேச செயலாளர் நடவடிக்கை.

நேற்று மாலை 4.45 மணிமுதல் 6.00 மணிவரை முசலி பிரதேசத்தில் இருந்து இடம்பெயர்ந்து வேறு இடங்களில் வாழ்ந்து வரும் மக்களை மீள் குடியேற்றுவது தொடர்பாக சந்திப்பொன்று இடம்பெற்றது.

தள்ளாடி படைமுகாமில் மீள் குடியேற்ற மற்றும் அனர்த்த முகாமை ஒத்துவ அமைச்சர் ரிஷாட் பதியுதீன், மன்னார் அரச அதிபர் நிக்கலாஸ் பிள்ளை , மன்னார் பிரதேச செயலாளர் திருமதி .ஸ்ன்லி டிமெல் மற்றும் திணைகள உயர் அதிகாரிகள் தள்ளாடி இராணுவ கட்டளைத் தளபதி குணர்திலக ,மற்று, பொலிஸ் அதிகாரிகள் இதில் கலந்தொ கொண்டனர்.

கடந்த வருடம் செப்டெம்பர் மாதம் இடம்பெற்ற இராணுவ நடவடிக்கை காரணமாக பல்லாயிரக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்து வாழும் மக்களை உடன் மீளக் குடியமர்த்துவது தொடர்பாக இக் கூட்டம் இடம்பெற்றது.

முசலி பிரதேச செயலாளர் பிரிவிற்கு உட்பட்ட முள்ளிக்குளம் பகுதியை தவிர்ந்த சிலாவத்துறை, அரிப்பு, கொண்டச்சி, கொக்குபடையான் ஆகிய பகுதிகளை சேர்ந்த மக்களை எதிர்வரும் 6 ஆம் திகதியிலிருந்து மீள் குடியேற்ற நடவடிக்கை எடுப்பதாகஇதன் போது தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது. இதன் முதற்கட்டமாக அக் குடும்பங்களை சேர்ந்த தலைவர்கள் வீடுகள் துப்பரவு செய்வதற்காக அழைத்து செல்லப்படவுள்ளனர்.

மேலும் மின்சார சபை மற்றும் வீதி அபிவிருத்தி அதிகார சபை அதிகாரிகள் குறித்த பகுதிகளிற்கு அழைத்து செல்லப்படவுள்ளனர். இதேவேளை தலை மன்னார் பேசாலை முருங்கன் மற்றும் வங்காலை ஆகிய பகுதிகளில் உள்ள வைத்திய சாலைகளிற்கு உடனடியாக தொலை பேசி அழைப்புக்களை வழங்குமாறு இராணுவ தளபதிக்கு அமைச்சர் ரிஷாட் பதியுதீன் உத்தரவிட்டுள்ளார்

<<முன்னைய பதிவுகள்>>

Last update: 20-06-2008. Desigin and Copyright