<%@ Language=JavaScript %> Welcome. !

 E-mail:enngal@gmail.com

தமக்குத் தீமையைச் செய்தவருக்கும், தாம் பதிலுக்குத் தீமை செய்யாது மன்னித்து விடுவதை, அறிவினுள் எல்லாம் சிறந்த அறிவு என்பார்கள்.

சுவிற்சலாந்தில் துர்கா மாநில தமிழர் கலாச்சார மையம் விடுதலைப் புலிகளுக்கான உதவியா? சுவிஸ்20 Min. பத்திரிகையின் அதிர்ச்சிச் செய்தி !! தமிழர் கலாச்சாரத்தையும், இந்து மதத்தையும் இழிவுபடுத்தும் தமிழ்க் கனவான்களின் அறிக்கை..

 
செய்தி் புதுப்பிக்கப்பட்ட நாள்:19 அக்டோபர், 2008

* தமிழ்  சினிமா*

*ஜோ‌திட‌ வார பலன்*

 

சுவிற்சலாந்தில் துர்கா மாநில தமிழர் கலாச்சார மையம் விடுதலைப் புலிகளுக்கான உதவியா? சுவிஸ்20 Min. பத்திரிகையின் அதிர்ச்சிச் செய்தி !! தமிழர் கலாச்சாரத்தையும், இந்து மதத்தையும் இழிவுபடுத்தும் தமிழ்க் கனவான்களின் அறிக்கை..

தமிழர் கலாச்சார மையம் துர்க்கா மாநிலம் தலைவர் சண்முகம் தவராஜா, அங்கத்தவர் குமாரையா நித்தியானந்தம் ஆகியோரின் பத்திரிகைக்கான அறிக்கை சுவிற்சலாந்தில் தமிழினத்தையே தலைகுனிய வைத்துள்ளது. இவர்கள் தமது அறிக்கையில் தமிழர் கலாச்சார நடைமுறையெனக் குறிப்பிட்ட கனரக ஆயதங்களுடன் சிறு பிள்ளைகள் தோன்றும் பயங்கரமான காட்சி தமிழர் கலாச்சாரத்துடன் ஒத்ததென்றும் இலங்கையில் இது அன்றாட நடைமுறையென்றும் நாடு திரும்ப உள்ள எமது பிள்ளைகளுக்கு ஆயத்தப் படுத்தும் செயற் திட்டம் எனத் தெரிவித்ததோடு இன்னொருபடி மேலாக இந்து மத கோட்பாட்டிற்கும் சேறு அடித்தது போன்று அனைத்து இந்து மத கடவுள்களின் கைகளிலும் ஆயதம் உள்ளதால் இது எமது காலச்சாரமென்று தெரிவித்து தமிழர்கள் அனைவரும் வன்முறைக் கலாச்சார நுகரிகளே என நிருபிக்க முயற்சித்துள்ளார்கள். பாவம் சுவிற்சலாந்தில் துர்கா மாநில தமிழ் மக்கள் படித்தவர்கள் பெரியவர்கள் இம் மன்றத்தில் உள்வாங்கப் பட்டால் தானே தரமான அறிக்கைகள் கொடுக்க முடியும். தரமான தமிழர் அமைப்பென்றால் தானே தகமை பெற்றவர்கள் அங்கம் வகிக்க முடியும். மந்தைகளுடன் மந்தைகள் தானே சேரும்..

Kanton Thurga Tamilen Kultur Verein இல் இருந்து கொண்டு குளிர் காயும் சண்முகம் தவராஜா, அங்கத்தவர் குமாரையா நித்தியானந்தம் மற்றும் இம் மன்றத்துக்கு முண்டு கொடுக்கும் பலரும் புலிகளின் பெயரால் வயிறு வளர்க்கும் புலிப் பினாமிகளே. சுவிற்சலாந்தில் மிக மோசமான புலிகளின் வன்முறைச் செயல்களை அரங்கேற்றும் முக்கிய மாநிலங்களில் ஒன்று துர்க்கா மாநிலம். இது சுவிற்சலாந்து பாதுகாப்புப் பிரிவினரின் கவனத்திற்குக் கொண்டு வரப் பட்டுள்ளதுடன் முக்கிய நபர்களும் கண்காணிக்கப் பட்டு வருகிறார்கள்.

புலிகள் இங்கு பசுத்தோல் போர்த்த புலிகளாக உலா வருவது கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. இதன் ஒரு வெளிப்பாடு தான் Kanton Thurga Tamilen Kultur Verein என்ற புலிகள் அமைப்பு. இதன் தலைவரான கனவான் குறிப்பிடும் கலாச்சாரம் என்பது தமிழர் கலாச்சாரமல்ல அது புலிகள் கலாச்சாரம். இன்று புலிகள் வேறு தமிழர் வேறு என்பது பலராலும் உணரப் பட்டுள்ளது.

