<%@ Language=JavaScript %> Welcome. !

 E-mail:enngal@gmail.com

தமக்குத் தீமையைச் செய்தவருக்கும், தாம் பதிலுக்குத் தீமை செய்யாது மன்னித்து விடுவதை, அறிவினுள் எல்லாம் சிறந்த அறிவு என்பார்கள்.

ஈழத்தமிழர்கள் சார்பாக தமிழக தலைவர்களுக்கு ஓர் பகிரங்க மடல்!அமைச்சர் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா.

 
செய்தி் புதுப்பிக்கப்பட்ட நாள்:12 அக்டோபர், 2008

* தமிழ்  சினிமா*

*ஜோ‌திட‌ வார பலன்*

 

ஈழத்தமிழர்கள் சார்பாக தமிழக தலைவர்களுக்கு ஓர் பகிரங்க மடல்!அமைச்சர் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா.

தமிழக மண்ணுக்கும் தமிழக அரசியல் தலைவர்களுக்கும்
வணக்கம்!!

தமிழகம் ஈழத்தமிழர்களின் வேரடி மண்!
ஈழத்தமிழர்களாகிய நாம் செழித்து வளர எங்கள் வேருக்கு நீர் வார்த்தது தமிழகம்!

இந்த நன்றியுணர்வோடு நான் உங்களுடன் மனம் திறந்து சில வார்த்தைகள் பேச விரும்புகின்றேன். காலத்தின் கட்டளையை ஏற்று மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி என்ற எங்கள் கொள்கை வழி நின்று எமது மக்கள் சார்பாக இலங்கை மத்திய அரசில் நான் அமைச்சராக பங்கெடுத்திருந்தாலும் ஈழத்தமிழர்களின் ஐனநாயகப்பிரதிநிதியாகவே நான் உங்களுடன் பேச விரும்புகின்றேன்.

ஈழத்தமிழர்களை காப்பாற்றுமாறு கோரி நீங்கள் தமிழகமெங்கும் எழுச்சிப்போராட்டங்களில் ஈடுபட்டிருப்பதில் எமக்கு மட்டற்ற மகிழ்ச்சி! இது குறித்து எமது மக்களின் சார்பாக நான் நன்றி தெரிவிக்கின்றேன். ஆயிரம் பூக்கள் மலரட்டும் என்ற பன்முகச்சிந்தனையோடு தமிழகமெங்கும் பல்வேறு கட்சிகளும் கூட்டாக இணைந்து போராட்டங்களை நடத்தும் போது ஈழத்தமிழர்களுக்கு கிடைத்திருக்காத வாய்ப்பு தமிழக மக்களுக்கு கிடைத்திருப்பதையிட்டு ஒரு புறம் மகிழ்ச்சியும் மறு புறம் வேதனையும் பிறக்கின்றது.

உங்களுக்கு தெரியும்�. ஈழத்தமிழர்களின் உரிமைக்காக நாமும் அன்று பல்வேறு அமைப்புகளாக சுதந்திரமாகவும் கூட்டாகவும் இணைந்து போராடியிருந்தவர்கள். அதற்கு ஆதரவு தேடி நாம் தமிழகம் வந்த போது எம்மை நேசக்கரம் நீட்டி எமக்கு களம் கொடுத்தீர்கள், பலம் கொடுத்தீர்கள். ஆனாலும் பல்வேறு விடுதலை அமைப்புகளும் இருக்க வேண்டும் என்ற எமது மக்களின் ஐனநாயக விருப்பங்களுக்கு மாறாக புலித்தலைமை சக விடுதலை அமைப்புகள் அனைத்தையும் அழிக்க முற்பட்டனர். இதனால் ஆயிரக்கணக்கான சக இயக்க போராளிகள் புலித்தலைமையால் கொல்லப்பட்டார்கள். இது போன்ற தனித்தலைமை வெறிபிடித்த ஐனநாயக மறுப்புகளுக்கு மத்தியில்தான் எமது மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்..

