|
அமைச்சர் டக்ளஸ்
தேவானந்தாவுடன் வட பகுதி மாணவர்கள்
பாராளுமன்றத்தை சென்று பார்வையிட்டனர்.
வட
பகுதியிலிருந்து தேசிய மட்ட
மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டிகளில்
கலந்து கொள்ள கொழும்பு வந்திருந்த
மாணவர்கள் ஈபிடிபியின் செயலாளர்
நாயகமும், சமூக சேவைகள் மற்றும்
சமூகநலத்துறை அமைச்சரும், வடமாகாண
விசேட செயலணியின் தலைவருமான டக்ளஸ்
தேவானந்தா அவர்களுடன் சென்று
பாராளுமன்றத்தை பார்வையிட்டனர்.
மேற்படி மாணவர்கள் நேற்றைய தினம்
கொழும்பிலுள்ள இலங்கை ரூபவாகினிக்
கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை
ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்
என்பவற்றையும் சென்று
பார்வையிட்டிருந்தனர். இதன்போதும்
அமைச்சர் அவர்கள் மாணவர்களுடன்
சென்றிருந்தமையும் இங்கு
குறிப்பிடத்தக்கது.



 |