தமிழர் கலாச்சாரத்தைக் கறைபடிய வைத்து தமிழினத்தை இந் நாட்டின் வன்முறை விரும்பிகளாகச் சித்தரித்து சுவிற்சலாந்திலிருந்து மட்டுமல்ல புலம்பெயர் நாடுகளிலிருந்து தமிழரின் இருப்புகளை கேள்விக் குறியாக்கும் புலிகளின் மறைமுகத் திட்டத்தின் வெளிப்பாடே இவ்வித அறிக்கைகள்.

-1987 இல் வடமராட்சியில் நிகழ்ந்த Libration Operation இராணுவ வன்முறைகளில் வடமராட்சித் மக்களை சிக்க வைத்து வன்னிக்குள் ஓடி ஒழித்த புலிகள்..

-இன்று வன்னிக்கு மக்களை அழைத்து மக்கள் வெளியேறா வண்ணம் இரும்புத்திரை போட்டு மக்களையே மனிதக் கேடயங்களாகப் பாவிக்கும் புலிகட்கு பிள்ளைகளை பலியெடுக்கும் புலிகளிடமிருந்து காக்க வழியின்றி இரத்தக் கண்ணீர் வடிக்கும் பெற்றோரின் பரிதாப நிலை…
வன்னியில் புலிகளிடம் பிள்ளைகளப் பறிகொடுத்தும் இராணுவ தாக்குதல்களினின்றும் தப்ப தவிக்கும் மக்களின் இடர் இப் புலிக் கலாச்சாரக் காவலர்கட்குப் புரியாத ஒன்றோ.!

தாய்நாட்டில் புலிகள் மேற்கொள்ளும் மக்களுக்கெதிரான பயங்கரவாதத்தை பயன்பாடாகக் கொண்டு புலம்பெயர் நாடுகளில் பணம் பறிக்கும் புலிகள், அதே அச்சுறுத்தல்களால் மக்களை ஊமைகளாக்கி தமது ஈனச் செயல்கட்கும் வெறித்தனமான பத்திரிகை அறிக்கைகட்கும் எமது இனத்தை இலக்காக்கி இருப்பிற்கு ஆப்பு வைக்கக் கங்கணங் கட்டி உள்ளார்கள்.

“தொட்டில் பழக்கம் சுடுகாடு வரை“ இது முதுமை தட்டாத முதுமொழி இதனால்தானோ என்னவோ புலிகள் சிறார்கட்கு வன்முறை ஆயதங்களை விளையாட்டுப் பொருட்களாகக் காட்டி முதுமைவரை ஆயுத மோகங் கொண்ட மனநோயாளியாக்குகிறார்கள். மேடையில் பிள்ளைகளை இவ்வித கனரக ஆயதங்களுடன் நடிக்க விட்டு இரசிக்கும் பெற்றோர்pன் மனோநிலையை என்னவென்று கூறுவது..

இவ்வித வன்முறைக் கலாச்சார நிகழ்வுகட்கு பிள்ளைகட்கு ஆர்வமூட்டி இதை எமது கலாச்சாரமெனப் பரப்புரை செய்யும் காட்டு மிராண்டித் தனத்தை தட்டிக் கேட்க வக்கற்ற பெற்றோரையிட்டு பரிதாபப்படுகிறோம் “பானையில் இருந்தால் தான் அகப்பையில் வரும்“; படிப்பறிவிருந்தால் தான் செய்கருமங்கள் சீர்பெறும். விலங்குகளிடமிருந்து வெளிப்படுவது வன்முறையைத் தவிர என்னவாக இருக்க முடியும். வாசனை இருந்தால் தான் நறுமணம் வீசும். சாக்கடையில் இருந்து நறுமணத்தை எதிர்பார்த்தால் ஏமாற்றம் தான்.

