<%@ Language=JavaScript %> Welcome. !

 E-mail:enngal@gmail.com

தமக்குத் தீமையைச் செய்தவருக்கும், தாம் பதிலுக்குத் தீமை செய்யாது மன்னித்து விடுவதை, அறிவினுள் எல்லாம் சிறந்த அறிவு என்பார்கள்.

இலங்கை சகலருக்கும் உரிய நாடு. இதனை பேரினவாதிகள் முழு உரிமை கொண்டாடுவதை அனுமதிக்க முடியாது.அதேபோன்று எல்.ரீ.ரீ.ஈ.யினரின் பயங்கரவாத்தால்   துண்டாடப்படுவதையும் அங்கீகரிக்க முடியாது.

 
செய்தி் புதுப்பிக்கப்பட்ட நாள்:03 அக்டோபர், 2008

* தமிழ்  சினிமா*

*ஜோ‌திட‌ வார பலன்*

 

இலங்கை சகலருக்கும் உரிய நாடு. இதனை பேரினவாதிகள் முழு உரிமை கொண்டாடுவதை அனுமதிக்க முடியாது.அதேபோன்று எல்.ரீ.ரீ.ஈ.யினரின் பயங்கரவாத்தால்   துண்டாடப்படுவதையும் அங்கீகரிக்க முடியாது.

வன்னி பெருநிலப்பரப்பில் அரச படையினருக்கும் விடுதலைப்புலிகளுக்குமிடையில் இடம்பெற்றுவரும் கடும் மோதல்களால் பல்லாயிரக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்து அகதிகளாகியுள்ளர்;

இந்த மக்களின் சுகாதாரلل பொருளாதார பாதுகாப்பு விடயங்கள் தொடர்பாக மனித உரிமைகளுக்கான அமைப்புக்கள் ஆழ்ந்த கவலை தெரிவித்துள்ளன.

மன்னார் கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களைச் சேர்ந்த அப்பாவிப் பொதுமக்கள் தமது சொந்த இடங்களிலிருந்து இடம்பெயர்ந்துள்ளனர் அன்றாடம் இவர்கள் சொல்லொனாத் துயரங்களை அனுபவிக்கின்றனர்.

இடம்பெயர்ந்த மக்கள் தொடர்பான சரியான மதிப்பீடுகளை மேற்கொண்டு அவர்களின் உணவுلل தங்குமிடம் சுகாதாரத் தேவைகள் தொடர்பான பிரச்சினைகளுக்குத்; தீர்வு காண அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

படையினருக்கும் புலிகளுக்கும் இடையில் இடையிலான மோதல்கள் உச்ச கட்டத்தை  அடைந்துள்ள நிலையில் தமது பாதுகாப்புக்காக பொது மக்களை புலிகள் மனித கேடயங்களாகத் தடுத்து வைத்துள்ளனர் பதுங்கு குழிகளைத் தோண்டி அதற்குள் முடங்கிக்கொள்ளுமாறும் வற்புறுத்துகின்றனர்.

தமிழ் மக்களை பாதுகாப்போம் என்று கூறியவர்களை இன்று அந்த அப்பாவி மக்கள் காப்பாற்ற வேண்டிய பரிதாப நிலை ஏற்படடுள்ளது.

ஆனால் வன்னிப் பிரதேசத்தில் புலிகளின் பிடியில் சிக்கியுள்ள தமிழ் மக்கள் அரச கட்டுப்பாட்டுப் பிரதேசத்துக்கு வருவதற்கான சகல வசதிகளையும் செய்து கொடுக்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ படையினருக்கு உத்தரவிட்டுள்ளார். அத்துடன் இடம் பெயர்ந்துள்ள மக்கள் படையினரால் திறக்கப்பட்டுள்ள பாதைகள் மூலமாக அரச காட்டுப்பாட்டுப் பிரதேசத்துக்குள் வரவேண்டும் என்நும் கோரிக்கை விடுத்துள்ளார்.

