<%@ Language=JavaScript %> Welcome. !
எங்கள் தேசம் இணையம் www.engaltheaasam.com Welcome To Visit

     E-mail: eenagal@gmail.com

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள வவுனிக்குளம் குளக்கட்டுப் பகுதி உட்பட்ட 10 சதுர கிலோ மீற்றர் படையினர் கைப்பற்றியிருப்பதாக இராணுவம் தெரிவிப்பு. நூல்களை படிப்பதில் மட்டுமன்றி நூல்நிலையங்களை எரிப்பதிலும் மகாசமர்த்தர் ஜே.ஆர். என்பது நிரூபணம். :: தமிழருக்கு ஒருபோதும் சுயநிர்ணய உரிமை இல்லை கடத்தல், கப்பம் பெறுவது விடுதலைப்புலிகளே சபை முதல்வர் நிமால் சிறிபால டி சில்வா. ::  மன்னார் மடுவில் ஆகஸ்ட் திருவிழாவுக்கு முன் பொலிஸ் நிலையத்தை திறக்கத் திட்டம் தெரிவிக்கப்படுகிறது. :: அமைச்சர் ஆறுமுகம் தொண்டமான் இருக்கும்வரை இ.தொ.கா.வை எவராலும் அழிக்க முடியாது.:: ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவராக ரணில் விக்கிரமசிங்க தலைவராக இருக்கும்வரை ஐ.தே.க. வால் ஆட்சியை ஒருபோதும் பிடிக்கமுடியாது'. :: கச்சதீவுக்கு 700 படகுகளில் சென்ற இந்திய மீனவர்களை திருப்பிய இலங்கை கடற்படை தெரிவிக்கப்பட்டுள்ளது. :: இலங்கைக்கு இந்தியா உதவுவது சகலரும் அறிந்தவிடயம் மன்மோகன்சிங் அரசின் வெற்றி கொழும்புக்கு பக்கபலம் அமைச்சர் மைத்திரிபால சிறிசேன.

 

   

Wanni Operation  21st & 22nd July 2008 view video
 

Progress of Wanni theatre of operations View Vedio

T.m.v.p.Songs.Click Here

ஒலி பதிவுகள்

Live Radio Click Here 

 T.I.R.Radio Live   

T.B.C.Rodio.Live

B.B.C.Tamil 

Download Baamni 

Tamil Font  

 Sithiram Font 

 

அரசியல் கட்சிகள்

  ஈ.ம.ஜ.கட்சி   டெலோ நியூஸ்  த.ம.வி.புலிகள்   த.ம.வி.கழகம்   ஈ.ம.பு..வி.மு

இணையங்கள்

 :: அதிரடி  :: இலக்கிய  :: ஈழநாசம்  :: நெருப்பு :: காரைநெற்  :: தமிழ்நீயூஸ்வெப்  :: தாயகம்  :: தேசம்நெற்  :: தேனீ  :: விழிப்பு  :: உயிர் நிழல்  :: ஊடறு  :: கரித்துண்டு  :: கீற்று :: சத்திய கடதாசி  :: தூ .................

களஞ்சியம்

பதிவுகள் வார பலன்

Welcome. to Visit.angaltheaasam.com ..!

செய்தி் புதுப்பிக்கப்பட்ட நாள்: 24 ஜுலை, 2008

* தமிழ்  சினிமா*

*ஜோ‌திட‌ வார பலன்*

தமக்குத் தீமையைச் செய்தவருக்கும், தாம் பதிலுக்குத் தீமை செய்யாது மன்னித்து விடுவதை, அறிவினுள் எல்லாம் சிறந்த அறிவு என்பார்கள்.

 

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள வவுனிக்குளம் குளக்கட்டுப் பகுதி உட்பட்ட 10 சதுர கிலோ மீற்றர் படையினர் கைப்பற்றியிருப்பதாக இராணுவம் தெரிவிப்பு

குளக்கட்டுப் பகுதி உட்பட்ட 10சதுர கிலோ மீற்றர் பரப்பளவான பகுதியை, பாண்டியன்குளத்தில் இருந்து முன்னேறிச் சென்ற படையினர் இன்றுகாலை 10 மணியளவில் கைப்பற்றியிருப்பதாகப் பாதுகாப்பு அமைச்சகம் செய்தி வெளியிட்டுள்ளது. மல்லாவியில் இருந்து தென்கிழக்காக 3 கிலோ மீற்றர் தொலைவில் இந்த இடம் அமைந்துள்ளதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது,

செறிவான எறிகணை மற்றும் மோட்டார் தாக்குதல்களி;ன் உதவியோடு முன்னேற்ற நடவடிக்கையில் ஈடுபட்ட படையினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் கடும் சண்டைகள் மூண்டதாகவும், இதன்போது குறைந்தது 25 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் தனது செய்தியில் தெரிவித்துள்ளது.

