அண்மையில்
கிழக்கு
மாகாணத்திற்கு
விஜயம்
மேற்கொண்ட த.ம.வி.பு.
களின்
தலைவரும்,
பாராளுமன்ற
உறுப்பினருமான
திரு.விநாயமூர்த்தி
முரளீதரன் (கருணா
அம்மான்)
அவர்கள்
அங்கு
பல்வேறு
தரப்பினரையும்
சந்தித்துக்
கலந்துரையாடல்களை
மேற்கொண்டுள்ளார்.
இச்
சந்திப்புக்களில்
அரசாங்க
அதிபர்கள்,
கிழக்கு
பல்கலைக்கழகத்தின்
பீடாதிபதிகள்,
பொலிஸ்
சிரேஷ்ட
அத்தியட்சகர்கள்,
கிழக்கு
மாகாண
முதலமைச்சர்,
மட்டக்களப்பு
மாநகர சபை
மேயர் என
பலரும்
அடங்குவர்.
கிழக்கு
மாகாணத்தின்
அபிவிருத்தி,
கிழக்குப்
பல்கலைக்கழகத்தின்
எதிர்காலம்,கிழக்கில்
சட்டத்தையும்
ஒழுங்கையும்
நிலைநாட்டுதல்,
என பல்வேறு
விடயங்கள்
இங்கு
கருத்திலெடுக்கப்பட்டு
இக்
கலந்துரையாடல்கள்
மேற்கொள்ளப்பட்டன.
இக்கலந்துரையாடல்
நிகழ்வுகளின்
போது
எடுக்கப்பட்ட
புகைப்படங்களையும்,
அது குறித்த
விளக்கங்களையும்
உள்ளே
காணலாம்.


கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பீடாதிபதிகள் குழு விநாயகமூர்த்தி முரளீதரன் எம்.பீ. அவர்களைச் சந்தித்து, கிழக்குப் பல்கலைக் கழகத்தின் எதிர்கால நிலைகுறித்துக் கலந்துரையாடியபோது.

அரசாங்க அதிபர்களைச் சந்தித்து, அரசின் செயற்பாடுகள் தொடர்பாக கலந்துரையாடியபோது.

சட்டம், ஒழுங்கை கிழக்கில் பேணுவது தொடர்பாக பொலிஸ் மற்றும் இராணுவ உயரதிகாரிகளுடன் கருணா அம்மான் கலந்துரையாடி போது.

மட்டக்களப்பு மாநகர மேயர் சிவகிர்த்தா பிரபாகரனுடன் மட்டக்களப்பு மாவட்டம்;குறித்து விநாயகமூர்த்தி முரளீதரன் எம்.பி. கலந்துரையாடல் மேற்கொண்ட போது.

