<%@ Language=JavaScript %> Welcome. !

 E-mail:enngal@gmail.com

தமக்குத் தீமையைச் செய்தவருக்கும், தாம் பதிலுக்குத் தீமை செய்யாது மன்னித்து விடுவதை, அறிவினுள் எல்லாம் சிறந்த அறிவு என்பார்கள்.

கருணா அம்மானுக்குப் பாராளுமன்றப் பதவி கொடுத்தவுடன் சீறியெழுகின்றனர்  ஏகாதிபத்திய பிற்போக்குவாதிகள்.

 
செய்தி் புதுப்பிக்கப்பட்ட நாள்:09 அக்டோபர், 2008

* தமிழ்  சினிமா*

*ஜோ‌திட‌ வார பலன்*

 

கருணா அம்மானுக்குப் பாராளுமன்றப் பதவி கொடுத்தவுடன் சீறியெழுகின்றனர்  ஏகாதிபத்திய பிற்போக்குவாதிகள்.

முதலில் முன்னை நாள் மேயர் ஜெனரல் ஜானக பெரேராவின் குண்டுவெடிப்புக்கும் த.ம.வி.பு க்கும் சம்பந்தம் இருக்கிறதென்றும் இரணடு நாட்களுக்கு முன்னர்தான் பிள்ளையான் அப்பிரதேசத்திற்கு வந்து போனாரென்றும் வதந்திகளைப் பரப்பினர். ஓரு பங்கரவாதிக்குப் பாராளுமன்றப்பதவி கொடுக்கப்பட்டுள்ளதென்றும் லண்டனில் சிறைவைக்கப்பட்டவருக்குப் பாராளுமன்றப்பதவி கொடுக்கப்படுகிறதென்றும் இப்படி இன்னோரன்ன கதைகளைப் பரப்பினர்.

உண்மையில் ஜனாதிபதியும் மந்திரிசபையும் மற்றும் சர்வதேச அரசியல் சாணக்கியர்களும் மிகத்தீவிரமாக யோசித்த பின்னரே இந்த முடிவு எடுக்கப் பட்டது. காரணம் தமிழர்களுள் மந்திரியாக இருக்கும் ஒருவரான டக்ளஸ் தேவனந்தா தனித்து நின்று சட்டத்தின் ஆட்சி நிலாவமலும் இருக்கும் வடகீழ் மாகாணத்தின் அத்தனை விடயங்களையும் நிர்வகிக்க நேரமற்று இருக்கிறார். அதனோடு இப்பொழுது அவர் தற்காலிக ஆளுனர் வேலையையும் செய்வதாலும் கிழக்குக்கு மிகப் பொறுப்போடு சேவசெய்யும், கிழக்குக்கு சேவைசெய்வதிலே இன்பம் காணும் சேவை செய்வதையிட்டுப் பெருமைப்படும் ஒருவர். அத்தியாவசியம் தேவைப்படுவதாலுமே கருணா அம்மானுககு அப்பதவி வந்து சோர்ந்தது.

அவர் கிழக்கிலுள்ள பெரிய படைகளை நிர்வகித்து இலங்கையில் இதுவரைகாலமும் வந்த எந்த ஜெனரல்களுக்கும் இரண்டந்தரமில்லாத நிர்வாகத்திறனும் உடையவர் என்பதை எவரும் சவால்விட முடியாது. அவர் ஆள் அணிகளையும் உடைமைகளையும் நிதியையும் நிர்வகித்ததால் அங்கீகாரம் பெற்ற மனிதர். அது மாத்திரமல்ல பாசிவாதிகளின் மிரட்டலுக்கு மிக விளையாட்டாகப் பதில் சொல்லக் கூடியவர் என்பதால் கிழக்குக்குப் பொருத்தமான பிரதிநிதி அவரென்பதாலேயே அவர் இக்கட்டான காலகட்டத்தில் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார். இன்றய நிலையற்ற நிரந்தரமற்ற சமூகசூழலில் ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவ மாட்டார்கள்.

மற்றது த.ம.வி.பு இல்லாமல் கிழக்கு இவ்வளவு இலகுவாக விடுதலை பெற்றிருக்க முடியாது. கிழக்கு விடுவிப்பின்போது த.ம.வி.பு லிகளே இராணுவத்திலும் அதிகம் மரணித்தவர்களாகும். அவர்களே மக்களோடு மக்களாக நின்று புலிகளைத் துரத்தியவர்களாகும். அல்லாவிடில் வடக்கில் கூட இராணுவம் இவ்வளவுக்கு முன்னேறியிருக்க மாட்டாது. புலியைப் பலவீனப்படுத்தப் போராடிய தமிழ் சக்திகளுள் த.ம.வி.பு கள் மிக முக்கியமானவர்களாகும். ஊட்பகை இல்லாவிடில் அன்னிய பிற்போக்குச் சக்திகளின் ஆதரவைப்பெற்ற புலிகளைப் பலவீனப் படுத்தி இருக்க முடியாது.