பெற்றோரே உங்களையும் பிள்ளைகளையும் வன்முறைக் கலாச்சாரப் பிரியர்களாக பரப்புரை செய்யும் சந்தர்ப்பவாத விடுதலைப்புலிக் காமுகர்கட்கு உதவி வழங்குவதை உடன் நிறுத்துங்கள். இங்கு பாடசாலைகளில் விளையாட்டுத் துவக்குகள் கூட பிள்ளைகள் கொண்டு சென்றால் பறிமுதலாகும் அத்துடன் பெற்றோர் வரவழைக்கப்பட்டு விசாரிக்கப்படுவர். இதை இதை அறியாதவர்களல்ல இப்புலிப் பயங்கரவாதிகள், ஆனால் இவர்கட்கு சட்டம் சம்பிரதாயம் எல்லாம் வன்னிப் பங்கருக்குள் தான். புலிகள் மிக பயங்கரமான ஆயுதங்களை பிள்ளைகளுடன் இணைத்துக் காட்டும் காட்சிகளும் அதை இரசித்துக் கைதட்டி குதூகலிக்கும் சபையைக் (மந்தைகளை) காட்டும் செயல்கள், தமிழினத்தையே ஒரு வகை வன்முறை மேல் காதல் கொண்ட மனநோயாளிகளாகக் காட்ட முயலும் முயற்சியாகத் தான் கொள்ள முடியும்.

அதுவும் சுவிற்சலாந்தில் இவ்வித வன்முறைக் கலாச்சாரப் பரப்புரைகள் உடன் நிறுத்தப்பட வேண்டும். உலகம் பூராவும் பயங்கரவாத முத்திரை குத்தப் பட்டு தடைவிதிக்கப் பட்டுள்ள விடுதலைப் புலிகள் அமைப்பு தன் பழக்க தோசத்தை இங்கும் விட்டபாடில்லை. புலிகள் பயங்கரவாதிகள்தான் ஆனால்

நாம் நேசிக்கும் தமிழர் கலாச்சாரம் உலகுக்கே எடுத்துக் காட்டான பல போதனைகளைக் கொண்டது. புலிப் பயங்கரவாதிகட்கு இவை போதிக்கப்பட வேண்டியது. எனவே பத்திரிகை அறிக்கைகள் மிக அவதானமாக வழங்கப்பட வேண்டியவை. சுவிற்சலாந்தில் புலிகளின் அமைப்புகளாக பசுத்தோல் போர்த்துள்ள பல அமைப்புகளில் 95% இந்து ஆலயங்களும், குறிப்பிட்ட தமிழ்ப் பாடசாலைகளும், பல விளையாட்டுக் கழகங்களும் வர்த்தக ஸ்தாபனங்களும் இயங்கி வருவதும் அவற்றின் பொறுப்பாளர்கள் பற்றிய விபரங்களும் சுவிஸ் பாதுகாப்புத் தரப்பின் கண்காணிப்பிற்கு உட்படுத்தப் பட்டுள்ளன. செய் கருமங்கள் இனத்தின் விடிவிற்கு துணைநிற்க துணிந்திடுவோம்.!
அதிரடிக்காக.. உடுப்பிட்டி செல்வன் - சுவிஸ்

நன்றி அதிரடி

<<முன்னைய பதிவுகள்>>

 
 

 

இலங்கை சகலருக்கும் உரிய நாடு இதனை பேரினவாதிகள் முழு உரிமை கொண்டாடுவதை அனுமதிக்க முடியாது.அதேபோன்று எல்.ரீ.ரீ.ஈ.யினரின் பயங்கரவாத்தால் துண்டாடப்படுவதையும் அங்கீகரிக்க முடியாது.

 

சமூகத்தில் பல்வேறு அரசியல் கருத்துகளைக் கொண்ட போக்குள்ள குழுக்கள் அவதூறுகளுக்குப் பெயர் கருத்துச் சுதந்திரமல்ல.

 

வன்னியில் மக்கள் படட்டினிச்சாவில் இது தான் புலம்பெயர் புலிகளின் தமிழ்மக்கள் மீதான பற்று உடையிறது தேங்கை மட்டுமல்ல எங்கிட தமிழருடைய வாழ்வும்தான்.(படங்கள் இணைப்பு)

 

இலங்கைக்கான கொரிய தூதுவருடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சந்திப்பு ஒன்று இன்று இடம்பெற்றுள்ளது.(படங்கள் இணைப்பு)

 

சந்தர்ப்பங்களைப் பயன்படுத்தி ஜனநாயகத்தை பலப்படுத்த நேசக்கரம் நீட்டி அழைக்கின்றேன்!அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா.

 

கருணா அம்மானுக்குப் பாராளுமன்றப் பதவி கொடுத்தவுடன் சீறியெழுகின்றனர் ஏகாதிபத்திய பிற்போக்குவாதிகள்.

 

ஈழத்தமிழர்கள் சார்பாக தமிழக தலைவர்களுக்கு ஓர் பகிரங்க மடல்!அமைச்சர் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா.

Welcome. to Visit.angaltheaasam.com ..!

Last update: 20-06-2008. Desigin and Copyright