எங்கள் தேசம் இணையம் www.engaltheaasam.com Welcome To Visit

     E-mail: eenagal@gmail.com

 

Wanni theatreof operations

View Vedio

 T.I.R.Radio Live

T.B.C.Rodio.Live

B.B.C.Tamil 

Download Baamni 

Tamil Font  

 Sithiram Font 

அரசியல் கட்சிகள்

  ஈ.ம.ஜ.கட்சி   டெலோ நியூஸ்  த.ம.வி.புலிகள்   த.ம.வி.கழகம்   ஈ.ம.பு..வி.மு

இணையங்கள்

 :: அதிரடி  :: ஈழநாசம்  :: நெருப்பு :: காரைநெற்  :: தமிழ்நீயூஸ்வெப்  :: தாயகம்  :: தேசம்நெற்  :: தேனீ  :: விழிப்பு  :: உயிர் நிழல்  :: ஊடறு  :: கரித்துண்டு  :: கீற்று :: சத்திய கடதாசி  :: தூ .................

இணையங்கள்

Welcome. to Visit.angaltheaasam.com ..!

செய்தி் புதுப்பிக்கப்பட்ட நாள்: 08 ஜுலை, 2008

கொழும்பில் தாக்குதல் நடத்த புலிகள் திட்டம்?-இலங்கை அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இலங்கை,கொழும்பு நகரில் விடுதலைப்புலிகள் தாக்குதல் நடத்தலாம் என்பதால், பாதுகாப்பு படையினர் உஷாராக இருக்க வேண்டும் என்று இலங்கை அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கும் அந்நாட்டு ராணுவத்துக்கும் இடையே கடும்மோதல்கள் நடைபெற்று வருகின்றன. தமிழர்கள் வசிக்கும் பகுதிகளில், இலங்கை போர் விமானங்கள் குண்டு வீசி தாக்குதல் நடத்தி வருகின்றன. கடந்த ஆண்டு, புலிகள் அமைப்பின் மற்றொரு பிரிவான கரும்புலிகள் நினைவ தினத்தின்போது, அனுராதபுரம் விமான தளத்தில் விடுதலைப்புலிகளின் தற்கொலைப்படையினரும், விமானப் படையினரும் இணைந்து தாக்குதல் நடத்தினர். இந்நிவையில், கடந்த வாரத்தில், பல்வேறு இடங்களில் நடந்த மோதல்களில், 69 விடுதலைப்புலிகளும், 5 ராணுவத்தினரும் பலியானதாக ராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இதனிடையே, கொழும்பு நகரின் தெற்கு மற்றும் புறநகர் பகுதிகளில் விடுதலைப்புலிகள் தாக்குதல் நடத்தலாம் என்பதால், பாதுகாப்பு படையினர் முன்எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்று ராணுவ உயரதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். இதனால், கொழும்பு நகரில் பதற்றம் நிலவி வருகிறது.

யாழ்ப்பாணம், வெலிஓய, வவுனியா மற்றும் மன்னார் பகுதிகளில் நேற்று படையினரின் தாக்குதலில் புலிகளுக்கு பாரிய சேதம் 

யாழ்ப்பாணம், வெலிஓய, வவுனியா மற்றும் மன்னார் பகுதிகளில் நேற்று பாதுகாப்பு படையினருக்கும் விடுதலைப்புலிகளுக்குமிடையே மோதல்கள் இடம்பெற்றுள்ளதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

இம் மோதல்களில் விடுதலைப்புலிகள் தரப்பில் 19 பேர் பலியாகியுள்ளதுடன் 40 பேர் காயமடைந்துள்ளனர். இம் மோதலின் போது பாதுகாப்பு படைத்தரப்பில் இருவர் பலியாகியுள்ளதுடன் 08 பேர் காயமடைந்துள்ளதாகவும் பாதுகாப்பு வட்டாரங்கள் மேலும் தெரிவித்துள்ளது.

வவுனியா பாலமோடை மற்றும் நிவாவி போன்ற பகுதிகளிலும் மன்னார் பரப்பகண்டால், போன்ற பகுதிகளிலும் மோதல்கள் இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணத்தில் கிளாளி, முகமாலே. நாகர் கோவில் போன்ற பகுதிகளிலும் மோதல்கள் இடம்பெற்றுள்ளது. வெலிஓயாவில் ஜனகபுர வடக்கு பிரதேசத்தில் அமைந்திருந்த விடுதலைப்புலிகளின் சக்திவாய்ந்த பதுங்கு குழிகள் மூன்றும் படையினரால் சேதப்படுத்தப்பட்டவேளை விடுதலைப்புலி உறுப்பினர் ஒருவர் பலியாகி 4 பேர் காணமடைந்துள்ளனர்.