இறந்தவர்களில் 7 விடுதலைப் புலிகளின் சடலங்களையும் ஆயுத தளபாடங்களையும் கைப்பற்றிய படையினர், உழவு இயந்திரம் ஒன்று, 2 மோட்டார் சைக்கிள்கள் உட்பட வேறு பொருட்களையும் கைப்பற்றியிருப்பதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கையில் நடைபெறவுள்ள சார்க் மாநாட்டையொட்டி, இம்மாதம் 26 ஆம் திகதி முதல் ஆகஸ்ட் 4 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் ஒரு தலைப்பட்சமாக போர்நிறுத்தத்தைக் கைக்கொள்ளப் போவதாக 22 ஆம் திகதி விடுதலைப் புலிகள் வெளியிட்ட போர்நிறுத்த அறிவித்தல் வெளியாகிய இரண்டு தினங்களில் வன்னிப்பிரதேசத்தின் உட்பகுதியில் அமைந்துள்ள வவுனிக்குளம் பகுதியை படையினர் விடுதலைப் புலிகளிடமிருந்து கைப்பற்றியிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது,

நூல்களை படிப்பதில் மட்டுமன்றி நூல்நிலையங்களை எரிப்பதிலும் மகாசமர்த்தர் ஜே.ஆர். என்பது நிரூபணம்

விடுதலைப்புலிகள் ஒருதலைப்பட்சமான போர் நிறுத்தம் குறித்து அரசுக்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லை. ஊடகங்களுக்கு விடுத்த அறிக்கைகளுக்கு பொறுப்பேற்க வேண்டிய அவசியம் அரசுக்குக் கிடையாது எனத் தெரிவித்த அரச சமாதானச் செயலகத்தின் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் ரஜீவ விஜேசிங்க புலிகள் வரலாற்றில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நம்பகத்தன்மையுடன் செயற்படவில்லை எனவும் குறிப்பிட்டார்.

புலிகளின் இந்த அறிவிப்பு ஒழுக்கப் பண்புகளை மீறிய நேர்மையற்றதொன்றாகவே அரசு நோக்குவதாகவும் இதனை வைத்துக்கொண்டு நோர்வேயுடன் கதைக்கவேண்டிய அவசியம் கிடையாதெனவும் ரஜீவ விஜேசிங்க சுட்டிக்காட்டினார்.

83 கறுப்பு ஜூலை தினத்தை நினைவுகூரும் பொருட்டு தேசிய சமாதானப் பேரவை நடத்திய கருத்தரங்கில் பேசுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

பேராசிரியர் விஜேசிங்க தொடர்ந்து பேசுகையில் கூறியதாவது;

2002ஆம் ஆண்டில் விடுதலைப்புலிகள் அரசுடன் செய்துகொண்ட போர் நிறுத்த உடன்படிக்கையிலிருந்து அவர்களே விலகிக்கொள்ளும் வரையிலான இடைப்பட்ட காலத்தில் மாற்று இயக்கங்களைச் சேர்ந்தவர்களையும் தமது அரசியல் எதிரிகளையும் படுகொலை செய்தனர். இவ்வாறானதொரு சூழ்நிலையில் இனிமேலும் விடுதலைப்புலிகளை நம்ப முடியுமா?

ஒருதலைப்பட்சமான போர் நிறுத்தத்தை அரசுக்கோ, நோர்வே தரப்புக்கோ புலிகள் உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லை. வீதியால் போகிறபோக்கில் ஒரு ஊடக அறிக்கையையே விடுத்திருக்கின்றது. பொறுப்புள்ள அரசால் இதனை ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த அறிவிப்பு குறித்து நோர்வேயுடன் பேசவேண்டிய அவசியமும் அரசுக்குக் கிடையாது.

கடந்த 24 வருடங்களாக புலிகள் என்ன செய்தார்கள் என்ன செய்வார்கள் என்பதையெல்லாம் அரசு நன்கு தெரிந்துகொண்டுள்ளது அவர்கள் சரியான பாதைக்குத் திரும்பும் வரை பேச்சுக்கோ, போர் நிறுத்தத்துக்கோ வாய்ப்பே கிடையாது.