எமது மக்களின் பிரச்சினைகள் குறித்து பேச வேண்டிய ஈழத்தமிழ் தலைவர்கள் அனைவரும் புலித்தலைமையினால் கொன்றொழிக்கப்பட்டு விட்ட நிலையில் அவர்கள் விட்டுச்சென்ற இடைவெளியில் நின்றுதான் நான் உங்களோடு பேசுகின்றேன். ஈழத்தமிழர்களுக்கு இருக்க வேண்டிய முதல் உரிமை பல கட்சி ஐனநாயக உரிமை! தமிழகத்தலைவர்கள் போல் பல கட்சி தலைவர்களும் ஒன்று திரண்டு குரல் கொடுக்க முடிந்த ஐனநாயக சூழல் தமிழக மக்களுக்கு கிடைத்திருப்பது போல் தமக்கு மட்டும் கிடைத்திருக்கவில்லை என்பதே ஈழத்தமிழர்களுக்கு வேதனை தரும் விடயம். ஆனாலும், நாம் இன்னமும் மக்கள் மத்தியில்தான் வாழ்ந்து வருகின்றோம். மரணங்களுக்குள்ளேயே வாழ்ந்து வருகின்றோம். எமது மக்களின் கருத்துக்களை நாம் சரி வர அறிந்து அவர்கள் எதை விரும்புகிறார்கள் என்பதை நேரில் சந்தித்து அறிந்து வருகின்றோம்.

இந்திய இலங்கை ஒப்பந்தம் ஈழத்தமிழர்களுக்கு கிடைத்திருந்த பொன்னான வாய்ப்பு. அதை ஏற்று நடைமுறைப்படுத்தியிருந்தால் இன்று எமது மக்கள் நடைமுறையில் சுயநிர்ணய உரிமையை அனுபவித்திருப்பார்கள். ஆனால் புலித்தலைமை அதை ஏற்றிருக்கவில்லை. மாறாக இந்திய அமைதிப்படையோடு யுத்தம் நடத்தினார்கள். அன்னை இந்திராவின் புதல்வாரன முன்னாள் இந்திய பிரதமர் ரஐPவ் காந்தியை கொன்றொழித்தார்கள். இதனால் ஈழத்தமிழர்களுக்கும் தமிழக மக்களுக்கும் இடையிலான தொப்புள்க்கொடி உறவை அறுத்துப்போட்டார்கள். எமது நேச நடான இந்தியாவின் பகமையை வளர்த்துக்கொண்டார்கள். இந்த தீராத வடுக்களுக்கு மத்தியிலும் அறுந்து போன எமது தொப்புள்க்கொடி உறவை தமிழக தலைவர்களாகிய நீங்கள் உங்கள் உணர்வுகளால் மறுபடியும் ஒட்ட வைத்திருப்பதில் மிகவும் மகிழ்ச்சி அடைகின்றேன்.

இந்திய இலங்கை ஒப்பந்தம் ஒரு புறமிருக்க, பிரேமதாசா - புலிகள் பேச்சு வார்த்தை, சந்திரிகா - புலிகள் பேச்சு வார்த்தை, ரணில் விக்கரமசிங்க - புலிகள் பேச்சு வார்த்தை, மகிந்த ராஐபக்ச - புலிகள் பேச்சு வார்த்தை என்று பல்வேறு சந்தர்ப்பங்களிலும் எமது மக்கள் சமாதானத்தையும் அரசியல் தீர்வையும் விரும்பி காத்திருந்தார்கள். ஆனால் புலித்தலைமை அர்த்தமற்ற நிபந்தனைகளை விதித்து அமைதிப்பேச்சுக்களை முறித்துக்கொண்டு திரும்பி வந்தார்கள்.

அரசியல் தீர்விற்கான எந்த கோரிக்கைகளையும் புலித்தலைமை இலங்கை அரசாங்கத்திடம் முன்வைத்திருக்கவில்லை. எமது மக்கள் ஏமாந்தார்கள். ஆனால் அதற்கு எதிராக ஏன் என்று புலித்தலைமையை பார்த்து கேள்வி கேட்பதற்கு எமது மக்களுக்கு சுதந்திரம் இல்லை. இந்த சந்தர்ப்பங்களின் போது புலிகளை நோக்கி அரசியல் தீர்விற்கு உடன் படுங்கள் என்று தமிழகத்தில் போராட்டங்கள் நடத்தப்பட்டிருந்தால் நான் இன்னும் பல மடங்கு மகிழ்ந்திருப்பேன். இன்று நீங்கள் போராட்டம் நடத்த வேண்டிய தேவை இருந்திருக்காது.

2006 செப்பரம்பர் 9 இல் புலிகள் யாழ் குடாநாடு நோக்கி பெரும் படையெடுப்பை நடத்தியிருந்தார்கள். அதில் நூற்றுக்கணக்கான இளைஞர் யுவதிகளை அழிவு யுத்தத்திற்கு பலி கொடுத்துவிட்டு திரும்பி விட்டார்கள். இதனால் யாழ் குடாநாட்டிற்கான பிரதான விநியோகப்பாதையான ஏ 9 வீதியை மூட வேண்டிய சூழலை புலித்தலைமையே உருவாக்கிக்கொண்டது. கடல் வழியாக உணவு மருந்து மற்றும் அத்தியாவசியப்பொருட்கள் என்பன யாழ் குடாநாட்டு மக்களுக்காக அரசாங்கத்தால் அனுப்பப்பட்டது. அந்த உணவுக்கப்பல்கள் மீதும் புலித்தலைமை தாக்குதல்களை நடத்தினார்கள்.