நேற்றய டெய்ல்லி மிரரில் சர்வதேச மன்னிப்புச் சபை என்ற ஏகாதிபத்திய கைகூலி 
டெய்ல்லி மிரரில். இலங்கைப் பாராளுமன்றம் கருணாவை நிராகரிக்க வேண்டும் என்று கூறி இலங்கை அரசியலிலே தலையிடுகிறது. சர்வதேச மன்னிப்பு சபை பலஸ்தீனத்தில் என்னென்ன சதி வேலைகளைச் செய்தது என்பது ஊரறிந்து உலகறிந்த விடயம். வியட்னாம் நரபலி வேட்டையாடிய மக்னமாரா கென்றி கிஸ்சிங்கர் சவல் போன்ற எத்தனையோ பேரை சர்வதேச மன்னிப்பசபைக்குத் தெரியாது. சுகாட்டோவை பினச்சோவை பள்ளவி சாரை பிலிப்பையின் மார்க்கஸ்சை எல்லாம் சர்வதேச மன்னிப்புச் சபைக்குத் தெரியாது.

இலங்கையில் லட்சக்கணக்கான மக்களைக் கொன்றவர்கள் யார். பில்லியன் கணக்கான கண்ணி வெடிகளை ஆர் விற்றார்கள். இதுவெல்லாவற்றையும் விட்டுவிட்டு மனித உரிமைபேசுகிறது சர்வதேச மன்னிப்ப சபை.

பிரெஞ்சுத்தொண்டு நிறுவனத்தைக் கொன்றதாகக் கடிதத்திற்கு மேல்கடிதமெழுதி ஏகாதிபத்தியங்குளுக்கு இலங்கை அரசைவிற்ற யாழ் பல்கலைக்கழக ஆசிரியர் ராஜன் கூலுக்கு அவரது நண்பர் சிறிகரன் காபுலில் அமெரிக்க ஏகாதிபத்திய ஏஜண்டாக நின்று ஆபுகானிஸ்தான் மக்களை நரபலி வேட்டையாடுவதற்குத் துணைபோவது கிழக்குமக்கள் நன்றே அறிந்த விடயமே. எல்லையற்ற பத்திரிகையாளர் அமைப்பு பிரெஞ்சு உளவுப்படையால் ஸ்தாபிக்கப்பட்டது என்பது கிழக்கு மக்களுக்குத் தெரியும்

கருணாவை எப்படியாவது குற்றவிசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்பதுவே சர்வதேச மன்னிப்புச்சபையினதும் மற்ற பிற்போக்குவாதிகளதும் எதிர்ப்புரட்சி சதியாகும். அதற்கு ஒரே காரணம் மேற்குலக ஏகாதிபத்திய எடிபிடியும் கூலிக்குக் கொல்லும் கைப்பாவையான புலியைப் பலவீனப் படுத்திய ஒரேகாரணத்தால் இந்த ஏகாதிபத்திய நிறுவனமும் டெய்லி மிரரும் கருணாவை வெறுக்கிறது.

டெய்லி மிரர் றெஜிமைக்கேல் ஆசிரியராக இருந்த காலந்தொடக்கம் தமிழின விரோதத்தை வளர்த்த ஒரு கேடுகெட்ட எதிர்ப்புரட்சிப் பத்திரிகையாகும். இன்றய தமிழர் கொலைக்கான அரைவாசிப் பொறுப்பு டெய்லிமிரருக்கம் ரைம்ஸ் நிறுவனத்திற்குமே உரியது.

கருணா புலியிலிருந்து பிரிந்தது எதுவும் தற்செயல் நிகழ்ச்சியல்ல. 1983 இருந்த சமூக, மற்றும் உலக ‚சூழல் 2004 இல் இருந்ததில்லை. முழுச்சமூக உறவும் மாறிய நேரத்தில் பழைய நிலைமைக்குள் மீண்டும் கொண்டுபோகும் பிற்போக்குச் செயலே இவர்களது கருணா வெறுப்புப் பிரச்சாரங்களாகும். கருணாவுக்குப் பாரளுமன்றப் பதவி கொடுத்தது கருணாவுக்கு மேலாக இலங்கை மக்களுக்கே நன்மையான விடயம். அது சிங்கள தமிழ் மக்களை ஒற்றுமைப்படுத்தி ஏகாதிபத்திய பிரித்தாளும் தந்திரத்திற்கு சாவுமணி அடித்த செயலாகும்.

