<%@ Language=JavaScript %> Welcome. !

 E-mail:enngal@gmail.com

தமக்குத் தீமையைச் செய்தவருக்கும், தாம் பதிலுக்குத் தீமை செய்யாது மன்னித்து விடுவதை, அறிவினுள் எல்லாம் சிறந்த அறிவு என்பார்கள்.

அதிகரித்து வரும் வயோதிபர்களது விகிதாசாரத்திற்கு முகங்கொடுக்க நாம் தயாராக வேண்டும்! அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரை நிகழ்த்தும்போது.

 
செய்தி் புதுப்பிக்கப்பட்ட நாள்:06 அக்டோபர், 2008

* தமிழ்  சினிமா*

*ஜோ‌திட‌ வார பலன்*

 

அதிகரித்து வரும் வயோதிபர்களது விகிதாசாரத்திற்கு முகங்கொடுக்க நாம் தயாராக வேண்டும்! அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரை நிகழ்த்தும்போது.

உலகில் உள்ள அனைத்து சிறிய பெரிய நாடுகளிலும் வயோதிபர்களது ஜனத்தொகை அதிகரித்து வருகின்றமையைக் காணக்கூடியதாகவுள்ள இக்கால கட்டத்தில் '21ம் நூற்றாண்டில் வயோதிப பருவத்தின் சவால்களுக்கு முகங்கொடுத்தல்' என்ற தொனிப்பொருளின் கீழ் இவ்வருட சர்வதேச வயோதிபர்களுக்கான தினம் அனுஷ்டிக்கப்படுவது காலத்தின் சிறந்த செயலாகுமென சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார்.

சர்வதேச வயோதிபர்களது தினத்தையொட்டி இன்றைய தினம் (6.10.2008) காலை 9.00 மணிக்கு கொழும்பு, சுவசிறிபாயவில் இடம்பெற்ற வைபவத்தில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரை நிகழ்த்தும்போது அமைச்சர் அவர்கள் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன் போது மேலும் கருத்துத் தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள், ஜனத்தொகையில் வயதெல்லைகளின் வேகமான வளர்ச்சி காரணமாக முங்கொடுக்க வேண்டிய சமூக மற்றும் பொருளாதார நன்மை, தீமைகளைக் கவனத்தில் கொண்டு வயோதிபர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் தேவையான நலன்புரி வசதிகளை வழங்குவதற்கான கொள்கையை வகுப்பது மற்றும் வேலைத்திட்டங்கiளை முன்னெடுத்துச் செல்வதற்கு உந்து சக்தி வழங்குவது போன்ற செயற்பாடுகளை மேற்கொள்ள அரசுக்கு நேரிட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.

சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சின் மூலம் நாட்டின் சிரேஷ்ட பிரஜைகளுக்காக மேற்கொள்ளப்பட்டு வருகின்ற பல்வேறு பணிகள் குறித்து தெளிவுபடுத்திய சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மேன்மை தங்கிய ஜனாதிபதி அவர்களது மஹிந்த சிந்தனையில் சிரேஷ்ட பிரஜைகளுக்கென குறிப்பிடப்பட்டுள்ள, விஷேட அவதானம் செலுத்தப்படக் கூடிய பல்வேறு வசதிகள் தற்போது செயற்படுத்தப்பட்டு வருகின்றன என்றும் இதன் பிரகாரம் வயோதிபர்களது ஓய்வூதியம் தொடர்பான முறைகேடுகள் சீர்செய்யப்பட்டுள்துடன் 70 வயதுக்குக் கூடிய வயோதிபர்களுக்கு பொதுபோக்குவரத்துக் கட்டணங்களில் 50 வீதத்தை மாத்திரமே அறவிடுவதற்கும், வருடந்தோறும் புண்ணிய ஸ்தலங்களைத் தரிசிக்கச் செல்வதற்கு இலவசமாக புகையிரத பயணச் சீட்டு வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.

அதிகரித்து வரும் வயோதிபர்களது விகிதாசாரத்தை மனதில் கொண்டு அதற்கு முகங்கொடுக்கக் கூடிய வகையிலான பல்வேறு நடவடிக்கைகளை தனது அமைச்சு மேற்கொண்டு வருவதாகவும் அமைச்சர் அவர்கள் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்தாகும்.

மேற்படி வைபவத்தில் அமைச்சின் செயலாளர் திருமதி வி. ஜெகராசசிங்கம், மேலதிகச் செயலாளர் செல்வி யமுனா சித்திராங்கனி, சட்ட உதவி ஆணைக்குழுவின் தலைவர், எஸ்.எஸ். விஜேரத்ன, அரச சார்பற்ற நிறுவனங்களின் ஒன்றியத்தின் தலைவி திருமதி மானல் அபேசேக்கர சுகாதார மற்றும் போஷனை அமைச்சின் இளைஞர், வயோதிபர் மற்றும் அங்கவீனமான நபர்களுக்கான பிரிவின் பணிப்பாளர் மருத்துவர் தீப்தி பெரேரா, UNU/ UNDP அமைப்பின் நிகழ்ச்சித் திட்டப் முகாமையாளர் இக்னஷியோ இம்மானுவெல் சபின்ஷா உட்பட பலர் உரையாற்றினர்.

<<முன்னைய பதிவுகள்>>

 

 

 
 

 

இலங்கை சகலருக்கும் உரிய நாடு இதனை பேரினவாதிகள் முழு உரிமை கொண்டாடுவதை அனுமதிக்க முடியாது.அதேபோன்று எல்.ரீ.ரீ.ஈ.யினரின் பயங்கரவாத்தால் துண்டாடப்படுவதையும் அங்கீகரிக்க முடியாது.
 

 

சமூகத்தில் பல்வேறு அரசியல் கருத்துகளைக் கொண்ட போக்குள்ள குழுக்கள் அவதூறுகளுக்குப் பெயர் கருத்துச் சுதந்திரமல்ல.
 

 

வன்னியில் மக்கள் படட்டினிச்சாவில் இது தான் புலம்பெயர் புலிகளின் தமிழ்மக்கள் மீதான பற்று உடையிறது தேங்கை மட்டுமல்ல எங்கிட தமிழருடைய வாழ்வும்தான்.(படங்கள் இணைப்பு)
 

 

இலங்கைக்கான கொரிய தூதுவருடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சந்திப்பு ஒன்று இன்று இடம்பெற்றுள்ளது.(படங்கள் இணைப்பு)
 

 

ரி.எம்.வி.பியின் தலைவர் கருணா அம்மான் -ஈபிடிபியின் செயலாளர் நாயகம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சந்திப்பு.(படங்கள் இணைப்பு)
 

 

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் வட பகுதி மாணவர்கள் பாராளுமன்றத்தை சென்று பார்வையிட்டனர்.(படங்கள் இணைப்பு)
 

Welcome. to Visit.angaltheaasam.com ..!

 

Last update: 20-06-2008. Desigin and Copyright