இது எதற்றாக என்று நீங்கள் உணர்ந்திருப்பீர்கள்.. எமது மக்கள் பட்டினிச்சாவில் நலிய வேண்டும், அதை வைத்து மக்களுக்கு உணவில்லை என்று கூறி தங்களது அழிவு யுத்தத்திற்கு ஆட் திரட்டுவதுதான் புலித்தலைமையின் நோக்கம். அரசியல் தீர்வை முன்வையுங்கள் என்று யப்பான், நோர்வே, சுவிஸ் போன்ற நாடுகளின் பேச்சுவார்த்தை மேசையில் புலித்தலைமை இலங்கை அரசிடம் கோரியிருந்தால் இன்று எமது மக்கள் அழிவு யுத்தத்தை சந்தித்திருக்க வேண்டிய துயரம் நிகழ்ந்திருக்காது. அதன் பின்னர் கிழக்கு மகாணத்தில் மாவிலாறு அணைக்கட்டை புலித்தலைமை மூடியதால் பாரிய மோதல் வெடித்தது. கிழக்கு மாகாணத்தை முற்றாக இழந்து புலிகள் ஓடி விட்டார்கள்.

இன்று வடக்கு நோக்கிய படை நகர்வு நடந்து கொண்டிருக்கின்றது. புலித்தலைமையின் அழிவு யுத்தத்திற்கு அஞ்சி எமது மக்கள் பாதுகாப்பான இடங்களை நோக்கி நகர முடியாமல் தவிக்கின்றார்கள். பொது மக்களை பாதுகாப்பான இடம் நோக்கி வருமாறு அரசாங்கம் அறிவித்திருக்கின்றது. ஆனால் புலித்தலைமையோ வழமைபோல் மக்களை மனிதக்கேடயங்களாக தமது அழிவு யுத்தத்திற்கு பயன்படுத்தி வருகின்றார்கள். பாதுகாப்பான இடம் நோக்கி எமது மக்கள் நகர்வதை புலித்தலைமை தடுத்து வைத்திருக்கின்றது.

புலித்தலைமையின் பலாத்காரப்பிடிக்குள் இருந்து பாதுகாப்பான இடம் நோக்கி சொல்ல முடியாமல் தவிக்கும் எமது மக்களை, அதிலிருந்து மீட்பதற்காகவும் நீங்கள் குரல் எழுப்ப வேண்டும் என்று உங்களிடம் மனிதாபிமான வேண்டுகோள் விடுக்கின்றேன்.புலித்தலைமையினர் அரசியல் தீர்விற்கான அனைத்து சந்தர்ப்பங்களையும் தவறவிட்டு விட்டனர். அழிவு யுத்தத்தை நடத்தி அதில் எமது மக்கள் கொல்லப்பட வேண்டும் என்பதையே புலித்தலைமை விரும்புகின்றது. அதை வைத்து ஒப்பாரி வைப்பதும் ஆதரவு தேடுவதும்தான் அவர்களது நோக்கம். புலித்தலைமையின் இந்த விசித்திரமானதும் வேதனையானதுமான சுயலாப அரசியலை எமது மக்கள் வெகுவாகவே புரிந்திருக்கின்றார்கள்.

ஈழத்தமிழர்கள் இந்த அழிவு யுத்தத்தை விரும்பவில்லை. அவர்கள் ஜனநாயகவழியையே விரும்புகிறார்கள். அரசியல் தீர்வையும் சமாதானத்தையும் விரும்புகின்றார்கள்.ஆனால் புலித்தலைமையோ அழிவு யுத்தத்தை விரும்புகிறது.

ஆகவே ஈழத்தமிழர்களின் பிரச்சினை வேறு! புலித்தலைமையின் பிரச்சினை வேறு என்பதை நீங்கள் புரிந்திருப்பீர்கள். அழிவு யுத்தத்தில் இருந்து ஈழத்தமிழர்களை காப்பதற்காக நீங்கள் தமிழகத்தில் நடத்தும் போராட்டங்களை நான் வரவேற்கின்றேன். ஆனாலும் நீங்கள் நடத்தும் போராட்டங்கள் புலித்தலைமையின் அழிவு யுத்தத்திற்கு பலம் சேர்பதற்காக அமைந்து விடக்கூடாது என்பதுதான் எமதும் எமது மக்களினதும் விருப்பங்களாகும்.

