|
தனியார்
புதிய பஸ்
வண்டிகளை தனியார் இறக்குமதி செய்ய அரசு
அனுமதி
அங்கீகாரம்
வழங்கியுள்ளது.
தனியார் பஸ் உரிமையாளர்கள் மேலும் பஸ்
வண்டிகளை இறக்குமதிசெய்யும் வகையில்
போக்குவரத்து அமைச்சர் டலஸ் அழகப்
பெருமவினால் சமர்பிக்கப்பட்ட
பிரேரணைக்கு அமைச்சரவை அங்கீகாரம்
வழங்கியுள்ளது.
இப்புதிய ஒழுங்கு விதிகளின் கீழ்,
ஐந்துவருடகாலம் தமது பஸ்வண்டிகளை
சேவையில் ஈடுப்படுத்தியுள்ள பஸ்
உரிமையாளர்கள், பெறுமதி சேர்க்கப்பட்ட
வரி விலையில் புதிய பஸ்வண்டியை
கொள்வனவு செய்ய அங்கீகாரம்
வழங்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அமைச்சு வட்டாரங்கள்
தகவல் தருகையில், பயங்கரவாத
நடவடிக்கைகளால், பாதிக்கப்பட்ட
பஸ்வண்டி உரிமையாளர்களும்
இத்திட்டத்தின் மூலம் நன்மை
பெறமுடியும் என தெரிவித்தன.
இதுகுறித்து அமைச்சர் அழகப்பெரும
ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ள செய்தியில்,
இப்புதிய திட்டத்தின்
கீழ்,இறக்குமதியாளர்கள் ஒவ்வொரு பஸ்
வண்டி இறக்குமதியின் போதும் சுமார் 6
இலட்சம் ரூபாவை ஆதாயமாக பெற்றுக்கொள்ள
முடியும்.
பயணிகள் போக்குவரத்துச் சேவையை
முறையாக முன்னெடுக்கவென பயணிகள்
போக்குவரத்து அதிகாரசபை கூடுதலான
பொறுப்பையும் பாதுகாப்பையும் வழங்க
முன்வந்துள்ளது. நீண்ட தூர சேவையில்
ஈடுபடும் தனியார் பஸ் உரிமையாளர்களின்
நலன்களை கருத்தில் கொண்டே
அமைச்சரவையில் இப் புதிய திருத்தம்
கொண்டுவரப்பட்டுள்ளது.
இப்புதிய திட்டம் பொதுமக்களின் நலனை
கவனத்தில் கொண்டு
ஆரம்பிக்கப்பட்டிருப்பதுடன் கூடுதலாக
தனியார் பஸ் உரிமையாளர்கள் இதன்மூலம்
நன்மை பெறவுள்ளதாகவும் அமைச்சர்
தெரிவித்தார். |
|
|
<<முன்னைய
பதிவுகள்>> |