|
புலிகளின் நிர்வாக
இதயமாகக் கருதப்படும் கிளிநொச்சி நகரை
நோக்கி 57வது படைப்பிரிவினர்
அக்கராயன்குளம் கிழக்கிலிருந்து நேற்று
முதல் முன்நேறத் தொடங்கியுள்ளனர்.
களமுனைகளில் இருந்து கிடைக்கும்
செய்திகளின் படி படையினரின்
முன்னரங்குகளை அக்கராயன் குளம்
கிழக்கிலிருந்து 01 கி.மீ. வடக்காக
முன்னேறியுள்ளனர். இம் முன்நேற்றத்தின்
போது ஏற்பட்ட மோதலில் இரன்டு படையினர்
உயிர்த்தியாகம் செய்துள்ளதுடன் 07
படையினர் காயமடைந்துள்ளனர். பின்பு
படையினர் நடத்திய தேடுதல்
நடவடிக்கையின் போது புலிகளின் 04
சடலங்கள், இரன்டு ரி 56 ரக
துப்பாக்கிகள், ஒரு மெசின்
துவக்கு(எம்.பி.எம்.ஜி) மற்றும் தொலைத்
தொடர்புசாதனங்களும் கன்டுபிடிக்கப்
பட்டுள்ளன.
இதன்போது 57 வது படைப்பிரிவின் மற்றய
பிரிவினர் பனிக்கன் குளத்திலும்
மான்குளத்துக்கு வடமேற்காகவும்
அமைந்துள்ள புலிகளின் பல நிலைகளைத்
இன்று காலை தாக்கிய போது08
பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர்.
மேலும் கிளிநொச்சி முன்னரங்கில் அரை
மேற்க்காக நிலை கொன்டிருக்கும் விசேட
அலுவல்கள் படைப்பிரிவு 1(Task Force)
வன்னேரிக்குளத்துக்கு கிழக்காக
தாக்கியதில் 06 பயங்கரவாதிகள்
பலியாகியுள்ளதாகவும் 06பேர்
காயமடைந்துள்ளதையும் அவர்களின் தொடர்பு
சாதனத்தை ஒத்துக்கேட்ட போது
தெரியவந்துள்ளது. இத்தாக்குதலில் 04
படையினர் காயமடைந்துள்ளனர்
மற்றும் இன்று பி.ப. வன்னேரிக்குள
முன்னரங்கில் நிலை கொன்டிருக்கும் குறி
பார்த்துச் சுடும் அனியினால் இரு
புலிகள் கொல்லப்பட்டுள்ளனர். |