83 ஜூலை கலவரத்துக்கு 81 களிலேயே அடித்தளமிடப்பட்டது. யாழ். பொது நூலகத்தை தீவைத்து அழித்த பெரும் கைங்கரியத்தை செய்த பெருமை அன்றைய அமைச்சர் சிறில் மத்தியூவையே சாரும். முன்னாள் ஜனாதிபதி புத்தகம் வாசிப்பதில் கெட்டிக்காரர். அதேபோன்று நூல் நிலையங்களை எரிப்பதிலும் மகாசமர்த்தர் என்பதை 1981இல் நிரூபித்துக்காட்டியுள்ளார்.

அன்றைய கலவரங்களுக்கான பொறுப்பையேற்று மன்னிப்புக் கேட்கும்வரை அன்றைய ஐக்கிய தேசியக் கட்சி அரசின் துரோகச் செயலை எத்தனை வருடங்களானாலும் பேசிக்கொண்டே இருப்போம்.

தமிழருக்கு ஒருபோதும் சுயநிர்ணய உரிமை இல்லை கடத்தல், கப்பம் பெறுவது விடுதலைப்புலிகளே சபை முதல்வர் நிமால் சிறிபால டி சில்வா

தமிழ் மக்களுக்கு எவ்விதத்திலும் சுயநிர்ணய உரிமையை வழங்க முடியாது என்று தெரிவித்துள்ள அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா, நாட்டில் நிலவும் மனிதவுரிமை மீறல்கள் மற்றும் ஏனைய குற்றச்செயல்களுக்கு புலிகளே பிரதான காரணகர்த்தாவாக விளங்குவதாகவும் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்றுப் புதன்கிழமை இடம்பெற்ற வடக்கு கிழக்கின் தற்போதைய நிலை தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது
புலிகளின் பல்வேறு நடவடிக்கைகளினால் இன்று நாடு சீரழிந்து போயுள்ளது. புலிகளை காப்பாற்றுவதற்காகவே இப்பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நாட்டினது அதிகாரப்பகிர்வு, பொருளாதாரம் மற்றும் ஏனைய நடவடிக்கைகளை தீர்மானிக்கும் பொறுப்பு பொதுமக்கள், மக்கள் பிரதிநிதிகள் மற்றும் ஜனநாயகவாதிகளின் கடமையாகும். குண்டுகள் மூலமோ அல்லது துப்பாக்கிகள் மூலமோ இந்நாட்டு பிரச்சினைக்கு தீர்வு காணமுடியாது இதேவேளை, தமிழர்களுக்குரிய சுயநிர்ணய உரிமையை எந்த வகையிலும் வழங்கவோ பெற்றுக்கொடுக்கவோ முடியாது.

புலிகளே பயங்கரவாதத்தை அறிமுகப்டுத்தினார்கள் பயங்கரவாதத்தை அறிமுகப்படுத்திய அதேவேளை அவர்களது யாழ்.பிரதேசத்திலுள்ள சிங்கள முஸ்லிம் மக்களை விரட்டியடித்தனர் அப்போது எந்தவொரு உரிமையும் கடைப்பிடிக்கப்படவில்லை பெருமளவான தமிழ் மக்களை புலிகளே கொன்றழித்துள்ளனர் தமிழ் மக்கள் மீது எந்தவொரு அக்கறையின்றியும் செயற்படுபவர்களாகவே அவர்கள் செயற்படுகின்றனர்.

ஆனால், அரசாங்கம் தமிழ் மக்களை ஒழுங்காக வாழவைப்பதற்கான செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றது. அவர்களுக்கான உரிமைகளைப் பெற்றுக் கொடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது ஆனால் புலிகளோ இந்நாட்டை துண்டு துண்டாகப் பிரித்து சர்வாதிகார ஆட்சியை நிலைநாட்டுவதற்காகவே செயற்படுகின்றனர். கிழக்கு மாகாண மக்கள் தற்போது ஜனநாயக காற்றை சுவாசிக்கும் நிலைபோல் வடக்கிலும் ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடனே அரசாங்கம் செயற்படுகின்றது.

தமிழ் மக்களை பயங்கரவாதிகளிடமிருந்து மீட்டெடுத்து ஜனநாயகத்தை நிலைநிறுத்துவதில் எமது படையினர் முன்னேற்றம் கண்டுவருகின்றனர் புலிகள் அப்பாவி தமிழ் மக்களை கவசங்களாக பயன்படுத்தி வருகின்றனர் அவர்களால் பொது மக்கள் துன்புறுத்தப்படுகின்றனர் இந்த கொடிய பயங்கரவாதத்தை இல்லாதொழிப்பதே எமது பிரதான நோக்கமாகும்.

