<%@ Language=JavaScript %> Welcome. !

 E-mail:enngal@gmail.com

தமக்குத் தீமையைச் செய்தவருக்கும், தாம் பதிலுக்குத் தீமை செய்யாது மன்னித்து விடுவதை, அறிவினுள் எல்லாம் சிறந்த அறிவு என்பார்கள்.

மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நடைபெற்ற வாராந்த அமைச்சரவை கூட்டத்தில் கிழக்கு மாகாண முதலமைச்சரும் பங்கேற்பு. வெலிக்கந்தையிலுள்ள ரி.எம்.வி.பி காரியாலயத்தில் விஷேட கருத்தரங்கு ஒன்று நேற்று தலைவர் கருணா அம்மான் பங்கு கொண்டு இருந்தார்.

 
செய்தி் புதுப்பிக்கப்பட்ட நாள்:04 அக்டோபர், 2008

* தமிழ்  சினிமா*

*ஜோ‌திட‌ வார பலன்*

 

மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நடைபெற்ற வாராந்த அமைச்சரவை கூட்டத்தில் கிழக்கு மாகாண முதலமைச்சரும் பங்கேற்பு.

Image மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நடைபெற்ற வாராந்த அமைச்சரவைக்கூட்டத்தில் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) பங்குபற்றியுள்ளார். வாராந்த அமைச்சரவைக்கூட்டம் அலரிமாளிகையில் நேற்று முன்தினம் நடைபெற்றது.

அமைச்சரவைக்கூட்டத்தில் மாகாண அபிவிருத்தி தொடர்பாக கலந்துரையாடப்படுகின்ற போது மாகாண முதலமைச்சர்களின் பங்கேற்பும் அவசியமானது என்று ஜனாதிபதி வழங்கிய தீர்மானத்திற்கு அமைவாகவே கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுறை சந்திரகாந்தன் இந்த கூட்டத்தில் பங்கேற்றார். வாரந்த அமைச்சரவைக்கூட்டத்தில் ஏனைய மாகாண சபைகளின் முதலமைச்சர்களும் பங்கேற்றுள்ளனர். எனினும் கிழக்கு மாகாணத்தை சேர்ந்த முதலமைச்சர் ஒருவர் அமைச்சரவைக்கூட்டத்தில் பங்கேற்றுள்ளமை இதுவே முதற்தடவையாகும். மாகாண சபைத்தேர்தல் முறையை மறுசீரமைத்தல் தொடர்பில் அமைச்சரவைக்கூட்டத்தில் ஆராயப்படவிருந்த போதிலும் அது தொடர்பில் கலந்துரையாடலை இரண்டு வாரத்திற்கு பின்னர் மேற்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் ஜனக்க பண்டார தென்னக்கோனால் கொண்டுவரப்பட்ட மாகாண சபைத்தேர்தல் முறைமையில் மாற்றங்களை ஏற்படுத்துவதற்கான யோசனைக்கு மேலும் சில யோசனைகள் கிடைத்துள்ளமையினாலேயே இது தொடர்பில் இரண்டு வாரத்திற்கு பின்னர் கலந்துரையாடுவதற்கு தீர்மானிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

வெலிக்கந்தையிலுள்ள ரி.எம்.வி.பி காரியாலயத்தில் விஷேட கருத்தரங்கு ஒன்று நேற்று தலைவர் கருணா அம்மான் பங்கு கொண்டு இருந்தார்.

வெலிக்கந்தையிலுள்ள ரி.எம்.வி.பி காரியாலயத்தில் விஷேட கருத்தரங்கு ஒன்று நேற்று (02.10.2008) காலை 10 மணியளவில் இடம்பெற்றது. இக்கருத்தரங்கில் பங்கு கொண்ட அதன் தலைவர் கருணா அம்மான் ரி.எம்.வி.பி. உறுப்பினர்கள் எவ்வாறான அரசியல் பார்வை கொண்டவர்களாக வளர வேண்டும்? அவர்கள் மீது தமிழ் சமூகம் சுமத்தியிருக்கின்ற அரசியல் சுமைகள் என்ன? அவற்றை எவ்வாறு ரி.எம்.வி.பி. கையாள வேண்டும்? அடிமட்ட உறுப்பினர்களில் இருந்து மேல் மட்ட தலைமைகள் வரை மக்களை அணுக வேண்டிய வழி முறைகள் என்ன? அவர்கள் எவ்வாறு எமது சமூகத்தில் உள்ள சகல தரப்பினரையும் மதிப்பளித்து பழக வேண்டும்? சமூகத்தில் எவ்வகையான ஓழுக்கக் கோட்பாடுகளை பின்பற்ற வேண்டும்? போன்ற அதி முக்கிய சமூக, அரசியல் விடயங்கள் குறித்து விளக்கி இருந்தார்.

அமைப்பின் சகல மட்டத்தினருடைய கருத்துக்களும் அனைத்து போராளிகளையும் சென்றடையும் முகமாக ஏற்பாடாகி இருந்த அந்த கருத்து பரிமாற்ற நிகழ்வில் பல போராளிகளும் பொறுப்பாளர்களும் உரையாற்றினர் இக் கருத்தரங்கில் ரி.எம்.வி.பி.யின் மேல்நிலைத் தலைவர்களான ஜெயம், மார்க்கன், சின்னத்தம்பி, இனியபாரதி, ஜீவேந்திரன், ரஞ்சன், இளங்கீதன், வீரா, பிரதீப் மாஸ்ரர் ஆகியோர் உட்பட்ட பிரதேச பொறுப்பாளர்கள் போராளிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

<<முன்னைய பதிவுகள்>>

Last update: 20-06-2008. Desigin and Copyright