சர்வதேச மன்னிப்பச்சபைக்கு யார் அதிகாரம் கொடுத்தார்கள் கருணாமேல் நம்பிக்கையில்லாத தீர்மானம்கொண்டவரும்படி சொல்வதற்கு. சர்வதேச மன்னிப்பசபை என்ற எதிர்ப்புரட்சி நிறுவனததையும் மற்றய சதிகார ஏகாதிபத்திய நிறுவனங்களையும் இலங்கையை விட்டு அகற்றாத ஒரே குற்றத்தாலேயே இலங்கை இன்றுவரை எரிகிறது. இலங்கையைக் கொள்ளையடித்து கள்ள வங்கிகளிலே போட்ட எத்தனையோ மண்கொள்ளைக் காறர்கள் பாராளுமன்றத்தில் இருகும்பொழுது, பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்படுவதற்கும் விதவைகளாவதற்கும் ஊனமுற்றோராவதற்கும் துணைபோனவர்களும் அதன் சூத்திரதாரிகளும் பாராளுமன்றதில் இருக்கும்பொழுது இரண்டு தசாப்தத்திற்கு மேலாக தான் நம்பிய கொள்கைக் விசுவாசகம் அது அவருக்கு சந்தேகமாகமாறப் பிழையென்று தெரியும்வரைக்கும், காடு மேடு சொந்தமாக கல்லு முள்ளு இன்பமாக வாழ்ந்து காட்டிய கருணா ஏன் பாராளுமன்றத்தில் இருக்க் கூடாது. தமிழ்மக்களது போராட்டம் பிரபாகரன் ஏகாதிபத்தியங்களுக்கு வில்லாது விட்டிருந்தால் இன்றய இலங்கை அரசியல் வேறுவிதமாக இருந்திருக்கம். சாபக் கேடு இலங்கையின் உள்நாட்டுப் பிரச்சனையெதுவும் இலங்கைத்தேசிய எல்லைக்குள் உருவானதல்ல. எனிமேலும் உருவாகப் போவதல்ல. எல்லாமே வெளியிலிருந்து ஏகாதிபத்திய சதிகாறர்களால் இலங்கை மக்களின் கண்களில் மண்ணைத் தூவி விட்டு இரகசியமாகக் கொண்டு வரப்பட்டது. தமிழ்மக்கள் தமது பத்திரிகைகளில் ஒவ்வொரு நாளும் ஏகாதிபத்தியங்களைப் பற்றி எழுத வேண்டும். அது ஒன்றே முன்னேறுவதற்குரிய வழியாகும்.

இலங்கையின் தமிழ் சிங்கள முஸ்லீங்கள் ஐக்கியம் நீடு வாழ்க.

கருணாமூர்த்தி (கருணா அம்மான்) வாழ்க.

<<முன்னைய பதிவுகள்>>

 

 

 
 

 

இலங்கை சகலருக்கும் உரிய நாடு இதனை பேரினவாதிகள் முழு உரிமை கொண்டாடுவதை அனுமதிக்க முடியாது.அதேபோன்று எல்.ரீ.ரீ.ஈ.யினரின் பயங்கரவாத்தால் துண்டாடப்படுவதையும் அங்கீகரிக்க முடியாது.
 

 

சமூகத்தில் பல்வேறு அரசியல் கருத்துகளைக் கொண்ட போக்குள்ள குழுக்கள் அவதூறுகளுக்குப் பெயர் கருத்துச் சுதந்திரமல்ல.
 

 

வன்னியில் மக்கள் படட்டினிச்சாவில் இது தான் புலம்பெயர் புலிகளின் தமிழ்மக்கள் மீதான பற்று உடையிறது தேங்கை மட்டுமல்ல எங்கிட தமிழருடைய வாழ்வும்தான்.(படங்கள் இணைப்பு)
 

 

இலங்கைக்கான கொரிய தூதுவருடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சந்திப்பு ஒன்று இன்று இடம்பெற்றுள்ளது.(படங்கள் இணைப்பு)
 

 

ரி.எம்.வி.பியின் தலைவர் கருணா அம்மான் -ஈபிடிபியின் செயலாளர் நாயகம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சந்திப்பு.(படங்கள் இணைப்பு)

Welcome. to Visit.angaltheaasam.com ..!

 

Last update: 20-06-2008. Desigin and Copyright