இந்நாட்டு மூவின மக்களுக்கும் ஒரு சுமுகமான தீர்வை பெற வேண்டுமென்ற நோக்குடனே சர்வகட்சி மகாநாட்டை கூட்டினோம். ஆனால் அதன் மூலம் எந்தவொரு தீர்வும் கிடைக்கப்பெறவில்லை.

புலிகளே கடத்தல், கப்பம் பெறும் தொழிலை மேற்கொண்டு வருகின்றனர் அரசாங்கம் மக்களைப் பாதுகாத்து வருகின்றது இதனாலேயே எமது படையினர் முழுமையான அர்ப்பணிப்புடன் முன்னேறி செல்கின்றனர். நாம் பயங்கரவாதிகளை தோல்வியடையச் செய்வது உறுதி என்றும் தெரிவித்தார்.

மன்னார் மடுவில் ஆகஸ்ட் திருவிழாவுக்கு முன் பொலிஸ் நிலையத்தை திறக்கத் திட்டம் தெரிவிக்கப்படுகிறது.

மன்னார் மடு பகுதியில் பொலிஸ் நிலையமொன்றை அமைக்க அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மடுமாதா திருச்சொரூபம் கடந்த மூன்று மாதத்திற்கு முன் அங்கிருந்து மன்னார் தேவன்பிட்டி புனித சவேரியார் தேவாலயத்திற்கு (மன்னார் பூநகரி வீதியில்) எடுத்துச் செல்லப்பட்டு நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை மன்னார் நகருக்கு எடுத்துவரப்பட்ட நிலையிலேயே தற்போது மடு தேவாலயப் பகுதியில் பொலிஸ் நிலையமொன்றைத் திறப்பது குறித்து அரசு ஆலோசித்துள்ளது.

எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் மடு தேவாலய உற்சவம் தொடங்குவதற்கு முன்னர் அங்கு பொலிஸ் நிலையமொன்றை அமைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் நிலையமொன்றை அமைப்பதற்கு தேவையான கட்டிடம் மற்றும் அதிகாரிகள் ஏற்கனவே தெரிவுசெய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அமைச்சர் ஆறுமுகம் தொண்டமான் இருக்கும்வரை இ.தொ.கா.வை எவராலும் அழிக்க முடியாது

கேகாலை மாவட்டத்தில் தனித்துப் போட்டியிட முடியாதவர்கள் கொழும்பில் இருந்து கொண்டு இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸுக்கு எதிராக அறிக்கைவிட்டு அரசியல் நடத்துகின்றனர் என கேகாலை மாவட்டத்தில் இ.தொ.கா. சார்பில் போட்டியிடும் முதன்மை வேட்பாளர் பெருஸ் பாருக் தெரிவித்தார்.

எட்டியாந்தோட்டை இ.தொ.கா பணிமனையில் நடைபெற்ற தோட்டக் கமிட்டித் தலைவர்களின் கூட்டத்தில் உரையாற்றும்போது இவ்வாறு கூறினார். தொடர்ந்து பேசிய அவர் மேலும் கூறியதாவது; தனித்துப் போட்டியிட்டு வெல்ல முடியாது என்பதால்தான் இன்று இவர்கள் பெரும்பான்மை கட்சியுடன் இணைந்து போட்டியிடுகின்றனர். இவர்களால் வெற்றி பெற முடியாது.

இ.தொ.கா. தோட்டப்புற மக்களுக்கு செய்துவரும் சேவைகளை நாடே அறியும். கடந்த இரண்டு வருட காலத்தில் மட்டும் 3 கோடி ரூபாவுக்கு மேல் அபிவிருத்திப் பணிகளை இங்கு செய்துள்ளோம். கேகாலை மாவட்டத்தில் வாழும் தோட்டப் பகுதி மக்கள் இ.தொ.கா. மீது நம்பிக்கை வைத்துள்ளனர். தோட்டப்புற மக்களின் குறைபாடுகளை கேட்டறிந்து அதனை நிறைவேற்றி வைத்துள்ளோம். அதனால்தான் நாம் எந்தக் கட்சியுடனும் சேராமல் தனித்துப் போட்டியிடுகின்றோம்.