மன்னார், வவுனியா களமுனை எறிகணை தாக்குதல்களினால் மக்கள் இடம்பெயர்வது தொடர்கிறது.

வவுனியா களமுனைகளில் இராணுவத்தினர் மேற்கொண்டுவரும் தொடர் இராணுவ நடவடிக்கைககள் காரணமாக மன்னார், முல்லைத்தீவு மாவட்டங்களின் எல்லைப்புறக் கிராமங்களில் இருந்து பொதுமக்கள் தொடர்ந்து வெளியேறி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு இடம்பெயர்ந்த 611 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 2500 பேர் கிளிநொச்சி மாவட்டத்தில் தஞ்சமடைந்துள்ளாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


மன்னார் மாவட்டத்தில் இருந்து இடம்பெயர்ந்தவர்கள் கிளிநொச்சி மாவட்டத்தின் முழங்காவி;ல் பிரதேசத்திற்கும், முல்லைத்தீவு மாவட்டம் மல்லாவி, துணுக்காய் பகுதிகளில் இருந்து இடம்பெயர்ந்தவர்கள் கிளிநொச்சி மாவட்டத்தின் அக்கராயன் பிரதேசத்திற்கும் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இடம்பெயர்ந்துள்ள மக்கள் மரங்களின் கீழும், வீதியோரங்களிலும் கண்ணிலகப்பட்ட பொது இடங்களிலும் தஞ்சமடைந்துள்ளதாவும், இவர்களுக்கான நிவாரண உதவிகளை வழங்கவும், தங்குமிட வசதிகளை ஏற்படுத்தவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கிளிநொச்சி மாவட்ட அரச அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவில் சர்வதேசப் பயங்கரவாத  புலிகள் இயக்கத்துக்கு நிதியுதவி அளித்தவருக்கு 57 மாத சிறை

ஐக்கிய அமெரிக்க அரசு புலிகள் அமைப்பை சர்வதேசப் பயங்கரவாத இயக்கங்களில் ஒன்றாகப் பட்டியலிட்டுச் சட்டபூர்வமாக அந்த அமைப்பையும் அதன் செயற்பாடுகள் மற்றும் ஆதரவு நடவடிக்கைகளையும் தடை செய்த பின்னர் பல்வேறு சந்தர்ப்பங்களிலும் அமெரிக்க பயங்கரவாதத் தடைப் பிரிவுப் பொலிஸார் அமெரிக்காவின் முக்கிய நகரங்களில் புலிகள் இயக்கத்தினைத் தேடி தீவிர தேடுதல் மற்றும் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்துள்ளனர். இதன் பயனாக புலிகள் இயக்க உறுப்பினர்கள், புலிகள் இயக்கத்திற்கு ஆதரவாகச் செயற்பட்டோர் எனச் சந்தேகிக்கப்பட்ட பலரை இதுவரையில் அமெரிக்க பெடரல் பொலிஸார் கைதுசெய்து சட்ட நடவடிக்கைகளை எடுத்துள்ளனர்.

இதன் தொடர்ச்சியாக அண்மையில் புலிகள் அமைப்புகள் நிதி சேகரிப்பு மற்றும் புலிகள் இயக்கக் குழுவினருக்கு ஆதரவளித்தது ஆகிய குற்றச்சாட்டுகளின் பேரில் திருநாவுக்கரசு வரதராஜா எனப்படும் ஸ்ரீலங்காவைப் பிறப்பிடமாகக் கொண்ட 37 வயதுடைய தமிழரை பெடரல் பொலிஸார் கைது செய்திருந்தனர். விசாரணைகளின் பின்னர் மேற்படி நபரைத் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புக்காகச செயற்பட்ட குற்றச்சாட்டில் நீதிமன்றத்தில் பெடரல் பொலிஸ் பிரிவு வழக்குத் தொடுத்தது. தற்போது விசாரணைகளின் மூலம் மேற்படி குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்ட நிலையில் மேற்படி திருநாவுக்கரசு வரதராஜா எனப்படும் நபருக்கு அவருடைய பல்வேறு பயங்கரவாதத் தொடர்புக் குற்றங்களுக்கு மாறாக மொத்தம் 57 மாத சிறைத் தண்டனையை அமெரிக்க சமஷ்டிப் பிரதேச பெண் நீதிபதியாகிய கெதரின் சீ.பிளேக் விதித்துள்ளார். இந்தச் சிறைத் தண்டனை மேற்படி நபர் செய்துள்ள பிரதான குற்றங்களாகிய அமெரிக்காவில் தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பாகிய புலிகள் இயக்கத்துக்காக அமெரிக்காவில் நிதி சேகரித்தது மற்றும் குறித்த புலிகள் இயக்கப் பயங்கரவாதிகள் குழுவினருக்கு உதவி செய்தது ஆகிய சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு வழங்கப்படுவதாக நீதிமன்றம் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

மன்னார் வளைகுடாவில் எண்ணெய் அகழ்வு பணிகளை மேற்கொள்வதற்காக இந்தியாவின் ஒப்பந்தம் கைச்சாத்து

மன்னார் வளைகுடாவில் எண்ணெய் அகழ்வு பணிகளை மேற்கொள்வதற்காக இந்தியாவின் கைர்ன் நிறுவனத்துடன் இலங்கை அரசாங்கம் இன்று ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திட்டுள்ளது.