இந்த அழிவு யுத்தத்திற்கு பிரதான காரணமாக இருப்பவர்கள் புலித்தலைமைதான் என்பதை நீங்கள் புரிந்திருப்பீர்கள். புலித்தலைமை ஐனநாயக வழிக்கு வருவார்கள் என்;றோ, அழிவு யுத்தத்தை கைவிட்டு அரசியல் தீர்வை ஏற்பார்கள் என்றோ இங்கு யாருக்கும் நம்பிக்கை இல்லை.

யுத்தத்தை நிறுத்துமாறு நீங்கள் கோரிக்கை எழுப்புவது தவறானது அல்ல. ஆனாலும் புலித்தலைமை தாம் பலவீனமடையும் போது யுத்த நிறுத்தம் செய்வதும், பின் தங்களை பலப்படுத்திக்கொண்டு மறுபடியும் அழிவு யுத்தத்தை தொடங்குவதும்தான் இதுவரை கால வரலாறு. தம்மிடம் இருந்த பலத்தை ஈழத்தமிழர்களின் அரசியல் தீர்விற்காக புலித்தலைமை ஒருபோதும் பயன்படுத்தியதில்லை. பலம் வந்தால் யுத்தம், பலவீனமானால் பேச்சு வார்த்தை என்று தொடர் துயரங்களுக்குள் எமது மக்களை புலித்தலமை சிறை வைத்து வருகின்றது. விவேகம் இல்லாத வெற்று வீரத்தால் எமது மக்கள் அவலப்படுகின்றார்கள்.

புண்ணுக்கு வலியா?,� மருந்துக்கு வலியா?.... புண்ணுக்குத்தான் வலி! எமது மக்களின் வலியை உணர்ந்து எமது தமிழர் தரப்பினர்தான் உரிமைகளை பெற முயன்றாக வேண்டும். இலங்கை இந்திய ஒப்பந்தத்திலானான 13 வது திருத்தச்சட்டத்தை அரசாங்கம் நடைமுறைப்படுத்த தொடங்கியிருக்கின்றது. கிழக்கு மாகாணத்தில் மாகாணசபைக்கான தேர்தல் நடத்தப்பட்டு அது மக்கள் பிரதிநிதிகளிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கின்றது.

அது போலவே வடக்கு மாகாணத்திலும் தேர்தல் நடத்தும் சூழல் உருவாகும் வரைக்கும் வடக்கு மக்களுக்கான இடைக்கால ஏற்பாடாக ஒரு சிறப்பு நிர்வாகத்தை அரசாங்கம் உருவாக்கியிருக்கின்றது. பட்டு வேட்டி பற்றிய கனவில் இருந்தால் கட்டியுள்ள கோவணமும் களவாடப்பட்டு விடும். கிடைப்பதை எடுத்துக்கொண்டு இன்னும் எடுக்க வேண்டியதற்காக நாம் ஜனநாயக வழியில் போராட வேண்டும்.

தமிழக மக்களின் எழுச்சியும், இந்திய அரசின் பக்கபலமும் இருந்தால் ஈழத்தமிழர்களை அழிவுகளில் இருந்து காப்பாற்ற முடியும். இலங்கைத்தீவில் அரசாங்கம் முன்னெடுக்கும் இலங்கை இந்திய ஒப்பந்தத்திற்கு நாம் புத்துயிர் கொடுக்க முடியும்.

இந்திய இலங்கை ஒப்பந்தத்தினால் அரசியல் தீர்வாக உருவாக்கப்பட்ட மாகாணசபை முறையை முழுமையாக நடைமுறைப்படுத்துவதில் ஆரம்பித்து இறுதித்தீர்வை நோக்கி செல்வதற்கு நீங்கள் உதவ வேண்டும். இதற்கு தடையாக இருந்து வரும் புலித்தலைமக்கு நீங்கள் அழுத்தம் கொடுக்க வேண்டும் என்பது எமது நியாயமான எதிர்பார்ப்பாகும்.

இந்திய இலங்கை ஒப்பந்தத்தை மறுபடியும் நடைமுறைப்படுத்தினால் ஈழத்தமிழர்களை அழிவுகளில் இருந்து காப்பாற்ற முடியும். அப்போது எமது மக்களுக்கு நம்பிக்கை பிறக்கும். எமது மக்கள் முன்னரை விடவும் முழுமையாகவே அரசியல் தீர்வின் பக்கம் அணி திரண்டு வருவார்கள்.