தம்மைப் பாதுகாத்துக்கொள்வதற்னாக இடம் பெயாந்த அப்பாவி மக்களை புலிகள் மனிதக்கேடயங்களாக வைத்திருப்பது கண்டிக்கத்தக்கதாகும். மோதல் நடவடிக்கைகளில் சிறுவர் பெண்கள்لل முதியவர்களைப் பயன்படுத்துவது மனித உரிமை மீறலென ஐ.நா.வின் மனித உரிமைகள் சட்டத்தில் தெளிவாக அடையாளம் காணப்பட்டுள்ளது.

பொது மக்கள்; ஓரிடத்தில் இருந்து தாம் விரும்பிய இன்னொரு இடத்திற்கு செல்வதற்கு சகல தருணங்களிலும் முழுச் சுதந்திரமும் வழங்கப்பட வேண்டும் என்று எல்.ரீ.ரீ.ஈ இயக்கத்திடமும் அரசாங்கத்திடமும் இலங்கையில் உள்ள ஐக்கிய நாடுகள் அலுவலகம் அவசர கோரிக்கை விடுத்துள்ளது.

அதேவேளை வன்னிப் பிராந்திய நெருக்கடிகளால் பாதிக்கப்பட்டிருக்கும் பொது மக்கள் ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு சுதந்திரமாக நகர்வதற்கு வழிவகுக்கும் நோக்கில் விசேட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாக இலங்கை அரசாங்கம் விடுத்துள்ள அறிவித்தலை இலங்கைக்கான ஐக்கிய நாடுகளின் காரியாலயம் அங்கீகரித்துள்ளது.

வன்னியில் தங்கியிருப்போருக்கும் வன்னியில் இருந்து வெளியேறுவோருக்கும் மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்காக அரசாங்கம் மேற்கொள்ளும் முயற்சிகளுக்குத் துணை புரிய ஐக்கிய நாடுகள் முழுவதுமாக திடசங்கற்பம் பூண்டுள்ளது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பயங்கரவாதிகளின் பிடியில் இருந்து கிழக்கை மீட்டதுபோல் வடக்கையும் மீட்பதில் அரசாங்கம் உறுதியுடன் செயற்படுகின்றது.

படையினரால் மேற்கொள்ளப்பட்டுவரும் இந்த மனிதாபிமான நடவடிக்கைகள் வெறிகரமான முன்னெடு;க்கப்பட்டு வருகின்றன. பொது மக்களைப் பாதுகாத்துக் கொண்டு படையினர் நிதானமாக முன்னேறிவருகின்றனர்.

கிளிநொச்சியில் புலிகளால் பலவந்தமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள மக்களை மீட்டெடுத்து அவர்களுக்குத் தேவையான சகல அடிப்படை வசதிகளையும் வழங்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

பயங்கரவாதிகளின் பிடியில் இருந்து வன்னியை விடுவிப்பது மட்டும்தான் படையினரின் பணியல்ல. இந்த நாட்டில் இருந்து எல்.ரீ.ரீ.ஈ. யினரின் பயங்கரவாத நடவடிக்கைகளை முற்று முழுதாகத் துடைத்தெறிவது அவர்களின் கடமையாகும்;. அதற்கான திட்டம் வகுக்கப்பட்டுள்ளது என இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

இலங்கை சகலருக்கும் உரிய நாடு. இதனை பேரினவாதிகள் முழு உரிமை கொண்டாடுவதை அனுமதிக்க முடிhயது. அதேபோன்று குழுக்களால் துண்டாடப்படுவதையும் அங்கீகரிக்க முடியாது. இங்கு சகலரும் சகல உரிமையும் பெற்றவர்களாக அமைதியுடனும் ஒற்றுமையுடனும் வாழக்கூடிய ஆரேக்கியமான சூழல் உருவாக்கப்படுவது அவசியம்!

எம்.ஜே.எம். தாஜுதீன்
05.09.2008

<<முன்னைய பதிவுகள்>>

Last update: 20-06-2008. Desigin and Copyright