எதிர்வரும் சப்ரகமுவ மாகாண சபைத் தேர்தலில் இ.தொ.கா. மூன்று உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுவார்கள். இதனைச் சகிக்க முடியாதவர்கள் தான் இன்று எமது பலத்தைக் கண்டு அஞ்சி போலிப் பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றனர். அமைச்சர் ஆறுமுகம் தொண்டமான் இ.தொ.கா.வின் தலைவராக இருக்கும்வரையும் அதனை எவராலும் அழிக்க முடியாது. அப்படியாக இ.தொ.கா.வை அழிக்க நினைக்கும் அரசியல் கட்சிகளும் அழிந்துவிடும்.

அமைச்சர் ஆறுமுகம் தொண்டமானின் கரங்களை வலுப்படுத்த எதிர்வரும் சப்ரகமுவ மாகாண சபைத் தேர்தலில் எமக்கு வாக்களித்து வெற்றிபெறச்செய்யுங்கள் என்றார். இக்கூட்டத்தில் இ.தொ.கா. வேட்பாளர்களான ஜி.ஜெகநாதன், செ.ரவிக்குமார் ஆகியோரும் உரையாற்றினார்கள்.

ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவராக ரணில் விக்கிரமசிங்க தலைவராக இருக்கும்வரை ஐ.தே.க. வால் ஆட்சியை ஒருபோதும் பிடிக்கமுடியாது'

ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவராக ரணில் விக்கிரமசிங்க இருக்கும் வரையும் அக்கட்சியால் ஒருபோதும் நாட்டின் ஆட்சியை பிடிக்கமுடியாது என்று ஐக்கிய தேசியக்கட்சியின் முன்னாள் மாகாணசபை உறுப்பினர் பி.வை. ஹேமச்சந்திர தெரிவித்தார்.
தெரணியகலை கட்டுவத்த என்ற இடத்தில் நடைபெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் தேர்தல் பிரசாரக்கூட்டத்தில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார்.

சப்ரகமுவ மாகாண சபையில் ஐக்கிய தேசியக்கட்சி உறுப்பினராக இருந்த இவர் தற்போது ஆளும் கட்சி சார்பில் இம்முறை தேர்தலில் போட்டியிடுகின்றார்.

தொடர்ந்து பேசிய அவர்;

ரணில் விக்கிரமசிங்க ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவராக இருப்பதால் தான் பலர் அக்கட்சியை விட்டு வெளியேறி அரசுடன் இணைந்துள்ளனர் அவர் முதுகெலும்பில்லாதவர். அவர் தலைவருக்கு பொருத்தமானவர் அல்ல.

கிழக்கு மாகாணத்தில் இன்று ஜனாதிபதி ஜனநாயகத்தை ஏற்படுத்தியுள்ளார். அங்கு தேர்தல் நடத்தப்பட்டது. அதேபோல வடபகுதியிலும் விரைவில் நடக்கும். ஜனாதிபதிக்கு நாம் முழு ஆதரவை வழங்கவேண்டும். யுத்தத்துக்கும் விரைவில் முற்றுப்புள்ளி வைக்கப்படும்.

மாகாண சபையின் மூலம் பல்வேறு அபிவிருத்தி வேலைகளை நாம் செய்ய வேண்டும். இந்த தேர்தலில் நாமே வெற்றிபெறுவோம். ஐக்கிய தேசியக்கட்சி மாகாண சபைத்தேர்தலில் வெற்றிபெறாது என்றார்.

 கச்சதீவுக்கு 700 படகுகளில் சென்ற இந்திய மீனவர்களை திருப்பிய இலங்கை கடற்படை தெரிவிக்கப்பட்டுள்ளது.

கச்சதீவுப் பகுதிக்கு மீன்பிடிக்கச் சென்ற தமிழக மீனவர்களுக்கு இலங்கை கடற்படையினர் அனுமதி வழங்கவில்லையெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த பல நாட்களுக்குப் பின்னர் கச்சதீவுப் பகுதிக்குச் சுமார் 700 படகுகளில் சென்ற தமிழக மீனவர்களுக்கு இலங்கைக் கடற்படையினர் மீன்பிடிக்க அனுமதிக்கவில்லையென தமிழக மீனவர்கள் முறையிட்டுள்ளனர்.