இலங்கையின் வடமேற்கே மன்னார் வளைகுடா கடற்பரப்பில் அமைந்துள்ள மூவாயிரம் சதுர கிலோமீற்றர் பரப்பளவானதும் 1800 மீற்றர் ஆழமானதுமான SL200701001 இலக்க புளொக், எண்ணெய் அகழ்வு பணிகளுக்கென மேற்படி நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.மேற்படி இந்த எண்ணெய் அகழ்வுப் பணிகள் 6 மாதத்தில் ஆரம்பிக்கப்படும்.

அலரிமாளிகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் முன்னிலையில். இடம்பெற்ற நிகழ்வில் இலங்கை சார்பாக பெற்றோலிய வள அமைச்சர் ஏ.எச்.எம். பௌசியும் கைர்ன் நிறுவனம் சார்பாக அதன் பிரதம நிறைவேற்றுப் பணிப்பாளர் இந்திரஜித் பர்னஜியும் குறித்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர்.

அத்துடன், இத்திட்டத்திற்காக இந்திய நிறுவனம் முதற்கட்டமாக முதலீடு செய்யவுள்ள 10 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான காசோலை ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.எதிர் வரும் மூன்று வருட காலங்களுள் அமெரிக்கன் டொலர் 112 மில்லியன் செலவிடப்படவுள்ளது.

இந்த எண்ணெய் அகழ்வு மூலம் கிடைக்கின்ற முதலீட்டு இலாபத்தில் 65 வீதத்தினை கைர்ன் நிறுவனத்திற்கு பெற்றுக்கொள்ள வாய்ப்பு ஏற்படுகின்றது. அரசாங்கத்திற்கு 10 வீத இலாபமும் 50 மில்லியன் அமெரிக்க டொலர் உற்பத்தி பேனஸ்சும் கிடைக்கின்றது. லாபங்கள் முதலீடுகளின் அடிப்படையில் பகிரப்படும்.இதேவேளை 15 சதவீதம் ஒப்பந்தகாரர்களுக்கு வருமான வரி ஏனைய அத்தியவசிய வரிகளும் விதிக்கப்படும்.

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் கடந்த 5 மாதத்திற்குள் 500 வீதம் வளர்ச்சியை எட்டியுள்ளது

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் கடந்த 5 மாதத்திற்குள் 500 வீதம் வளர்ச்சியை எட்டியுள்ளது.
இந்த வருடத்திற்கான வருமானம் 212 மில்லியன் ரூபாவாகும். ஆனால் கடந்த வருடம் 40 மில்லியன் ரூபாவாக காணப்பட்டது.

மேற்படி இந்த வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் சரியான முறையில் நிதி நிர்வாகத்தினை   பேணிவந்ததோடு  தேவையற்ற செலவுகள் குறைத்ததனாலும்  இந்த பணியகத்தின் வளர்ச்சிக்கு ஏதுவாக அமைந்துள்ளதாக கிங்சிலி ரனவக ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

இதேவேளை பாதுகாப்பு தொடர்பான வேலைவாய்ப்புகளுக்கு  ஆண்களின் மூலம் 52 வீதம் வருமானம் கிடைக்கப்பெற்றது.

மேற்படி இது ஒரு தனி பிரிவாக வெளிநாட்டு அமைச்சின் கீழ் இயங்கி வந்ததாலும் அமைச்சர் கெஹெலி ரம்புக்வெலவின் வழிகாட்டலும்  இந்த  வளர்ச்சிக்கு மேலும் காரணமாகும் என அவர் மேலும் தெரிவித்தார்.

<<முன்னைய பதிவுகள்>>

தமிழ் சஞ்சிகைகள
உதயன்

தினக்குரல்

வீரகேசரி

நமது ஈழநாடு
விகடன்
அம்பலம்
சுடர் ஒளி
ஈழமுரச
குமுதம்
தினகரன்
தினத்தந்தி
விடுதலை
தினபூமி
தினமணி
மாலைச்சுடர்
தினமலர்
மாலைமலர்
எரிமலை
நக்கீரன்
English
Good Srilanka
Tamilnet
LTTE Peace Secretariat
msnbc
yahoo
google
BBC
CNN
Tamilcanadian
ndtv
Tamilguardian
Lankapage
Worldnews

Last update: 20-06-2008. Desigin and Copyright