அரசியல் தீர்வு பலப்படும் போது புலித்தலைமையும் தவிர்க்க முடியாத நிர்ப்பந்தத்தில் அரசியல் தீர்வு நோக்கி வருவார்கள். யுத்தம் நிறுத்தப்படும். எமது மக்கள் அச்சம் தரும் வாழ்வையும் கடந்து அழிவுகளற்ற அமைதிப்ப+ங்காவில் ஆனந்தக்களிப்போடு வாழும் சூழல் பிறக்கும். இதுவே எமது மக்களின் நிரந்தர மகிழ்ச்சி!

எம் இனிய உடன் பிறப்புகளே!...

உங்களது எழுச்சிப்போராட்டங்கள் தொடர்வதாயின் தொடரட்டும்..ஆனாலும் அவைகள் புலித்தலைமையின் யுத்த வெறிக்கு துணை போய்விடக்கூடாது. நடை முறைச்சாத்தியமான அரசியல் தீர்வு முயற்சிகளை முன்நகர்த்தி செல்வதற்கு உங்கள் போராட்டம் பங்களிப்பதே சிறப்பானதாகும்.

புலிகள் அமைப்பின் கிழக்கு மாகாண போராளிகள் தமது தலைமையின் தவறுகளை உணர்ந்து திருந்தி ஜனநாயக வழிக்கு திரும்பி விட்டார்கள். வடக்கிலும் புலித்தலைமையில் இருந்து பலர் வெளியேறுவதற்காக சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து காத்திருக்கின்றார்கள்.

ஈழத்தமிழர்களின் தேசியத்தலைவர் அமிர்தலிங்கம் போன்றவர்களும்,இலங்கை தமிழ் இடது சாரி தலைவர்களான தோழர்கள் அண்ணாமலை, மற்றும் விஜயானந்தன் போன்றவர்கள் எம் மத்தியில் இல்லை. அன்று ஆயுதப்போராட்டம் நடத்திய சக இயக்கத்தலைவர்களும் இன்று உயிருடன் இல்லை. அனைவருமே புலித்தலைமையால் கொன்றொழிக்கப்பட்டு விட்டார்கள்.

அவர்களின் கொள்கை வழி சார்பாகவும், எமது மக்களின் விருப்பங்கள் சார்பாகவும் இந்த மனிதாபிமான வேண்டுகோளை நான் உங்களிடம் விடுக்கின்றேன்.

ஈழத்தமிழர்களுக்கும் தமிழக உறவுகளுக்குமான தொப்புள்க்கொடி உறவு தொடரட்டும்.! இலங்கை இந்திய நட்புறவு வளரட்டும்.!!
ஈழத்தமிழர்களின் நிரந்தர மகிழ்ச்சிக்காக மட்டும் குரல் கொடுங்கள்!

பிரியமுடன்


அவலப்படுகின்ற ஈழத்தமிழர்கள் சார்பாக
செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா.  ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி (ஈ. பி. டி. பி)

<<முன்னைய பதிவுகள்>>

 
 

 

இலங்கை சகலருக்கும் உரிய நாடு இதனை பேரினவாதிகள் முழு உரிமை கொண்டாடுவதை அனுமதிக்க முடியாது.அதேபோன்று எல்.ரீ.ரீ.ஈ.யினரின் பயங்கரவாத்தால் துண்டாடப்படுவதையும் அங்கீகரிக்க முடியாது.

 

சமூகத்தில் பல்வேறு அரசியல் கருத்துகளைக் கொண்ட போக்குள்ள குழுக்கள் அவதூறுகளுக்குப் பெயர் கருத்துச் சுதந்திரமல்ல.

 

வன்னியில் மக்கள் படட்டினிச்சாவில் இது தான் புலம்பெயர் புலிகளின் தமிழ்மக்கள் மீதான பற்று உடையிறது தேங்கை மட்டுமல்ல எங்கிட தமிழருடைய வாழ்வும்தான்.(படங்கள் இணைப்பு)

 

இலங்கைக்கான கொரிய தூதுவருடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சந்திப்பு ஒன்று இன்று இடம்பெற்றுள்ளது.(படங்கள் இணைப்பு)

 

சந்தர்ப்பங்களைப் பயன்படுத்தி ஜனநாயகத்தை பலப்படுத்த நேசக்கரம் நீட்டி அழைக்கின்றேன்!அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா.

 

கருணா அம்மானுக்குப் பாராளுமன்றப் பதவி கொடுத்தவுடன் சீறியெழுகின்றனர் ஏகாதிபத்திய பிற்போக்குவாதிகள்.

Welcome. to Visit.angaltheaasam.com ..!

Last update: 20-06-2008. Desigin and Copyright