|
பால் மணம் மாறாத பிஞ்சுகள் பிரபாகரன் வளர்க்கின்ற குஞ்சுகள்...............
புதைப்பதேன்? புதைகுழிக்குள்

புத்திமான்கள் தழைத்தெழுந்த
புண்ணிய பூமியில்
புகழாரம்தேடி வந்த நீ
புதைப்பதேன்? மறைப்பதேன்? குஞ்சுகளை
புதைகுழிக்குள்
கண்ணியம் மிக்க பெண்ணினத்தை
கயவனே உன்சுயநலத்தால்
கசக்கி எறிகின்றாய் ஏனோ?
காய்ந்த சருகு என நினைத்து
கர்வத்துடன் பலிகொடுக்கின்றாய்
இறை பூசைக்கு அனுப்ப வேண்டிய பூக்களை
கறை படைந்த உன் தீய செயல்களை
சிறகு உடைத்து அனுப்புவது ஏன்?
பறை சாற்றுவோம் உன் இழி செயலை
பாவிகளை யார்என்று இனம் காட்டுவோம் உலகுக்கு
நம் தேசத்தின் கண்கள் இவர்கள்
நாவினில் கனிவு சுரக்கும் இளம் பிஞ்சுகளை
நசுக்குகிறாய் உன்குலம் வாழ
நலிந்த தேகங்களை அழித்து
நகர்த்துகின்றாய் உன் பருத்த உடலை
மறைந்து வாழும் நீ
மக்களுக்கு தொண்டு செய்பவர்களை
மண்ணுக்குள் மறைக்க மாதுக்களை அனுப்பினாய் ஏனோ?
மார்பினிலே குண்டு வைத்து அனுப்பினாய்
மடியினிலே குண்டு வைத்து அனுப்பினாய் (பெண்ணின்)
மறைவிடத்தில் குண்டு வைத்து அனுப்பினாய்
மலர்ந்ததா உன் கனவு
தளைத்த செடிகளை கிள்ளி எறிவதால்
தளைத்திடுமா? தமிழிழம்
தற்கொலை குண்டுகளை அனுப்பினால்
தந்திடுவரோ? தாம்பாழம்
உன் கனவோ வீம்பாகும்
உன்பாடல் ஒன்றே
உணர்த்துகின்றது உன்இழிசெயலை
உரைக்கட்டுமா என்னவென்று
பால் மணம் மாறாத பிஞ்சுகள்
பிரபாகரன் வளர்க்கின்ற குஞ்சுகள்
போதுமா? என்னும் வேனுமா??
அன்புப் பிரியன்
|