கடலுக்குச் சென்ற தம்மை இலங்கைக் கடற்படையினர் மீன்பிடியில் ஈடுபடவேண்டாமென அச்சுறுத்தியதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து, தாம் குறைந்தளவு மீன்களை மாத்திரமே எடுத்துக்கொண்டு கரை திரும்பியதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக, இராமநாதபுரம் பகுதியிலிருந்து கடலுக்கு சென்ற மீனவர்களுக்கே இந்த நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, கடலுக்குச் சென்ற 9 மீனவர்கள் நேற்று முன்தினம் இரவு 7 மணி வரை கரை திரும்பவில்லை என்றும் மற்றும் ஒரு முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கு இந்தியா உதவுவது சகலரும் அறிந்தவிடயம் மன்மோகன்சிங் அரசின் வெற்றி கொழும்புக்கு பக்கபலம் அமைச்சர் மைத்திரிபால சிறிசேன

இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் பெரும்பான்மையை நிரூபித்து வெற்றியடைந்தமை இலங்கைக்கு பலமாக அமையுமென அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் நேற்று நடந்த செய்தியாளர் மாநாட்டிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது;

இலங்கையின் பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கைக்கு இந்தியா உதவி வருவது அனைவருக்கும் தெரிந்த விடயம். இதில் எந்த விதமான ஒழிவுமறைவும் இல்லை. இந்த நிலையில் இந்திய அரசு பெரும்பான்மையை நிரூபித்து தனது பலத்தை நிலைநாட்டியுள்ளதன் மூலம் இலங்கையரசு முன்னெடுத்துள்ள பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் எவ்வித பாதிப்பும் ஏற்படாது.

இந்திய பாராளுமன்றத்தில் நடைபெற்ற மன்மோகன் சிங் அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பை புலிகள் நன்கு அவதானித்துக் கொண்டிருந்தனர். அங்கு மன்மோகன்சிங் அரசு கவிழும் அதன் மூலம் தமக்கு சாதகமான நிலை ஏற்படும். உயிரிழந்து கொண்டிருக்கும் தமது உறுப்பினர்களை காப்பாற்றலாம் என நினைத்திருப்பார்கள்.

ஆனால் மன்மோகன்சிங் அரசு வெற்றி பெற்றமை இலங்கை அரசுக்கு பலமாக அமைந்துவிட்டது. சர்வதேசத்தின் ஒத்துழைப்பு இலங்கையரசுக்கு கிடைப்பதை புலிகள் ஒருபோதும் விரும்பமாட்டார்கள்.

<<முன்னைய பதிவுகள்>>

யூலை 1983: வெலிக்கடை படுகொலைகளும் தமிழின அழித்தொழிப்பும் அந்த நாட்களில் எங்கள் தேசத்தின் தெருக்களிலெல்லாம் தமிழர்களின் குருதி வடிந்தது.அனைவரும் வருக! எதிர்வரும் யூலை 27ஆவது நாள் நாம் பேசியே ஆகவேண்டிய நாள்! (மேலும்)
தமிழ் சஞ்சிகைள்
தமிழ்ஓசை

தினக்குரல்

வீரகேசரி

நமது ஈழநாடு
விகடன்
அம்பலம்
சுடர் ஒளி
ஈழமுரச
குமுதம்
தினகரன்
தினத்தந்தி
விடுதலை
தினபூமி
தினமணி
மாலைச்சுடர்
தினமலர்
மாலைமலர்
எரிமலை
நக்கீரன்
English
Good Srilanka
Tamilnet
LTTE Peace Secretariat
msnbc
yahoo
google
BBC
CNN
Tamilcanadian
ndtv
Tamilguardian
Lankapage
Worldnews

பதிவுகள்

சுவிட்சலாந்து நாட்டில் இடம்பெற்ற புளொட் வீரமக்கள் தின நிகழ்வு.05.06.2008.(படம் இணைப்பு)

பாதுகாப்பு படையினர் யாழ் குடாநாட்டில் உள்ள 50 பாடசாலைகளுக்கு கணனிகள் அன்பளிப்பு (படம் இணைப்பு)

மஹிந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பட்டமளிப்பு விழா  11.07.2008(படம் இணைப்பு)

குடாநாட்டில் பொருட்களின் விலையை குறைப்பது தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் தலைமையில் உயர் மாநாடு 11.07.2008(படம் இணைப்பு)

மனித உரிமைவாதியும் சட்டத்தரணியுமான செல்வி மகேஸ்வரி வேலாயுதம் அவர்களின் வாழ்வையும் சேவையினையும் நினைவுகூரும் பொதுக்கூட்டம் லண்டன்.13.07.2008.(படம் இணைப்பு)

 

        Last update: 20-06-2008. Desigin and Copyright